தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: மருந்துக் கூர்க்கன்

முன்னுரை

குறுகிய கால மருந்துப் பயிர்களில் மருந்துக் கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு தற்போது தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. இதனை கோலியஸ், என்று பரவலாக அழைக்கின்றார். செடிகள் 60-90 செ.மீ உயரம் வளரக்கூடியவை. தண்டுகள் மெல்லியதாகவும் இளம் பச்சை நிறத்திலும் இருக்கும். இலைகள் கற்பூரவல்லிச் செடிகளின் இலைகளைப் போல ஆனால் வாசனையின்றி இருக்கும்.

இதன் வேர்க்கிழங்குகள் மருந்துப் பொருட்களில் அதிகம் பயன்படுகின்றன. வேர்கள் கேரட்டைப்போல பருமானவும், 30 செ.மீ வரை நீளமாகவும் இருக்கும். வேர்கள் இளமஞ்சள் நிறத்துடன் வாசனைத்  தன்மையுடன் இருக்கும். இவற்றில் போர்ஸ்கோலின் (Forskolin) மூலப்பொருள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் செய்யப்பயன்படுகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, ஆப்பிரிக்கா , பர்மா மற்றும்  தாய்லாந்து நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1500 டன் கிழங்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சுமார் 500 எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இப்பகுதியில் இருந்து சுமார் 1000 டன் உவர் வேர்கள் செய்யப்படுகின்றன.

பயன்கள்

இதன் வேர்க்கிழங்கு இரத்த அழுத்த நோயைக் குணப்படத்த உதவுகிறது மற்றும் கிளாகோமா (Glaucoma) என்ற கண் கோளாறு நோய்க்கம் மருந்தாகப் பயன்படுகிறது.

இரகங்கள்

மங்கானி பெரு

இது கர்நாடக மாநிலத்தில் பெல்காம் போன்ற பகுதிகளில் பயிர்  செய்யப்படுகிறது. கிழங்குகள் பருமனாகவும் 30.0 செ.மீ வரை நீளமாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

கார்மாய்

குஜராத் மாநிலத்தல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வேர்க்ள நடுத்தர அளவில் இருக்கும்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

செம்மண் அல்லது மணல் செம்மண் மற்றும் சரளை வகை மண் உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். வேரின் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மை கடினமாக இருக்கக்கூடாது. வடிகால் வசதியை உடைய மணற்பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றவை. நீர்த் தேங்கும் மண் வகைகள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல.
ஓரளவு மழையளவு (அண்டுக்கு 70 செ.மீ) உள்ள சமவெளிப்பகுதிகள் இதன் சாகுபடிக்கு ஏற்றது. தாழ்வான மலைச்சரிவுகளிலும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதியுடன் இதனைச் சாகுபடி செய்யலாம்.

விதையும் விதைப்பும்

நுனித் தண்டுகள் மூலம் கூர்க்கன் கிழங்குகளைப் பயிர்பெருக்கம் செய்யலாம். மூன்று அல்லது நான்கு கணுக்களை உடைய 10 செ.மீ நீளமுள்ள நுனித் தண்டகளை மட்டுமே நடவிற்குப் பயன்படுத்தவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை உழுது எக்டருக்கு 15 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்தவேண்டும். பிறகு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் பிடிக்கவேண்டும். பயிர்களின் பக்கவாட்டில் தண்டுகளை ஜுன் - ஜுலை அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யவேண்டும்.

இடைவெளி

60 செ.மீ இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களில் 45 செ.மீ இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்யவேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்வதற்கு 37,030 செடிகள் தேவைப்படும். சற்றே வளம் குறைந்த நிலங்களில் செடிகளை 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த முறையில் எக்டருக்க 55,500 செடிகள் நடுவதற்கு தேவைப்படும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை செடிகள் நட்ட 30வது நாளிலும்  பிறகு 45வது நாளிலும் சமமாகப் பிரித்து இடவேண்டும். நுண்ணூட்டசத்து பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச்சத்து உரத்தை அடியுரமாக இடுவது அவசியம்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

