Horticulture
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: வெட்டி வேர்
 

வெட்டி வேர்

வெட்டிவேரியா ஜிஜேனியோடஸ் - போயேசியே

வெட்டி வேர் ஒரு புல் வகைத் தாவரம். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய் சோப்பு, வாசனைத் திரவியங்கள், அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் புகையிலைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேர் எண்ணெய் இந்திய மருத்துவத்தில் தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கையாக வெட்டி வேர் காடுகளில் அதிகம் வளரும். கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெட்டிவேர் குறிப்பிட்ட பரப்பளவில் பயிர் செய்யப்படுகின்றது.

இரகங்கள்
லக்னோவிலுள்ள மத்திய மருந்து மற்றும் வாசனைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (CIMAP) கே.எஸ் (KS-1, KS-2) மற்றும் சுகந்தா (Suganda) ஆகிய உயர் விளைச்சல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரகங்களிலிருந்து உள்ளூர் இரகத்தை விட ஐந்து அல்லது அறு மடங்கு அதிகமான எண்ணெய் கிடைக்கும்.

மண் வகை
வெட்டி வேர் எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. அதிக கார அமிலத் தன்மையுடைய (pH 9.5 – 10.5) மணற் பாங்கான மண் வகையிலும் வளரக் கூடியது.

தட்ப வெப்ப நிலை
வெட்டிவெர் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக் கூடியது. கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீட்டர் உயரம் வரை மலைப் பகுதிகளில் வளரக் கூடியது. ஆண்டு மழை 50 செ.மீ அளவும் அதற்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும். வறட்சியில் அதிகப் பலனைத் தரும். குளிர்ச்சி அதிகம் உள்ள மலைப்பிரதேசங்கள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

பருவம்
ஜ%ன், ஜ%லை மாதங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற பருவம். மலைக் காலங்களின் துவக்கத்தில் நடுவது நல்லது.

பயிர்ப் பெருக்கம்
வெட்டிவேரின் பக்கத்தூர்கள் (Slips) கொண்டு பயிர்ப் பெருக்கம் செய்யலாம். இந்தத் தூர்களை நல்ல வளமான குத்துக்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். 25-30 செ.மீ உயரமுள்ள தூர்களை நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்வதற்கு 5000-6000 தூர்கள் தேவைப்படும்.

இடைவெளி
வரிசைக்கு வரிசை 60-75 செ.மீ இடைவெளியும் பார்களுக்கிடையே 45 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

நடவுமுறை
நிலத்தை நன்கு உழுது களைகளை அப்புறப்படுத்தி மண்ணைப் பண்படுத்த வேண்டும். பிறகு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். அவற்றின் பக்கவாட்டில் தூர்களை வரிசைகளில் நடவு செய்ய வேண்டும்.

உரமிடுதல்
40 கிலோ தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும். தூர்களை நட்ட இரண்டாம் ஆண்டு 40 கிலோ தழைச் சத்தை மேலுரமாக ஜ%லை மாதத்தில் மழைக்குப்பின் இட வேண்டும்.

பின்செய் நேர்த்தி
வெட்டி வேர் செடிகள் நன்றாக வளர்ந்த பிறகு களைகள் அதிகம் வளராது. ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் மண் வெட்டியைக் கொண்டு ஒரு முறை நிலத்தைக் கொத்தி விடுவது நல்லது. வெட்டிவேர் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. ஆனாலும் மிகவும் வறட்சியான கோடைக் காலங்களில் நீர்ப் பாய்ச்சுவதால் வேர்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

மகசூல்
ஒரு எக்டரில் 5000 கிலோ வேர்களை அதிகபட்சமாக அறுவடை செய்யலாம். எனினும் சராசரியாக ஒரு எக்டருக்கு 3000 கிலோ மகசூலாக கிடைக்கும். ஒரு எக்டருக்கு 25-30 கிலோ எண்ணெய்ப் பொருள் கிடைக்கும்.