||| | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: வெள்ளைப்பூண்டு

இரகங்கள் : ஊட்டி 1, உள்ளூர் வகைகள், சிங்கப்பூத் சிகப்பு, ராஜாளி மற்றும் பர்வி, காடி

மண் மற்றும் தட்பவெப்பநிலை : கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யலாம். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையில் முற்றும் நிலையில் உலர்ந்த வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பூண்டு முற்றுகின்ற தருணத்தில் நீண்ட வெப்ப நாள் இருப்பது நல்லது. அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல. பூண்டு  இருமண்பாடுகள் வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தில் நன்கு வளரும். மணற்சாரி மண்ணாக இருந்தால் பூண்டிற்கு சிறப்பான நிறம் கிடைப்பதில்லை.

பருவம் : பூண்டு ஒரு பலபருவப் பயிராகும். மேல் மலைப்பகுதிகளில் பூண்டு இரு பருவங்களில் பயிர் செய்யலாம். முதல் பருவம் ஜூன் - ஜூலை, இரண்டாவது

பருவம் : அக்டோபர் – நவம்பர்.

நிலம் தயாரித்தல்

நடவு செய்யும் நிலத்தை 2-3 முறை நன்றாக  உழுது அல்லது மண்வெட்டி கொண்டு கொத்தி பண்படுத்தவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

பிறகு எக்டருக்கு 50 கிலோ மக்கிய தொழு உரம் இட்டு கலந்து விடவேண்டும். பிறகு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்கள், 50 கிலோ மெக்னீசியம் சல்பேட்,வேப்பம் புண்ணாக்கு ஒரு டன் ஆகியவற்றை அடியுரமாக இட்டு மண்ணுடன் கலந்துவிடவேண்டும். அடியுரமிட்ட பிறகு 15 நெ.மீ இடைவெளியில் அமைக்கவேண்டும்.

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

வெள்ளைப் பூண்டு

அடியுரம்

40

75

75

289

24

 

நட்ட 45 நாட்கள் கழித்து

35

0

0

0

76

விதையும் விதைப்பும்

ஒரு எக்டர் செய்ய 500-600 கிலோ விதைப்பூண்டு தேவைப்படும், நடவு செய்ய நல்ல உயர்ந்த பூண்டுகளைத் தேர்வு செய்யவேண்டும். நடவின்போது மேலேயுள்ள வெண்தோலை நீக்கிவிட்டு பூண்டுப் பற்களை நன்றாகத் தோய்த்து நடவு செய்யவேண்டும். பூண்டுப் பற்களை வரிசையில் 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு தலைப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு ஊன்றவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்யும் முன்னர் இலேசான நீர்ப்பாசனம் ஒன்று செய்ய வேண்டும். நட்ட 3 ஆம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது முன்பருவத்தில் மண்ணின் ஈரத்தன்மை தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். முதிர்ச்சியடையும் பருவத்தில் நீர்ப்பாசனத்தைக் குறைத்து அறுவடைக்கு சில நாட்களுக்கு முன்பு நீர்ப்பாசனத்தை நிறுத்திவிடவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

பூண்டு நட்ட ஆரம்பகாலம் முதல் களை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பூண்டுக்கு 30வது நாளில் ஒரு முறையும், 60வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுத்துவிட்டு மண் அணைப்பு செய்யவேண்டும். களைக்கொத்து பயன்படுத்தும்போது பூண்டுக்கு சேததம் ஏற்படாமல் மேலோட்டமாகக் கொத்தவேண்டும்.

மேலுரமிடுதல்: பூண்டு நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

இரப்பர் பூண்டு உருவாவதைத் தடுக்கும் முறைகள்

பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தினை மட்டும் கொடுக்கவேண்டும். அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்கவேண்டும். யூரியா மற்றும் அம்மோனியம் சல்பேட் வடிவில் தழைச்சத்தை பூண்டுப்பயிருக்கு அளிக்கவேண்டும். நட்ட 30வது நாளில் சிசிசி என்ற பயிர் ஊக்கியை 1500 பிபிஎம் என்ற அளவில் அதாவது 1.5 மில்லி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். நட்ட 30,60 மற்றும் 90வது நாளில் 0.2 சதம் போரான், 0.1 சதம் சோடியம் மாலிப்பேட் தெளிக்கவேண்டும். மேற்கண்டவாறு செய்தால் பூண்டு முதிர்ச்சியடையும்போது இரப்பர் போன்று மிருதுவானதைத் தடுக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைப்பேன்கள் : வெள்ளைப்பூண்டை இளம் பருவத்தில் இது தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25இசி அல்லது டைமீதோயேட் 30 இசி இவற்றுள் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழு : இதன் தாக்குதல் இருந்தால் பூண்டுப் பற்களை ஓர் இரவு தண்ணீரில் ஊறவைத்து பிறகு பாஸ்போமிடான் 85 இசி ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு விதைக்கவேண்டும்.
இலைப்பழுப்பு அல்லது இலைக்கருகல் நோய் : எக்டருக்கு 500 கிராம் கார்பென்டாசிம் மருந்துக் கலவை தெளிக்கவேண்டும்.

மொட்டு அழுகல் நோய் : விதைப்பதற்கு முன் பூண்டு கற்களை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாவிம் என்ற  அளவில் நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

அறுவடை

தாள் மடித்து பழுப்பு நிறமடைந்து காய்வதன் மூலம் பூண்டுகள் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று கண்டு  கொள்ளலாம். நட்ட 50-60 நாட்களில் பூண்டு வைக்க ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு 6 வாரங்களில் நன்கு முற்றிவிடும். நன்கு முற்றிய பயிர்கள் வெளிறிய பச்சை நிறத்துடன் நுனி இலைகள் காய்ந்து கொண்டு வரும். தோண்டுமுள் அல்லது மண்வெட்டி கொண்டு பூண்டினைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து, காயவைத்து, காற்றோட்டமான அறைகளில் சேமித்து வைக்கவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 8 முதல் 12 டன்கள்.

 

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014