தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: முட்டைக்கோசு

இரகங்கள்

மலைப்பகுதிகளுக்கு : பூசா டிரம்கெட், பிரைட் ஆப் இந்தியா, ஏர்லி வொண்டர், செப்டம்பர் எக்லிப்ஸ்.

சமவெளிப்பகுதிகளுக்கு : கோல்டன் ஏக்கர், லார்ஸ் சாலிட், லேட் டிரம்ஹெட், எரிலி ஆட்டம் ஜெயின் மற்றும் மகாராணி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பொதுவாக இதை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை. இப்பயிரைப் பயிரிட குளிர்ச்சியான பனிமூட்டம் தேவை. பொதுவாக இம்மாதிரி பனிமூட்டம் எல்லா மலைப்பகுதிகளிலும் கிடைக்கும். சமவெளிப்பகுதியில் குளிர் மாதங்களில் பயிர் செய்யலாம்.

விதையும் விதைப்பும்

விதைக்கும் பருவம்

சமவெளிப்பகுதி

முன் பருவப்பயிர்
(ஆகஸ்ட் - செப்டம்பர்)

மத்திய காலப் பயிர்

செப்டம்பர்

இப்பயிரை பயிரிடும்போது நல்ல சிறந்த பொறுக்கு விதைகளைத் தேர்ந்தெடுத்து பருவம் பார்த்து நடவேண்டும். முன்பருவ வகைகள் முன் பருவத்திலும், பின்பருவ வகைகளை பின்பருவத்திலும் நடவேண்டும். இரகங்களை பருவம் மாற்றி பயிரிடக்கூடாது.

விதையளவு : எக்டருக்கு 650 கிராம்.

நாற்றாங்கால் தயாரிப்பு : முட்டைக்கோஸ் விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் பயிர், நாற்றுக்கள் தயாரிக்க நல்ல வடிகால் வசதியுள்ள கட்டிகள் அற்ற பொல பொல வென்றிருக்கும் மண் தேவை. ஒரு எக்டர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் அளவில் நாற்றாங்கால் தயாரிக்கவேண்டும். நாற்றாங்காலில் மக்கிய தொழு உரம் 300 கிலோ, 10 கிலோ ஐந்தாம் எண் கொண்ட கலப்பு உரம் (9:9:9 அதாவது தழை:மணி:சாம்பல் சத்து இவற்றுடன் 50 கிராம் சோடியம் மாலிப்டேட், 100 கிராம் போரக்ஸ் ஆகியவற்றை கலந்து இட்டு 10-15 செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து, அவற்றில் 15-20 செ.மீ ஆழத்தில் வரிசையாக விதைகளை விதைத்து அவற்றை தொழு உரம் மயல் கலந்த கலவையால் மூடவேண்டும். பின்பு பூவாளியின் உதவியால் நீர்  தெளிக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 முறை உழுது பண்டுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் தோண்டம் கருவியால் நிலத்தைக் கிளறி 40 x 40 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். மத்தியப் பட்டப்பயிருக்கு 60 x 45 செ.மீ இடைவெளி கொடுக்கவேண்டும். சமவெளிப் பகுதிகளுக்கு 45 x 30 செ.மீ.

நடவு : 30 முதல் 40 நாட்க்ள ஆன நாற்றுக்களை நடவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். நாற்றுக்களைப் பறிப்பதற்கு 4-6 நாட்கள் முன்பு நாற்றாங்காலுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிடுவதன் மூலம் நாற்றுக்களைக் கடினப்படுத்தலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாற்றுக்கள் நடவு செய்யப்படும் போது நன்கு உயிர் பிடித்து வளரும்.

முட்டைக்கோசை நாற்றுக்கள் விட்டு நடவு  செய்யும் முறைக்கு பதில் நேரடி விதைப்பும் செய்யலாம். நன்கு தயார் செய்யப்பட்ட நிலத்தில் 60 x 30  செ.மீ இடைவெளியில் குத்து ஒன்றுக்கு 2 விதைகள் வீதம் விதைக்கவேண்டும். செடிகள் சுமார் 8-10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் குத்துக்கு ஒரு செடி விட்டு மற்றவற்றை பயிரைக்காட்டிலும் 20 நாட்கள் முன்னதாக அறுவடைக்கு வரும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : சமவெளிப்பகுதிகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் கீழ்க்கண்ட பரிந்துரைப்படி உரமிடவேண்டும்.