மருந்துக்கூர்க்கன்

30

60

50

231

15

நீர் நிர்வாகம்

செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் ஒரு முறையும் பிறக பத்து நாடகள் இடைவெளியிலும்  நீர்ப்பாசனம் செய்யவேண்டும். கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 10 நாட்கள் இருக்கும் போது கடைசி பாசனத்தை அறிந்து நிறுத்திடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

கோலியஸ் மருந்துப்பயிரில் பூச்சி செடியைத் தாக்கும் பூச்சிகளில் நூற்புழுக்கள் சேத்தை விளைவிக்கிறது. நூற்புழுக்கள், பயிர் செய்யப்படும் அநேக காய்கறிப் பயிர்களையும் குறிப்பாக வள்ளிக்கிழங்கு சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு பயிர்களையும் மாற்று உணவுப் பயிராக கொண்டது. வேர் முடிச்சு நூற்புழுவின் தாக்குதலால் செடிகளின் வளர்ச்சி குன்றி குட்டையாக காணப்படும்.
கோடைக்காலங்களில் செடிகள் வாடி காய்ந்துவிடும். தாக்கப்பட்ட செடிகள் தண்ணீர் பாய்ச்சினாலும் பிழைக்காது. செடிகளின் வேர்ப்பகுதியைப் பிடுங்கி பார்த்தால் வெர்களில் ஆங்காங்கே சிறிய மற்றும்  பெரிய வீக்கங்கள் முடிச்சுகள் போன்று காணப்படும்.

நூற்புழுக்கள் நுனி மூலம் உட்சென்று வேரின் நுனி இடத்தில் அசையாமல் இருந்து சத்துப் பொருட்கள உண்பதால், சத்துக்கள் மேலே செல்ல முடியாமல் செடிகள் வாடி காய்ந்து இறந்துவிடுகின்றன. மேலும் நூற்புழு உள்ள இடங்களில் செல்கள் நீண்டு வளர்ந்து எண்ணிக்கையில் அதிகமாவதால், வேர்களில் முடிச்சுகளில் போன்ற வீக்கம் காணப்படுகின்றது. இதனால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறையும். மேலும் கிழங்குகள் பெருக்காமல் பெருமளவு மகசூல் குறையும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நடவு வயலில் நூற்புழு பரிசோதனை செய்து நூற்புழு தாக்குதல் இல்லாத இடங்களில் பயிர் செய்யவேண்டும். கோலியஸ் சாகுபடி செய்த நிலத்தில் பயிர் சுழற்சி முறையில் சோளம், மக்காச்சோளம் போன்ற நூற்புழு தாக்காத பயிர்களை வருடத்திற்கு ஒரு முறை பயிர் செய்வது நல்லது. மெரிகோல்டு எனப்படுமு் செண்டு மல்லி பூச்செடியின் வேரில் இருந்து வரும் திரவம் வேர் முடிச்சு நூற்புழுக்களை அழிக்கவல்லது. ஆதலால் செண்டு மல்லி செடிகளை பார் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் ஊடுபயிராக நடவு செய்து பராமரிக்கலாம். எக்டருக்க 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு நடவுக்கு முன் இட்டு வயலை நன்கு உழவேண்டும். எக்டருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு நடவுக்கு முன் இட்டு வயலை நன்கு உழவேண்டும். நூற்புழு தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தாக்குதல் 15-20 கிலோ கார்போஃபியூரான் மருந்தை செடிக்கு செடியோ அல்லர் பார்களிலோ இட்டுட மண் அணைத்தும் வயலில் மணலுடன் கலந்து தூவியும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

வேரழுகல் நோய் கட்டுப்பாடு

கோலியஸ் பயிரானது நோய் தாக்குதலுக்கு அதிகம் உட்படுகின்றன. கோலியஸ் மருந்துச் செடியை தாக்கும் ாநய்களில் வேரழுகல் நோயல் அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆகஸ்டு - நவம்பர் மாதங்களில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோய் ஃபுசேரியம் கிளாமிடோஸ்போரம் (Fusarium chlamdoporum) என்ற பூசணத்தால் ஏற்படுகின்றது. நடவு செய்த 50 நாட்க்ள வரை இந்நொய் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. நட்ட 60ம் நாளில் இந்நோயின் தீவிரம் அதிகமாக வெளிப்படுகிறது.

