தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

 
தழைச்சத்து :
அறிகுறிகள் :

முழுச் செடியும் பச்சை நிறம் மாறி வெளிர் பச்சை  நிறமாகிறது. இளம் இலைகள் சிறிதாகவும் மெலிதாகவும் காணப்படும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு இலையின் அடிப்பக்கத்தில் உள்ள நரம்புகள் மாறும். தண்டு கடினமாக நார் பிடிப்புடனிருக்கும். பூ மொட்டுகள் மஞ்சள் நிறமடைந்து உதிர்ந்துவிடும். பழங்கள் உருவில் சிறுத்து இருக்கும்.

நிவர்த்தி :

இலை வழியாக 1% யூரியாவை வார இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.