மலைப்பகுதிகளுக்கு எக்டருக்கு / கிலோவில்

இடவேண்டிய நிலை

தழை

மணி

சாம்பல் சத்து

நுண்ணுயிர் கலவை

மேலுரம் நட்ட 30-45 நாட்கள் கழித்து

45

45

45

-

சமவெளிப்பகுதிகளுக்கு / எக்டருக்கு / கிலோவில்

இடவேண்டிய நிலை

தழை

மணி

சாம்பல் சத்து

நுண்ணுயிர் கலவை

மேலுரம் நட்ட 1 மாதம் கழித்து

50

125

22

2 கிலோ அசோஸ்பைரில்லம்

மேலுரம் (நட்ட ஒரு மாதம் கழித்து)

50

-

-

-

 

பயிர்

 

 

இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

முட்டைக்கோஸ்

மலைப்பகுதிகளுக்கு

அடியுரம்

90

90

90

347

120

0

 

 

மேலுரம் நட்ட 30-45 நாட்கள் கழித்து

45

45

45

147

60

0

 

சமவெளிப்பகுதிகளுக்கு

அடியுரம்

50

125

22

85

90

64

 

 

மேலுரம் நட்ட 30-45 நாட்கள் கழித்து

50

-

-

0

109

0

இதைத்தவிர நிலம்  தயாரிக்கும் போது அடியுரமாக எக்டருக்கு மலைப்பகுதிகளுக்கு 30 டன் தொழு உரமும், சமவெளிப்பகுதிகளுக்கு 20 டன் தொழு உரமும் இடவேண்டும்.

உரப்பாசனம்
ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:125:150 கிகிஆகும். இதில் 75% மணிச்சத்தை (93.75 கிகி மணிச்சத்து 586 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:31.125:150 கிகி  உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பருவம்
பயிர் பருவம் ஆயுட் காலம் உர அளவு மொத்த உரம் அளிக்கப்படும் ஊட்டச்சத்து தேவையான %
தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
1 நடவு செய்தல் முதல் நாற்று பருவம் 10 19:19:19
13:0:45
யூரியா
32.87
19.42
24.36
6.25
2.52
11.21
6.25
-
-
6.25
8.74
-
10.00 5.00 10.00
உபரி மொத்தம் 19.98 6.25 14.99      
2 கோஸ் உருவாகும் பருவம் 30 12-61-0
13-0-45
யூரியா
20.37
133.20
130.74
2.44
17.32
60.14
12.50
-
-
-
59.94
-
40.00 10.00 40.00
உபரி மொத்தம் 79.90 12.50 59.54      
3 கோஸ் உருவாவது முதல் வளர்வது வரை 30 19:19:19
13-0.45
யூரியா
32.87
86.02
92.37
6.25
11.18
42.49
6.25
-
-
6.25
38.71
-
30.00 5.00 30.00
உபரி மொத்தம் 59.92 6.25 44.96      
4. அறுவடை 35 12-61-0
13-0-45
யூரியா
10.18  
66.60
65.38
1.22
8.66
30.07
6.25
-
-
-
29.97
-
20.00 5.00 20.00
மொத்த காலம் 115 நாட்கள்   39.95 6.25 29.97      
  மொத்தம் 199.75 (அ) 200.00 31.25 149.85 (அ) 150.00 100 25 100

மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 66 கிகி, 12:61:0 க்கு 31 கிகி, 13:0:45க்கு 305 கிகி மற்றும் யூரியா 313 கிகி.

