தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

 

அறிகுறிகள் :

ஆற்றுப்படுகையிலும், கடலோரங்களிலும், சுண்ணாம்புச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இளம் இலைகள் சிறுத்து. தடிமனாகி, இலை ஒரங்களும் நரம்பிடைப் பகுதிகளும் மஞ்சள் நிறமாகி, ஒரங்களில் பிசிறு பிசிறாக இரம்பம் போல் காணப்படும். புதிய இலைகள் வெளி வருவது தடுக்கப்படும். இலைகள் பிரியாமல், செடி இறந்து விடலாம் அல்லது, குலை தண்டைப் பிளந்துகொண்டு வெளி வரலாம். காய்களில் குளிர் காலத்தில் இதனால் வெடிப்புகள் ஏற்படலாம்.

வைரஸ் நோய் தாக்குதல், துத்தநாகச்சத்து குறைபாடு, போரான்சத்துக் குறைபாடு ஆகியவை, குருத்து இலைகளில் பெரும்பாலும் ஒரே மாதிரி விளைவுகளை ஏற்படுத்துவதால் குறைபாட்டின் சரியான காரணத்தை மண் மற்றும் இலையை ஆய்வு செய்தபின். உறுதி செய்ய வேண்டும்.

நிவர்த்தி :

சுண்ணாம்புச்சத்து குறைபாடு கண்டால் நூறு லிட்டருக்கு 300 கிராம் வீதம் கால்சியம் குளோரைடு கரைசலை, இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.