தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் ::பதிமுகம்

பதிமுகம்

பதிமுகம் அல்லது கிழக்கிந்திய சிவப்பு மரம் ஒரு பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கை சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தோட்டங்கள் மற்றும் நாற்றங்கால் பகுதிகளில் வேலியாக வளர்க்கப்படுகிறது.

பயன்கள்:

மரக்கட்டை :
இவை வணிகரீதியாக சிவப்பு மரம் அல்லது பிரேசில் மரத்திற்கு ஆதாரமாக உள்ளது. பதிமுகமானது வெள்ளை நிறம், கடின தண்டுப்பகுதி அதன் 90% கன அளவைக் கொண்டது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இளம் பருவத்தில் காணப்படுவதுடன் அடர் சிவப்பு நிறமாக மாறிவிடும். இவை  நேரான, இழையமைப்பு கொண்ட, கடினமான (600-700கிகி/மீ3) மரமாகும். எளிதில் காய்ந்து போவதில்லை மற்றும் கரையான் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. இவை அலுவலக அறைகள் தயாரிக்க, நடைப்பயிற்சி குச்சிகள் தயாரிக்க பயன்படுகிறது.  

பிசின் :
தண்டுப் பகுதியில் பிசின் கிடைக்கிறது. நிறமி: பதிமுகத்தின் மையப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் சிவப்பு பளபளப்பான நிறமி பருத்தி, பட்டு மட்டும் கம்பளி துணிகளுக்கு சாயம் போட பயன்படுகிறது. தாவரப்பட்டை மற்றும் காய்கள் பதனிடப்பட்ட தோல் பொருட்களுக்கு நிறமியாக பயன்படுகிறது. வேர்கள் மஞ்சள் நிறமியாக பயன்படுகின்றது.  பதிமுகம் சிவப்பு நிறமியாக நிறம் ஊன்றி சேர்க்கப்பட்டு அல்லது சேர்க்கபடாமல் பயன்படுத்தப்படுகிறது. நிறம் ஊன்றிகள் பொதுவாக நிறமி நன்கு ஒட்டிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் :

பதிமுகத்தின் இலைகள் நல்ல நறுமணமுள்ள எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெயைக் கொண்டுள்ளது. மருந்து : இம்மரத்தின் சாறு வயிற்றுக் கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கிற்கு மருந்தாக பயன்படுகிறது. தோலிற்கு ஊட்டமளிக்க வெளிப்புறமாக பயன்படுகிறது. பெண்களுக்கு டானிக்காக அளிக்கப்படுகிறது மற்றும் இவை ரத்த வாந்தியை மட்டுப்படுத்துகிறது. மலேரியாவிற்கான மருந்து தயாரிப்பில் இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த மையப்பகுதி வீக்கம் மற்றும் அழற்சிக்கு மருந்தாக பயன்படுகிறது. விதைகள் மயக்க மருந்தாக பயன்படுகிறது.

மண் மற்றும் காலநிலை:

இது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது மற்றும் இவை செம்மண்ணில் நன்கு செழித்து வளரும். இது வறட்சியைத் தாங்கி வளரும். அதிக ஈரத்தன்மை கொண்ட மண்ணில் வளருவதில்லை. ஆண்டின் சராசரி வெப்பநிலை 24-280செ மற்றும் கார அமிலத் தன்மை 5-7.5 இருக்க வேண்டும்.

இனப்பெருக்கம்:

பதிமுகம் விதைகள் மற்றும் கிளை நறுக்கி நட்டு இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக முதிர்ந்த காய்கள் வறட்சி பருவத்தில் வெடித்து பரவி இருக்கும். மழைக்காலம் வரும் வரை அவை உறக்க நிலையிலிருக்கும். காய்கள் சேகரிக்கப்பட்டு குளிர்ந்த நீரில் போடப்படுகின்றது. விதைகள் முளைக்க தயாராகிவிடும். ஆனால் விதைகளை பருத்தி துணியில் கட்டி 5 நொடிகள் கொதிநீரில் வைத்தால் அவற்றின் முளைப்புத் திறன் 90 சதவிகிதமாக இருக்கும்.
 