நீர் நிர்வாகம்

முட்டைக்கோசிற்கு தொடர்ச்சியாக நீர் வேண்டும். ஆனால் நீர் தேங்கக்கூடாது. நடவு செய்யும் முன்னர் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர், பின்பு 10-15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். கோஸ் தலைகள் உருவாகி முதிர்ச்சியடையும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதை தற்காலிகமாக நிறுத்திவிடவேண்டும். இவ்வாறு செய்வதால் கோசில் வெடிப்பு ஏற்படுவதைத்த தவிர்க்கலாம். மேலும் வறட்சியான காலநிலைக்கும் பின்னால் மிகுதியான நீர் பாய்க்கினாலும் தலைப்பாகம் வெடிக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

நடவுக்கு முன்னர் ட்ரைபுளுராலின் அல்லது பேசலின் போன்ற களைக்கொலிலியை களைகள் முன்னர் தெளிப்பதன் மூலம் களைகளை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம். பயிருக்கு இரண்டிலிருந்து மூன்று முறை கொத்து கொண்டு களை நீக்கம் செய்யவேண்டும். வேருக்கு சேதம் ஏற்படாதவாறு மண்ணை மேலாகக் கொத்திவிட வேண்டும். வேருக்கு சேதம் ஏற்படாதவாறு மண்ணை மேலாகக்க கொத்திவிடவேண்டும். நடவு செய்த 5-6 வாரங்கள் கழித்து செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினிப் பூச்சிகள் : இவற்றைக் கட்டுப்படுத்த 2 சதவீதம் வேப்பம் எண்ணெய் அல்லது டைமெத்தோயேட் 2 மில்லி மருந்துடன் 0.5 மில்லி டீப்பாலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும். ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.

வேர்ப்புழு : இதைக்கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, மாவை வேளைகளில் செடியின் அருகில் ஊற்றவேண்டும்.

வைர முதுகு அந்துப்பூச்சி : இந்தப் பூச்சி முட்டைக்கோசை தாக்கும் முக்கிய பூச்சியாகும். இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் முட்டைக்கோசின் இளம் இலைகளையும் நடுக்குரத்தையும் தாக்குகின்றன. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கையாளவேண்டும்.

  1. முட்டைக்கோஸ் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வயல்களின் ஓரமாக அடாத்தியாக கடுகுப் பயிரை விதைக்கவேண்டும். செழுமையாக வளரும் இப்பயிர் அந்தப்பூச்சி மற்றும் அசுவினி ஆகியவற்றை கவர்ந்து இழுத்துவிடுவதால் பயிர் சேதாரம் குறையும்.
  2. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  3. இப்பூச்சியின் புழு பரவத்தை தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்த பாக்டீரியாவைக் (பேசில்லஸ் தூரியன்சிஸ்) கொண்டு தயாரிக்கப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லியை உபயோகிக்கவேண்டும்.
  4. கார்டாப் ஹைட்ரோ குளோரைடு ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  5. நட்ட 60 நாட்கள் கழித்து எக்டருக்கு 50,000 என்ற அளவில் ஒட்டுண்ணிகள் விடவேண்டும்.

வேர் வீங்கல் நோய் : நோயைத் தடுக்க நாற்றுக்களை நடுவதற்கு முன் 2 கிராம் கார்பென்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் முக்கி நடவேண்டும். செடிகளைச் சுற்றி மேற்கண்ட கலவையை ஊற்றவேண்டும். பயிர் சுழற்சி முறைகளைக் கடைப்பிடிக்கவும்.

கறுப்பு அழுகல் நோய் : இந்நோய் வேர் மற்றும் தண்டுப் பகுதயைத் தாக்குவதால்  செடிகள் அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த விதைகளை 100 பிபிஎம் ஸ்ரிடிப்டோமைசின் 30 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்கவேண்டும்.

அறுவடை

முட்டைக்கோசு நட்ட 75 வது நாளில் இருந்து அறுவடைக்கு வரும் கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுட்ன கூடிய முட்டைக்கோசை அறுவடை  செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்து முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம். முட்டைக்கோச நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் : மலைப்பகுதியில் எக்டருக்கு 150 நாட்களில் 50-60 டன்கள். சமவெளிப்பகுதியில் எக்டருக்கு 120 நாட்களில் 25-35 டன்கள்.

அடிச்சாம்பல் நோய் : மெட்டாலாக்சைல் + மேங்கோசெப் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

 

Last Update : Jan 2016