Horticulture
||| | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: இரப்பர்
 

இரப்பர் (ஹேவியா பிரேசிலியென்சிஸ்)
யுப்போர்பியேசியே

அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு அரசு
ரப்பர் வாரியம், இந்திய அரசு


இரப்பர் தோட்டம் இரப்பர் மரம்

 

இரகங்கள்

டிஜிபி 1, பிபி 86, பிடி 5,10, பி.ஆர் 17, ஜிடி 1 இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ஆஆஐஎம் 5, 105,141, 430, 422, 50, 52, 118, 176, 208, 300, 429, 600, பிபி 28 / 59, பிபி 217, 235, 703, 5, 260, பி.சி.கே –- 1,

மண்

ரப்பர் சாகுபடிக்கு வளமான ஆழமான இருபொறை மண்வகைகள் சிறந்ததாகும். மேலும் கார அமிலத்தன்மை 4.5 முதல் 6.0 வரை இருத்தல்வேண்டும். குறிப்பாக மண்ணில் மணிச்சத்துக் குறைவாக இருத்தல் இதன் வளர்ச்சி மற்றும் மகசூலை ஏதுவாக உயர்த்துகின்றது.

தட்பவெப்பநிலை

சிறந்த மகசூலுக்கு மிதமான தட்பவெப்பநிலை சிறந்ததாகும். சாகுபடிக்கு வருடமழை 2000-4500 மிமீ இருத்தல்வேண்டும். வெப்பநிலை 25-34 டிகிரி செல்சியஸ் 80 சதவீதம் ஈரப்பதம் கொண்டிருக்கவேண்டும். காற்று வீசும் பகுதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது.

பருவம்
ஜூன் - ஜூலை

பயிர்பெருக்கம் :
பச்சை மொட்டு ஒட்டுதல், பழுப்பு மொட்டு ஒட்டுதல் மற்றும் முடி மொட்டு ஒட்டுதல்.

நாற்றங்கால் : படுக்கை அளவு - 60-120 செ.மீ. அகலம் மற்றும் தகுந்த நீளம் இருக்க வேண்டும்.

இடைவெளி :
நாற்று - 23 x 23 செ.மீ., 30 x 30 செ.மீ. மற்றும் 34 x 20 செ.மீ.
ஒட்டுச்செடி - 30 x 30 செ.மீ. 60 x 60 செ.மீ
மொட்டு மர நாற்றங்கால் - 60 x 90 செ.மீ. (அ) 60 x 120 செ.மீ.

விதை நாற்றங்கால் :
 உரமிடுதல் : அடியுரங்கள் - 2.5 டன் எக்டர்/எரு. மற்றும் 350 கிலோ/ எக்டர் ராக் பாஸ்பேட் இடவும்.
நட்ட ஒன்றரை முதல் இரண்டு மாதங்களில் 10: 10:4 :1. 5 NPKMg எனும் இக்கலவையை 2500 கிலோ/ எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.
மூன்று முதல் மூன்றரை மாதத்தில் 550 கிலோ எக்டர் யூரியா அளிக்கவும்
.

நாற்றங்காலில் உள்ள நாற்றுகள்

நடவு : ஒரு க.மீ. குழிகள் தோண்டப்பட்டு நன்கு மட்கிய தொழு உரம் மற்றும் மேல் மணல் இடப்பட்டு இரப்பர் கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.


நடவுப்பொருள்

இடைவெளி (மீ)

எண்ணிக்கை / எக்டர்

ஒட்டுச் செடி

மலைப்பகுதி

6.7 X 3.4

445

சமவெளிகள்

4.9 X 4.9

420

நாற்று

மலைப்பகுதி

6.1 X 3.0

539

சமவெளிகள்

4.6 X 4.6

479

தானத்திய விதைப்பு
விதைகளை, தயார் செய்த குழிகளில் விதைக்கவும். விதை முளைத்த பின்னர் ஆரோக்கியமான செடி ஒன்றினை நிறுத்தி மற்றதை அகற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்

ரப்பர் மரத்தில் பால் எடுக்கும்முன்னர்:
நடவின் போது ஒரு குழியில் 12 கிலோ மக்கு உரம் (அ) மக்கிய தொழு உரம் மற்றும் 120 கிராம் ராக்பாஸ்பேட் (பாறை உப்பு) இடவேண்டும்.
கீழ்க்கண்ட அட்டவணையில் 10:10:4:1.5 விகிதம் தழை, மணி, சாம்பல் மற்றும் மெக்னீசியம் இடவேண்டும்.

நடவுசெய்தபின் (மாதம்)

உரச்சத்து இடும் தருணம்

பரிந்துரை செய்யப்படும் அளவு

 

 

10:10:4

12:12:6

3

செப்டம்பர் / அக்டோபர்

225 கிராம்

190 கிலோ

9

ஏப்ரல் / மே

445 கிராம்

380 கிலோ

15

செப்டம்பர் / அக்டோபர்

450 கிராம்

380 கிலோ

21

ஏப்ரல் / மே

450 கிராம்

480 கிலோ

27

செப்டம்பர் / அக்டோபர்

550 கிராம்

480 கிலோ

33

ஏப்ரல் / மே

550 கிராம்

380 கிலோ

39

செப்டம்பர் / அக்டேபர்

450 கிராம்

380 கிலோ

நடவு செய்த 5வது வருடம் முதல் மேற்கூறிய கலவையினை 400 கிராம் / எக்டர் என்ற அளவில் ஏப்ரல் / மே மற்றும் செப்டம்பர் / அக்டோபர் மாதத்தில் இடவேண்டும்.

