|             
           
           | 
            இரும்புச்சத்து  குறைபாடு 
கோவை, ஈரோடு, நீலகிரி,  இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம்  மாவட்டங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது. 
             மணற்பாங்கான நிலம்,  அங்ககப் பொருட்கள் மற்றும் கரிமம் குறைவாயுள்ள மண், மணிச்சத்து, சுண்ணாம்பு, தாமிரம்,  மாங்கனீசு, துத்தநாகம் அதிக அளவில் உள்ள மண், களர் உவர் மண் ஆகியவற்றிலும், காற்றோட்டம்  குறைந்த நிலத்திலும் இக்குறைபாடு தோன்றுகிறது. 
            குறைபாட்டின்  அறிகுறிகள் 
            இளம் தளிர்கள் வெளுத்து,  மஞ்சள் நிறமாக மாறிவிடும். ஆனால் இலை நரம்புகள் பசுமையாகத் தென்படும். செடிகள் வளர்ச்சி  குன்றிக் காணப்படும். 
            குறைபாட்டைக்  களையும் முறை 
            ஒரு சதம் (10 கிராம்  /லிட்டர்) அன்னபேதிக் கரைசலை பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை  இலை வழியே தெளிக்க வேண்டும் அல்லது எக்டருக்கு 25 கிலோ அன்னபேதி உப்பை அடியுரமாக இட  வேண்டும்.  |