இந்நோய் தாக்கிய செடிகளில் இலைகள் பழுப்பு நிறத்துடன் காணப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் பொழுது செடிகள் முழுவதும் காய்ந்துவிடும். வேர் உட்பகுதி கருப்பு நிறப் பூசணம் படர்ந்து வேர் அழுகி காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

வயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வயலில் களைகளை அகற்றி தூய்மையாக வைக்கவேண்டும்.
பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்தால் மண்ணில் உள்ள பூஞ்சாணத்தைக் கட்டுப்படுத்தலாம். தண்டுக் குச்சிகளை வயலில் நடுவதற்கு முன் கார்பன்டாசிம் (ஒரு கிராம் / ஒரு லிட்டர் நீருக்கு) அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு (2 கிராம் / 1 லிட்டர் நீருக்கு) மருந்தினை செடிகள் மீது தெளிததும்  செடிகளின் வேர்களைச் சுற்றி ஊற்றியும் கட்டுப்படுத்தலாம். ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தினை ஒரு எக்டருக்கு 5 கிலோ வீதம் 250 கிலோ பொடி செய்யப்பட்ட தொழு எருவுடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மண்ணில் செடிகளைச் சுற்றி இட்டு வந்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியா வாடல் நோய்

இது சேலம் மாவட்டத்தில் ஒரு சில பகதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் சூடோமோனாஸ் சொலலேனநியாரம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகின்றது. இந்நோய் தாக்கப்பட்ட வேர்களின் உட்புறத்தில் பழுப்பு (அ) வெள்ளை நிறக்கோடுகள் தென்படும். இலைகள் பழுப்பு நிறத்துடனும் காணப்படும். அதிக அளவு நோய் தாக்குதல் இருந்தால் வளர்ந்த செடிகளும் காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

ஸ்ட்டிரப்டோசைக்ளின் என்ற மருந்தினை 300 பிபிஎம் என்ற அளவில் மண்ணில் செடிகளின் வேர்களைச் சுற்றி இடவேண்டும். சூடோமோனாஸ் புளோரஸன்ஸ் என்ற பாக்டீரியா உயர்கொல்லி மருந்தினை எக்டருக்கு 5 கிலோ மருந்தை 250 கிலோ தொழு எருவுடன் கலந்து ஒவ்வொரு செடிகளுக்கும்  இடுவதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகின்றது. இந்தத் தருணத்தில் செடிகளை தாழ் அறுத்து மண்ணில் போதியளவு ஈரம் இருக்குமாறு மண்ணைத் தோண்டி  செர்க்கிழங்குகளை சேதமின்றி எடுக்கவேண்டும். இதற்கு உழவுக் கலப்பைக் கொண்டு மேலாக உழுது கிழங்குகளை சேதமின்றி எடுக்கவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 15-20 டன் பச்சை வேர்கள் அல்லது 2000-2200 கிலோ  உலர்ந்த வேர்கள் மகசூலாகக் கிடைக்கும்.

அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி

பச்சை கிழங்குகளை நிளவாக்கலும் குறுக்காகவும் சிறிய துண்டுகளாக கத்திக் கொண்டு வெட்டி, பிறகு வெய்யிலில் சீராக உலர்த்தவேண்டும். கிழங்குகளை வெட்டுவதற்கு கருவிகள் பயன்படுத்தப்படகின்றன. இவ்வாறு துண்டு செய்யப்பட்ட கிழங்குகள் நன்றாக காய்வதற்கு ஒரு வாரம் ஆகும். காய்ந்த கிழங்குத் தண்டுகளில் 8 சதம் மட்டுமே நீர் இருக்கவேண்டும். இத்தகைய கிழங்குகள் .போாஸ்கோலின் வேதிப் பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.