| 
               
                அறிகுறிகள்
              : 
                கந்தகச்சத்து குறைபாடு, பொதுவாக  காய்கறிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. தக்காளியில், செடிப்பகுதி வளர்ச்சி குறைந்து  வேர்ப்பகுதி வளர்ச்சி அதிகமாகும். குறைபாடு அதிகமானால், புரதச்சத்து செடியில் குறையும்.  மேல் இலைகள் இளம் மஞ்சள் நிறமாதல், நரம்பிடைய பகுதியில் உண்டாகிறது. இலைக்காம்புகள்  சிவப்பு நிறமாகும். சிறுத்த இலைகளும் கணு இடைவெளி குறைவதும் மற்ற அறிகுறிகளாகும். வெங்காயம்,  பூண்டு முதலியவற்றில் கந்தச்சத்து குறைந்தால் காரம் குறையும் இனிப்பு அதிகமாகும். 
                நிவர்த்தி :                
                1% கால்சியம் சல்பேட் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இலை மேல் தெளிக்கவும் அல்லது ஜிப்சம் ஒரு எக்டருக்கு 50 கிலோ என்ற அளவில் இடவும். 
                                 |