தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

Manganese

அறிகுறிகள் :

இலைகள் சிறியதாதல், நரம்பிடைப் பகுதிகளில் ஆரஞ்சு நிற ஒழுங்கற்ற புள்ளிகள் இலை நுனிகளில் தோன்றி, பின் இலை முழுவதும் பரவும். நரம்புப் பகுதி பச்சையாக இருக்க, மற்ற பகுதிகள் மஞ்சள் நிறமடையும். மஞ்சள் நிறப் பகுதிகளில், பின்பு சிறு சிறு காய்ந்த பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பற்றாக்குறை அதிகமானால், செடியின் மேல் பாகம் சிறுத்து, பூக்களும் காய்களும் இல்லாமல் போய்விடும்.

நிவர்த்தி :

0.5% மேங்கனீஸ் சல்பேட் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.