தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: பாக்கு

 

பாக்கில் தழைச் சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • செடிகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
  • முழு செடியிலும் முதிர்ச்சி இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
  • சில சமயங்களில் முதிர்ந்த இலைகள் மட்டுமல்லாது செடியில் உள்ள அனைத்து இலைகளும் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.
  • பற்றாக்குறை முதலில் இலை நுனியில் தென்படும். பின் அது இலையின் நடு நரம்பு வரை பரவி முழு இலைகளிலும் தோன்றும்.
  • பின் செடிகள் இழக்க நேரிடும்.
  • இலை நுனிகளில் பசுமை சோகை காணப்படும்.
  • இலைகள் சிறியதாகவும், செங்குத்தாகவும், எலுமிச்சை மஞ்கள் நிறம் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி :

  • யூரியா 330/ஹெக் (110/ஏக்கர் – மூன்று முறை) மண்ணில் கலந்து இடவும்.
  • 1% யூரியாவை அறிகுறிகள் மறையும் வரை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.