இரும்புச்சத்து குறைபாடு 
கோவை,  ஈரோடு, நீலகிரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கடலூர்  மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.  
             மணற்பாங்கான  நிலம், சுண்ணாம்பு அதிகம் கலந்துள்ள மண் வகைகளில் ஈரம்புச்சத்து பற்றாக்குறை தோன்றும்.  காற்றோட்டம் குறைந்த நிலத்திலும், களர், உவர் மண் வகைகளிலும் இக்குறைபாடு தோன்றும். 
             புதிதாகத்  தோன்றும் இலைகள் வெளிர் நிறமாகவும், பச்சையம் குறைந்தும், இலை நரம்பிடைப் பகுதி மஞ்சள்  நிறத்திலும், நரம்புகள் பச்சை நிறமாகவும் இருக்கும். அதிகப்பற்றகாக்குறையினால் நாளடைவில்  இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதை  ‘சோகை நோய்’ என்பார்கள். 
            குறைபாட்டைக் களையும் முறை 
            ஒரு  சதம் (10 கிராம்/லிட்டர்) அன்னபேதிக் கரைசலை பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை  இலை வழியாகத் தெளிக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 25 கிலோ அன்னபேதி உப்பை அடியுரமாகயிடலாம்.  |