இரப்பர் பால் எடுக்கும் மரங்களுக்கு

பால் எடுக்கப்படும் மரங்களுக்கு 10: 10 :10 NPK கலவையினை 900 கிராம்/ மரம் /வருடம் (300 கிலோ /எக்டர்) என்ற அளவில் இரண்டு முறை இடவேண்டும்.மெக்னீசயம் பற்றாக்குறை தென்பட்டால் 100 கிலோ உரக்கலவையுடன் 10 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை சேர்த்து அளிக்கவும்.

பின்நேர்த்தி

மூடுபயிர்களான பெரூரியா, கலப்பகோனியம், சென்ரோசோமா பெல்மோடியம் மற்றும் டெஸ்மோடியம் போன்றவற்ற வளர்த்து பின் மண்ணோடு சேர்த்து உழுதல்வேண்டும். இரப்பர் தோட்டங்களை களையின்றி பாதுகாக்கவேண்டும்.

பால் வடித்தல்

S/2 d/2

(அரை சுற்று, ஆறு மாத காலம் வரை ஒரு நாள் இடைவெளியில் பால் எடுத்ததை தொடர்ந்து மூன்று மாத கால ஓய்வுநிலை)

100% அடர்த்தி

S/2 d/2
6m /9

(அரைசுற்று, ஆறு மாத காலம் வரை ஒரு நாள் இடைவெளியில் பால் எடுத்ததை தொடர்ந்து மூன்று மாத கால ஓய்வுநிலை)

67% அடர்த்தி

S/2d/3

(அரைசுற்று, மூன்றாம் நாள்)

67% அடர்த்தி

S/2 d/3
1m/2

(அரைசுற்று, ஒரு மாதத்திற்கு நாள்தோறும் பால் எடுத்த பின்னர் ஒரு மாத ஒய்வு நிலை)

100% அடர்த்தி

S/1 d/4

முழுச்சுற்று, நான்காம் நாள்

100% அடர்த்தி

V/2 d/2
12m/16

அரை சுற்று, ஒரு நாள் இடைவெளியில் 12 மாதங்கள் பால் எடுத்த பின்னர் 4 மாதங்கள் ஓய்வுநிலை

75% அடர்த்தி

எத்ரல் ஊக்கி நேர்த்தி செய்தல்

எத்ரல் ஊக்கியின் பயன்பாட்டின் மூலம் இரப்பர் மரத்தில் அதிக அளவு பால்
எடுக்கலாம். மேலும் 5 சதவீதம் மருந்து மூலக்ககூறினை பால் எடுக்கும் பகுதிக்கு 5 செ.மீ கீழ் சிறிதளவு பட்டைகளை நீக்கி பிரஷ் கொண்டு எத்ரல் மருந்தை தடவுதல்வேண்டும். இதனை முதன் முறையாக கோடைக்காலம்  முடியும் தருணத்தில் இடவேண்டும். அதன் பின்னர் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இவ்வாறு செய்தல்வேண்டும். இம்முறையினை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

மரப்பால் சேகரிப்பு

 

பயிர் பாதுகாப்பு

  1. செதில் பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி மாலத்தியான் கலந்து தெளிக்கவேண்டும்.
  2. கரையான் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 20 இசி மருந்தை 2 மிலலி் அளவினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும்.
  3. சிலந்திப் பூச்சியினைக் கட்டுப்படுத்த 2.5 மிலி / லிட்டர் டைக்கொபல் மருந்து கலந்து தெளிக்கவேண்டும்.

இலை உதிரல்

தென்மேற்கு பருவமழைக்கு முன்பு முன் எச்சரிக்கையாக 1 சதவீதம்  போர்டோக்கலவையினை ஒரு எக்டருக்கு 4000 - 5000 என்ற அளவில்  விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.

இலை வழியாக அல்லது குறைந்து அளவு தெளிப்பான் மூலம் எண்ணெய் அடிப்படையான் காப்பர் ஆக்ஸி குளோரைடை தெளிக்கவும்.ஒரு எக்டருக்கு 17 முதல் 22 லிட்டர் எண்ணெ அடிப்படையிலான பூசணக்கொல்லியை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும் அல்லது ஒரு எக்டருக்கு 30 -37 லிட்டர் எண்ணெய் அடிப்படையிலான பூசணக்கொல்லியை ஒரு முறை தெளிக்கவும்.

சாம்பல் நோய்

இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 11 - 14 கிலோ நனையும் கந்தகம் (எண் 325 சல்லடையில் சலிக்கப்பட்ட) பதினைந்து நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும். மேலும் 1 கிலோ மருந்தை 4000 லிட்டர் தண்ணீர் கலந்து நாற்றாங்கால் மற்றும் இளவயது செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி

1 சதவீதம் போர்டோக்கலவை (அ) 0.2 சதவீதம் மேங்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவீதம் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

மகசூல்

நடவு செய்த ஐந்தாம் வருடம் முதல் இரப்பர் பால் வடிதல் அதிகமாகும். சிறந்த மகசூல்  நடவு செய்த 14வது வருடத்தில் கிடைக்கும். தென் இந்தியாவில் ஒரு எக்டரிலிருந்து 375 கிலோ மகசூல் விதை மூலம் நடவு செய்த மரங்களிலிருந்தும், 800-1000 கிலோ மகசூல் மொட்டு கட்டிய மரங்களிலிருந்தும் கிடைக்கும்.

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021