Horticulture
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: முந்திரி
 
முந்திரி (அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல் L.)
அனகார்டேசியே
மரத்தில் தொங்கும் முந்திரி பருப்புகள் முந்திரி பழம் மற்றும் பருப்பு இந்தியாவில் முந்திரி உற்பத்தி மையங்கள்

இரகங்கள் : வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2 வி.ஆர்.ஐ 3 வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 (ஹெச்2/16).

 

மண் மற்றும் தட்பவெப்பநிலை : எல்லாவகை மண்ணிலும் பயிரிடல ாம். இருந்தாலும் சற்று மணற்பாங்கான செம்பொறை மண் முந்திரிக்கு ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். களர் உவர் தன்மை இல்லாத நிலமாக இருத்தல் சிறந்தது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும்.

பருவம் : ஜுன் - டிசம்பர்

விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : ஒட்டுக்கட்டுதல், இளம் தண்டு ஒட்டு, முந்திரி ஒட்டுக்கட்டும் முறையில் “இளம் தண்டு ஒட்டு முறை: மிகவும் சிறந்தது. அதிக மகசூலைக் கொடுக்கவல்லது. எனவே விவசாயிகள் ஒட்டுக்கட்டும் முறையில் பயிற்சி ஒட்டு உற்பத்தி செய்து, ஒட்டுக் கன்றுகளையே நடுவதற்குப் பயன்படுத்தவேண்டும்.
கன்றுகளின் எண்ணிக்கை : ஒரு எக்டருக்கு 200 கன்றுகள்

இளம் தண்டு ஒட்டு

நிலம்  தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் செய்தபிறகு 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து, ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 10 கிலோ தொழு எரு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக்கொள்ளவேண்டும். பின்பு குழிகளின் மத்தியில் ஒட்டுக்கன்றுகள் நடவேண்டும்.

அடர் நடவு முறை
5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஹெக்டருக்கு 500 மரங்கள் நடவேண்டும். மர வடிவத்தினை சீரமைக்க ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.  

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

உரமிடுதல் (மரம் ஒன்றுக்கு)


உரங்கள்

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு

2 வயது மரம்

3 வயது மரம்

4 வயது மரம்

5ம் ஆண்டு முதல்

தொழு உரம்
(கிலோ)

10

20

20

30

50

ஒவ்வொரு முறையும், உரங்களை நவம்பர் - டிசம்பர் மாதத்தில் இடவேண்டும். கிழக்கு கடலோர பகுதிகளில்  ஒரு மரத்திற்கு 1000:125:250  கிராம் NPK இடங்களில் உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் - ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இரண்டாவது முறையும் இடவேண்டும்.


பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் மரம் ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு
(கிராம் மரம் ஒன்றிற்கு)

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

முந்திரி

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு

70

40

60

155

120

34

 

2 வயது மரம்

140

80

120

308

237

67

 

3 வயது மரம்

210

120

180

462

356

101

 

4 வயது மரம்

280

160

240

616

474

134

 

5 வயது மரம்

500

200

300

770

918

167

நீர்ப்பாசனம்: பொதுவாக மானாவாரியில் பயிரிடப்படுகிறது. மேலும் அதிக மகசூல் பெற பூ பூக்கும் பருவம் முதல் அறுவடை வரை வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

ஊடுபயிர் : முந்திரி காய்ப்புக்கு  வரும் வரை கன்றுகளுக்கு இடையே மழை வந்தபிறகு நன்கு உழுது நிலக்கடலை, பயிறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம்.

கவாத்து செய்தல் : மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிடவேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன மற்றும் குழிக்காக வளர்ந்து கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்கும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும், பூக்களையும் உருவிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

