நெல்லில்  போரான் குறைபாடு  
போரான்  குறைபாடு பெரும்பாலும்  மணற்பாங்கான மண் வகைகளிலும்  மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கடலூர், கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில்  போரான் குறைபாடு தோன்றுகிறது. 
            அறிகுறிகள்  
            பயிர்கள்  வளர்ச்சி குன்றி காணப்படும். புதிதாக வெளிவரும் துளிர் இலைகளின் நுனிகள் வெளுத்து உள்நோக்கி  சுருண்டு காணப்படும். செடியின் முக்கிய தூர் வளராமல் பக்கத்து தூர்கள் வளரும். 
            நிவர்த்தி  
            எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் உரத்தை அடியுரமாக இட வேண்டும். அல்லது பயிர்களின் மீது போராக்ஸ் 0.2 சதம் (2 கிராம் / லிட்டர்) கரைசல் தெளிக்க வேண்டும்.  
     |