தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கிளாடியோலஸ்
 

ஜெர்பரா

இரகங்கள்:

த வே ப க : YCD – 1, YCD – 2
சிவப்பு : ரூபி ரெட், சங்ரியா
மஞ்சள் : டோனி சூப்பர் நோவா, மம்முட், தலசா
ரோஸ் : ரோசலின், சால்வடோர்
இளஞ்சிவப்பு : பிங்க் எலிகன்ஸ், மர்மரா, எஸ்மரா
ஆரஞ்சு : கரேரா, கோலித்மராசோல்
கிரீம் : ஃபேரிடா, டால்மா, ஸ்னோ ப்ளேக், வின்டர் குயின்
YCD-1 YCD-2
காலநிலை
தரமான மலர்களை உற்பத்தி செய்ய நிழல் கூடாரங்கள் அல்லது இயற்கையாக காற்றோட்டமுள்ள கூடாங்கள் தேவைப்படுகின்றன. நாள் வெப்பநிலை 22-250 செ மற்றும் இரவு வெப்பநிலை 12-160 செ இருக்க வேண்டும்.
மண்:
நன்கு வடிகால் வசதியுடைய இளகிய உவர் மற்றும் 5.5 – 7.0 கார அமிலத் தன்மை கொண்ட மண் உகந்தது.
பருவம்:
ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது.

இனப்பெருக்கம்
:
வணிக ரீதியாக கன்றுகள் மற்றும் திசு வளர்ப்பு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.


விளை நிலம் தயாரித்தல் மற்றும் நடவு:

மண்ணில் தோன்றும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த ஃபார்மல்டிஹைடு (100 மிலி in 5லி/மீ2) அல்லது டசோமேட் (30கி/மீ2) கொண்டு மண்ணில் புகைமூட்டுதல் வேண்டும்.1-2 மீ அகலம் மற்றும் 30 செ.மீ உயரம் கொண்டு படுக்கைகள் தயாரிக்க வேண்டும். வளரும் ஊக்கிகளாக தொழுவுரம் : மண் : தேங்காய் நார்/நெல் உமி ஆகியவற்றை (2:1:1) பயன்படுத்தலாம்.
விளை நிலம் தயாரித்தல்

ஜெர்பரா பசுமைக்குடில் சாகுபடி

ஜெர்பரா சாகுபடியைத் தொடங்கும் முன் மண்ணில் உள்ள கிருமிகளை நீக்குவது அவசியமாகும். இல்லையெனில், மண்ணில் தோன்றும் நோய் கிருமிகளான பைத்தோப்தோரா, ப்யூசாரியம் மற்றும் பைதீயம் ஆகியவை பயிர்களை முற்றிலுமாக அழித்துவிடும். படுக்கைகளை 2 சதவிகிதம் ஃபர்மல்டிஹைடு (100 மிலி பார்மலினை 5 லிட்டர் தண்ணீரில் கலக்கவும் / மீ2) அல்லது மீத்தைல் ப்ரோமைடு (70 கி / மீ2) கொண்டு நனைத்து பிறகு பிளாஸ்டிக் இலை கொண்டு குறைந்தது 2 முதல் 3 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பயிரிடும் முன் படுக்கைகளில் நன்கு தண்ணீர் விட்டு இரசாயனங்களை முற்றிலும் வடிகட்ட வேண்டும். நன்கு வளர்ந்த 4-6 இலைகள் கொண்ட திசு வளர்ப்பு நாற்றுகளை கூம்பு மூடாத வண்ணம் நடவு செய்ய வேண்டும்.

