தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: முல்லை

இரகங்கள் : கோ 1 மற்றும் கோ 2

கோ 1

கோ 2

மண்வகை : நன்கு வடிகால் வசதியுள்ள செம்மண் பூமி ஏற்றது.

பருவம் : ஜுன்  - டிசம்பர்

விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : பதியன்பள் வேர்பிடித்து குச்சிகள்

நடும் முறை : நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை எடுத்து, குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவேண்டும். பின்பு பதியன்களை குழிகளின் மத்தியில் நடவேண்டும்.

இடைவெளி : வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய இராசயன உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும். டிசம்பர் - ஜனவரி ஒர முறையும், ஜுன் - ஜுலையிலும் கொடுக்கவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிராம் செடி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் செடி ஒன்றிற்கு)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

முல்லை

120

240

120

470

159

750

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

கவாத்து செய்தல் : ஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் வெட்டிவிடவேண்டும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும். செடி நட்ட இரண்டாம் ஆண்டில் முதல் முறையாக வெட்டிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

பூ மொட்டு புழு : மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி / ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

சிவப்பு சிலந்திப்பூச்சி : நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலை தின்னும் புழு : இவை இலைகளைக் கண்டபடி கடித்துச் சேதப்படுத்தும்.

அறுவடை

மே- நவம்பர்  மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த மொக்குகளை காலை வேளையில் பறிக்கவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் கிடைக்கும்.