அறிகுறிகள் : 
                செடியின் பெரும்பாலான இலைகளில்,  மெக்னீசியம் குறைபாடு தோன்றும். இலையின் நரம்புகளுக்கிடையே மஞ்சள் நிற அல்லது மஞ்சள்  கலந்த பச்சை நிறத்திட்டுகள்  தோன்றும். ஆனால்,  இலை ஒரங்கள் பச்சையாகவே இருக்கும். முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாகி, விரைவில் உதிர்ந்துவிடும்.  அடிப்பகுதியிலிருந்து நுனி நோக்கி நகரும். இலைகள் உடையும் தன்மையுடன், மேல் நோக்கி  வளையும். இலை நரம்புகள் பச்சை நிறத்துடனே இருக்கும். பழங்கள் பழுக்கும் பொழுது பற்றாக்குறை  அதிகமாகும். தண்டிலும் பழத்திலும் வித்தியாசம் தெரியாது. ஆனால், மெக்னீசியம் அதிகம்  குறைந்தால் பழங்கள் சிவப்பாக இல்லாமல் மஞ்சளாக இருக்கும். பழச்சதையில் வழவழப்புக் குறையும்.   
              நிவர்த்தி : 
              2% மக்னீசியம் சல்பேட் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்கவும் அல்லது டோலமைட் ஒரு எக்டருக்கு 2 டன் அல்லது மக்னீசியம் சல்பேட் ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இடவேண்டும்.  |