|                        
           
            
           மக்காச்சோளத்தில்  துத்தநாகச் சத்து பற்றாக்குறை  
          அறிகுறிகள்  
          
            - புதிதாக       முளைக்கும் இலைகள் மங்களான பச்சை நிறத்தில் தோன்றும்
 
            - பசுமை       சோகை முனைப்பாக அடிப்பகுதிகளில் தோன்றி நுனி வரையில் காணப்படும்
 
            - விளிம்புகளில்       சிவப்பு நிறக் கோடுகள் தெளிவாகத் தென்படும்
 
            - வெளிறிய       வெள்ளைத் திட்டுக்கள் இலையின் மேல் தோன்றும்
 
            - முதிர்ந்த       இலைகளில் மஞ்சள் நிறக் கீற்றுகள் இலையின் மேல் தோன்றும் அல்லது இலை நரம்புகளின்       இடையில் பசுமை சோகை கீற்றுகள் காணப்படும்
 
           
          நிவர்த்தி  
          துத்தநாக சல்பேட்  20-25 கிலோ ஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தநாக சல்பேட் 0.5 -ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும். 
   |