தண்டுத் துளைப்பான் : இது முந்திரியைத் தாக்கும் முக்கியமான புழு ஆகும். இப்புழு அதிகமாகக் காய்க்கும் மரத்தையே  சேதப்படுத்துகிறது. இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதம் காணப்படும். சேதத்தின் அறிகுறி மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் சிறு துளைகளும் அவற்றின் வழியே வெளிவரும் பிசின் போன்ற திரவமும் மற்றும்புழு கடித்துப் போட்ட சக்கைகளுமே ஆகும். இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து மரம் காய்ந்து மொட்டையாகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  1. முதலில் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளவெண்டும்.
  2. தாக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தவேண்டும்.
  3. கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவிவிடவேண்டும்.
  4. வருடத்திற்கு இருமுறை, மழைக்கு முன்னர் (மார்ச் – ஏப்ரல்) பிறகு மழை வந்து நின்றவுடன் (நவம்பர்) மரத்தின் அடித்தண்டில் தரையிலிருந்து இரண்டரை முதல் மூன்றுஅடிக்கு தார் + மண்ணெண்ணெய் 1:2  கலவையினைப்பூசவேண்டும்.(அ) 5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.
  5. ஆரம்பம் மற்றும் நடுத்தர தாக்குதல் உள்ள மரங்களுக்கப் பாலித்தீன் பையில் 10 மில்லி மானோகுரோட்டாபாஸ் மருந்துடன் 10 மில்லி தண்ணீரைக் கலந்து மாலை வேளையில் வேரில் கட்டவேண்டும். (மரத்திலிருந்து ஏழு அடி தள்ளி மண்வெட்டியினால் வெட்டினால்  பென்சில் வடிவ வேர்கள் கிடைக்கும்). இதில் நல்ல திரட்சியான வேர்களைத் தேர்வு செய்யவும்.
  6. பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து வண்டினப் புழுக்களை நீக்கி விட்டு, 10 மிலி / லிட்டர் குளோர் பைரிபாஸ் (அ) 5% வேப்ப எண்ணெயை கொண்டு நனைக்க வேண்டும்.

தண்டு துளைப்பான் பாதிக்கப்பட்ட மரம்

 

தேயிலைக்கொசு : தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் / லிட்டர் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி/ லிட்டர் மேனோகுரோட்டோபாஷ் தெளிக்கவும்.

தேயிலைக் கொசு பாதிக்கப்பட்ட மரம்

 

வேர்த் துளைப்பான் : ஒரு மரத்திற்கு மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை இரண்டு முறை அதாவது 5 மில்லி மருந்து + 5 மில்லி தண்ணீர் கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும்.

இலைத் துளைக்கும் புழு

  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்கவும்.
  • 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

நோய்கள் :

நுனிக்கருகல் அல்லது இளஞ்சிகப்பு பூசண நோய் : நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எடுத்துவிடவேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை அல்லது ஏதாவது தாமிரப்பூசணக் கொல்லி மருந்தினை தடவிவிடவேண்டும்.

ஆந்தராக்னோஸ்

  • பாதிக்கப்பட்ட செடியினை அகற்றி அழிக்கவும்.
  • துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்கவும்.
ஆந்தராக்னோஸ்

அறுவடை

ஒட்டுக்கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்திலிருந்தே காய்ப்புக்கு வரும் . மார்ச் - மே மாதங்களில் அறுவடை  செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, சூரிய வெய்யிலில் 2 அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.

        முந்திரி பழங்கள் முந்திரி பருப்புகள்

மகசூல்
ஒரு மரத்திற்கு 3-4 கிலோ / வருடம்.

மேற்பகுதி மாற்ற வேலை

வயதாகிய மற்றும் குறைந்த மகசூல் தரம் முந்திரி மரங்களை மேற்பகுதி மாற்ற வேலை மூலம் புதுப்பிக்கலாம். முதலில் மரங்களை தரைமட்டத்திலிருந்து 1-3 மீட்டர் அளவில் வெட்டிவிடவேண்டும். பின் அதனின் வரும் தளிர்களில் இளந்தளிர் ஒட்டு மூலம் புதிய ஒட்டுகள் நாளடைவில் வளர்ந்து மகசூல் தர ஆரம்பிக்கும்.

சந்தை தகவல்கள்

பயிர் செய்யப்படும் மாவட்டங்கள்

கடலூர், திருநெல்வேலி

முக்கிய சந்தைகள்

ஜெயன்கொண்டம், விருத்தாச்சலம், பன்ருட்டி

தரம்

வெள்ளை / துண்டுகள், உதிரிகள், பட்ஸ்