  | 
              அறிகுறிகள் : 
                உவர்  தன்மை அதிகமுள்ள, வடிகால் வசதியற்ற நிலங்களில் பயிரிடப்பட்ட திராட்சையில் மாங்கனீசுசத்து  பற்றாக்குறை ஏற்படலாம். இலைகளின் அனைத்து நரம்புகளும், நரம்புகளைச் சார்ந்த பகுதிகளும்,  பச்சை நிறமாகவே இருக்க, நரம்பிடைப்பட்ட பகுதிகள் வெளிர் பச்சை நிறமாகி பின் மஞ்சள்  நிறமாகிவிடும். துத்தநாகச்சத்து குறைபாடு இது போல் தென்பட்டாலும். மாங்கனழுசு குறைபாடு  அடி இலைகளிலும், துத்தநாகச்சத்து குறைபாடு மேல் இலைகளிலும் தோன்றுகின்றன. மாங்கீசு  குறைபாட்டால் இலைகள் சிறுத்துப் போவதோ உரக்குலைவதோ இல்லை. 
                நிவர்த்தி : 
                நூறு  லிட்டர் நீரில் 500 கிராம் மாங்கனீசு சல்பேட் கரைத்த கரைசலை இலைகள்நன்கு நனையும்படித்  தெளிக்க வேண்டும் 
                                   |