தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: கீழாநெல்லி
கீழாநெல்லி (Phyllanthus amarus – Euphorbiaceae)

பொருளாதார பகுதி - முழுமையான தாவரம்

பிரதான மூலக்கூறு - பைலான்தின் (0.4-0.5%) மற்றும் ஹைப்போபைலான்தின்

பயன்கள்- ஹெபடிடிஸ் பி மற்றும் மஞ்சள் காமாலை

இரகங்கள்:
 நவ்யாகிரிட் (CIMAP) - உயர் புல் மற்றும் ஆற்றல் பொருட்கள்.

மண் மற்றும் காலநிலை
7.5-6.5 கார அமிலத் தன்மை கொண்ட வடிகால் தன்மை கொண்ட மணல் கலந்த பசலை அல்லது களிமண் ஏற்றது. வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதியில் மானாவாரி பயிராக நன்கு வளரும்.

விதைப்பு
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது மேல் மண்ணை சமன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு நாற்றுகளை தயாரிக்க 1 கிலோ விதை தேவைப்படும். விதைகள் ஒரு வாரத்தில் தளிர் விடும். அவற்றை 20 நாட்கள் வரை பராமரிக்க வேண்டும். முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பதற்கு முன் நல்ல தண்ணீரில் விதைகளை 20-30 நிமிடங்கள் ஊற வேண்டும். மேலும் ஜிஏ 3: 200 பிபிஎம் கொண்டு 6 மணிநேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நடவு மற்றும் இடைவெளி
3 முதல் நான்கு வாரம் வயதுடைய நாற்றுகளை 10 x 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். எக்டருக்கு 8 லட்சம் நாற்றுகள் தேவைப்படும்.

உரமிடுதல்:
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்க தொழு உரம் 10-20 டன், 50 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து எக்டருக்கு அளிக்க வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்து முழு அளவும் மணிச்சத்து பாதி அளவும் அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள மணிச்சத்து இரு பகுதிகளாக பிரித்து பாதி அளவு நடவு செய்த 30வது நாளிலும், மீதமுள்ள அளவை நடவு செய்த 60வது நாளிலும் அளிக்க வேண்டும்.
Bhumiamalaki Plants
 
Dried Bhumiamalaki
Dried plant material

பயிர் பாதுகாப்பு:

பொதுவாக இந்த மூலிகைக்கு பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முயற்சிகள் அதிகம் தேவையில்லை.

அறுவடை
பயிர் ஜூன் முதல் ஜூலை பயிரிடப்படப்பட்டால்,  செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் சாகுபடிக்கு தயாராகும். செப்டம்பர் அறுவடையானது உயர் பில்லாந்தின் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. நடவிலிருந்து, 80 முதல் 100 நாட்களில் தாவரங்கள் அதிகபட்சமாக வளருகின்றன.

மகசூல்
எக்டருக்கு சராசரி மகசூல் புதிய மூலிகை 17.5 டன் மற்றும் உலர் மூலிகை எக்டருக்கு 1750 கிகி.
உலர்ந்த தாவர பொருள்

Source: http://www.tnsmpb.tn.gov.in/images/KIZHANELLI.pdf

Book: Production technology of Medicinal and Aromatic Crops. DR. M. Kader Mohideen, Dr. Arumugam Shakila, Dr. A Anburani

Last Updated : March 2015