தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை

 

தென்னையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகளின் ஒரம் மஞ்சள் நிறமாக மாறி நுனி மற்றும் இலை ஒரங்கள் கருகிக் காணப்படும்
  • இலையின் அடிப்பாகம் பச்சை நிறத்துடன் காணப்படும்
  • வளர்ச்சி குறைவாக இருக்கும். பூக்கும் பருவத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்.
  • சிறிய இலைகள் பின் நோக்கிக் காய்ந்துவிடும். இலை முனைகள் கருகி காணப்படும்.
  • இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற பிசின் போன்ற புள்ளிகள் தோன்றும்.
  • சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்.
  • பழங்கள் சிறுத்து காணப்படும். இலைகள் மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்திலும், திருகியும், சுருங்கியும், கொம்புகள் வலைந்தும் காணப்படும்.

நிவர்த்தி :

  • மரம் ஒன்றுக்கு வருடம் ஒருமுறை 2 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும்
  • 200 மில்லி பொட்டாஷ் கரைசலை (10 கிராம் லிட்டர்) வேர்மூலம் நான்கு மாத இடைவெளியில் செலுத்த வேண்டும்
  • முயூரேட் ஆப் பொட்டாஷ் (MOP) 2 கிலோ / மரம் / வருடம் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.