பயிற்சி மற்றும் சேமிப்பு மூலம் பெண்களின் மேம்பாடு வசதிகள் மற்றும் உடைமைகள் 
              (RCT) அறக்கட்டளை மூலம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி, மேற்பார்வையிட்டு வங்கி கடன் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. பயிற்சி, ஆலோசனை மற்றும் தன்னிறைவு அடைதல் ஆகியவற்றின் மூலம் சுய தொழில் முனைவோரின் முயற்சிக்கு அறக்கட்டளை ஆதரவாக இருக்கின்றது. உணவு பதப்படுத்துதல், அடுமனை, திண்படகம், தயார் நிலை உணவு, ஊட்டசத்து மிக்க துணை உணவு மற்றும் சிறுதானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றி; தொடர் திறன் மேம்படித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. 
            சிறந்த எதிர்காலத்திற்கான சேமிப்பு 
              இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் நலிந்த பொருளாதரர்களுக்கான 'புதிய ஜீவன் மங்கள்' என்கின்ற குறு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். RCT அறகட்டளை LIC யுடன் இணைந்து கிராமப்புற பெண்களிடையே சுறு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 
              வசதிகள் மற்றும் உடைமைகள் 
              RCT அறக்கட்டளையில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் FSSAI சான்றிதழ் பெற்றுள்ளதால் புதிதாக சிறிய அளவில் தொழில் முனைவோருக்கு பொருட்களின் தரம் மற்றும் நிர்ணயம் செய்து சந்தைபடுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். உற்பத்தி செய்யும் இடத்தில் குடிநீர் வசதி, மூன்று கட்ட மின் சுற்று, மாசில்லாத சுற்றுசூழல், முறையான கழிவு நீர் வெளியேற்றம் ஆகிய அடிப்படை வசதிகள் உள்ளன.
              
 
              உபகரணங்கள் 
            
              
                | எண் | 
                பணி | 
                உபகரணங்கள் | 
               
              
                | 1 | 
                பதப்படுத்தலுக்கான தேவையான உபகரணங்கள் | 
                பலபயன் கொண்ட அரவை மற்றும் கலப்பான், கனமான அடிபாகம் கொண்ட துரு ஏறா எக்கு பாத்திரங்கள் | 
               
              
                | 2 | 
                சேமிப்பு உபகரணங்கள்   | 
                குளிர் சாதனப்பெட்டி, உப்புநீர் சேகரிக்கும் ஜாடிகள், உணவு தரம் கொண்ட கலன்கள் | 
               
              
                | 3 | 
                பொதியிடல் | 
                கை கொண்டு பொதியிடும்/ அடைக்கும் உபகரணம் | 
               
              
                | 4 | 
                எடை கருவி | 
                3 முதல் 100 கிலோகிராம் எடை பார்ப்பதற்கான சிறிய மற்றும் எடை கருவிகள் | 
               
              
                | 5 | 
                பதப்படுத்துதல் | 
                வாயு அடுப்பு, நுண்ணலை அடுப்பு, அடுமணை அடுப்பு, அழுத்த சமையல்கலன், பொறிக்க வறுப்பதற்கான உபகரணங்கள் | 
               
             
               |