பொதுவாக முதிர்ந்த காய்கள் வறட்சி பருவத்தில் வெடித்து பரவி இருக்கும். மழைக்காலம் வரும் வரை அவை உறக்க நிலையிலிருக்கும். போதுமான ஈரப்பதம் கிடைத்தவுடன் முளைத்துவிடும். விதைகளை பருத்தி துணியில் கட்டி 5 நொடிகள் கொதிநீரில் வைத்தால் அவற்றின் முளைப்புத் திறன் 90 சதவிகிதமாக இருக்கும். பொதுவாக இவை காடுகளில் மர நிழல் அல்லது காடுகளின் ஓரங்களில் வளர்க்கப்படுகின்றன.

பயிர் மேலாண்மை:

ஆரம்பத்தில் பதிமுகம் நேராக வளரும். அவை 2.5 மீ உயரம் அடைந்தவுடன் அதன் கிளைகள் அருகில் உள்ள மரங்களில், அருகில் உள்ள கிளைகளுடன் இணைந்து அடர்ந்த படர்வை உருவாக்குவதுடன் குறைவான அடிப்பகுதி வளர்ச்சியைக் கொண்டது. மரம் விழுந்த பிறகு அதன் கட்டைகளிலிருந்து அதிகப்படியான முளைப்புகள் இருவாரங்களுக்குள் முளைக்கின்றன. நிறமியாக உபயோகிக்கும் மரங்களை 6-8 வருடங்களில் மற்றும் அதன் தண்டு 5-6 செ.மீ விட்டம் வந்தவுடன் அறுவடை செய்யலாம். மரங்களை நிலத்திலிருந்து 1 மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

உர மேலாண்மை:

நிலத்தை தயாரிக்கும்போது 5கிகி தொழுவுரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். அங்கக பொருட்களை தவிர ரசாயன உரங்கள் குறைந்த அளவு அளிக்கலாம் அல்லது தேவையில்லை.

பயிர் பாதுகாப்பு:

காய் துளைப்பான் மற்றும் கரையான் முக்கிய பூச்சியாகும். காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த காய்விடும் பருத்தில் 0.2 சதவிகித மோனோகுரோடோபாஸ் வார இடைவெளியில் அளிக்க வேண்டும். கரையானைக் கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் அல்லது டர்ஸ்பான் 2மலி/லி கொண்டு மண்ளை நனைத்தல் வேண்டும்.
மூலிகைத் தாவரங்களுக்கு இரசாய உரங்கள் தேவையில்லை. வேம்பு சார்ந்த அங்ககப் பொருட்கள் போதுமானதாகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப் பயன்படுத்தலாம். உயிர்ம பொருட்களான பூண்டு விட்டெக்ஸ், கிளிரோ டென்ட்ரான் மற்றும் கலோட்ராபிஸ் ஆகியவற்றை கலந்து சீரான இடைவெளியில் தெளிப்பதன் மூலமாக பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

முக்கிய கிளையானது அறுவடை செய்யப்படுகிறது. கூழின் சராசரி மகசூல் மரத்திற்கு 80 கிலோ கிடைக்கப்பெறுகிறது. விதையானது நட்ட இரண்டாம் வருடத்திலும், மரமானது 6-12 வருடத்திலும் கிடைக்கப்பெறும். காய் மகசூலானது எக்டருக்கு 2000-2500 கிலோவும், விதை மகசூலானது எக்டருக்கு 200-250 கிலோவும் கிடைக்கும். அறுவடை செய்யப்பட்ட மரங்களானது துண்டுகளாக வெட்டப்பட்டு கொதிக்கும் நீரில் இடுவதன் மூலம் மை கிடைக்கின்றது. பிரித்தெடுக்கும்போது, சில நெல்மணிகளை இடுவதன் மூலமாக மை பிரித்தெடுக்கப்படுகிறது. நெல் உமியானது கொதிக்கும் நீருக்கு போதுமானது. மையின் மகசூலானது இரகங்கள் மற்றும் சாகுபடி முறையை பொறுத்து மாறும்.

ஆதாரம்:

Dr. K. Rajamani, Department of Medicinal Plants,TNAU,
Medicinal plants production towards globalization,
Page no: 107-111.
ISBN no:978-81-905951-1-7

Last Updated : April 2015