தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Boron

அறிகுறிகள் :

கிளைகள் வளர்ச்சி குறைந்து, கணு இடைதூரம் குறைந்து, நுனி இலைகள் சிறுத்து, வெளிர் மஞ்சள் நிறமடைந்தும், இலையின் நடுப்பதி பழுப்பு நிறமாகி காய்ந்து உதிர்தல் போரான்சத்து பற்றாக்குறையில் அறிகுறிகளாகும். காய்கள் சிறுத்து கருப்பு நிறத்திட்டுகள் தோலில் காணப்படும். போரான்சத்து பற்றாக்குறையால் மகரந்தம் வீரியம் இழந்து பூக்கள் கருகுவது குறைகிறது. இதனால் காய்கள் எண்ணிக்கை குறையும்.

நிவர்த்தி :

நூறு லிட்டர் நீரில் 300 கிராம் போரிக் அமிலம் கலந்து பூப்பதற்கு முன்பு ஒரு முறையும் ஒரு மாதம் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மரத்திற்கு அரை கிலோ வீதம் போராக்ஸ் உரமிடுதல் வேண்டும்.