தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை

Phosphorus


தென்னையில் மணிச்சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள் :

மணிச்சத்து பல ஆண்டுகள் இடப்படாத நிலங்களில்கூட, தென்னையில் மகசூல் பாதிப்படையவில்லை. ஏனெனில், ஒரு ஆண்டில் 69 கிராம் மணிச்சத்து மட்டும்தான் தென்னை எடுத்துக்காள்கிறது. எனவே, மணிச்சத்து பற்றாக்குறை தென்னையில் ஏற்படுவதில்லை. குறைபாட்டையும் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை3

  • அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் தோன்றும்.
  • இலைகள் சிறியதாகவும், ஊதா அல்லது வெண்கல நிறத்திலும் நிறமாக்கம் காணப்படும்.
  • இலைகள் காய்ந்தும், காய்ந்த பகுதிகள் உதிர்ந்துவிடும்.

நிவர்த்தி :

சூப்பர் பாஸ்பேட் 1.5 - 2.0 கிலோ/மரம்/வருடம் மண்ணில் கலந்து இடவும்.