இடைவெளி
40x30 செ.மீ அல்லது 30 x 30  செ.மீ
நீர்பாசனம்
சொட்டு நீர் பாசனம் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை 15-20 நிமிடங்கள் 3.75 லிட்டர்/குழாய்/பயிர் அளிக்க வேண்டும். சராசரி நீரின் தேவை நாளொன்றிறிகு 500-700 மிலி/ பயிர்.
ஜெர்பராவில் சொட்டு நீர் பாசனம்
ஊட்டச்சத்து : நடவு செய்த 3 வாரத்திலிருந்த உரமிடுதல் அட்டவணையை பின்பற்ற வேண்டும்.

gerbera ready for harvest
ஜெர்பராவில் சொட்டு நீர் பாசனம்
உரம் அளவு (கிராம்/500மீ2)
A தொட்டி (திங்கள், புதன், வெள்ளி)  
கால்சியம் நைட்ரேட் 700
பொட்டாசியம் நைட்ரேட் 400
இரும்பு ஈ.டி.டி.ஏ/ சல்பேட் 20
B தொட்டி  
மோனோ அமோனியம் பாஸ்பேட் (12:61:0) 300
பொட்டாசியம் சல்பேட் (0:0:50) 700
மக்னீசியம் சல்பேட் 700
மாங்கனீசு சல்பேட் 5
துத்தநாக சல்பேட் 3
காப்பர் சல்பேட் 3
மாலிப்டினம் (சோடியம் மாலிப்டேட்) 1
போரான் (போரக்ஸ்) 3

உரமிடுதல்
அடியுரம்:
வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 2.5 டன்
பாஸ்பரஸ்  - 400 கி/100 சதுர அடி
மக்னீசியம் சல்பேட் - 0.5 கிகி/100 சதுர அடி

மேலுரம்:
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் மூரியட் சல்பேட் 5:3 என்ற விகிதத்தில் கலந்து 2.5கி/தாவரம்/மாதத்திற்கு அளிக்க வேண்டும்.

சாகுபடிக்குப் பின்:

  1. தேவைப்படும்பொழுது கைக்களை எடுக்க வேண்டும்.
  2. 2 மாதங்கள் வரை பூ மொட்டுகளை நீக்கி பின் பூக்கவிட வேண்டும்.
  3. தண்ணீர் மற்றும் உரங்களை எளிதாக உறிஞ்சுவதற்கும், வேரிற்கு காற்றோட்டம் அளிக்கவும் மண்ணை கிளறி விட வேண்டும்.
  4. புதிய இலை வளர்ச்சியை ஊக்குவிக்க நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்த பழைய இலைகளை நீக்க வேண்டும்.

சிறப்பு நடைமுறைகள்:

இலை சீரமைப்பு
அவ்வப்போது பழைய இலைகளை நீக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:
பூச்சிகள்

அசுவினி
இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல் @ 1மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2 மிலி/லி தெளிக்கவும்.

வெள்ளை ஈ
இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல் @ 1மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2 மிலி/லி தெளிக்கவும்.

இலைப்பேன்
ஃப்ரோனில் 2 மிலி /லி அல்லது டைமெத்தோயேட்  2மிலி/லி தெளிக்கவும்.

சிவப்பு சிலந்தி
அபமெக்டின் 1.9 இசி 0.4மிலி/லி அல்லது ப்ரோபர்கைட் 1 மிலி/லி தெளிக்கவும்.

நூற்புழு
வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் சப்டிலிஸ் (BbV 57) அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 2.5 கிகி/எக்டர் நடவு செய்யும்போது மண்ணில் அளிக்க வேண்டும்.

நோய்கள்:
மலர் மொட்டு அழுகல் : காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 கி/லி தெளிக்கவும்.

சாம்பல் நோய் : நனையும் கந்தகம் 2 கி/லி அல்லது அசோக்ஸிஸ்ராபின் 1 கி/லி தெளிக்கவும்.

பூக்கும் மற்றும் அறுவடை பருவம்:

பூக்கள் முற்றிலும் திறந்த நிலையில், அறுவடை செய்ய வேண்டும். மலர் தண்டுகளை சோடியம் ஹைபோகுளோரைடு கரைசலில் (5-7 மிலி/லிட்டர் தண்ணீரில்) 4 முதல் 5 மணி நேரம் ஊற வைப்பதால் ஆயுட்காலம் நீடிப்பு செய்யப்படுகிறது.

அறுவடை பின்சார் தொழில்நுட்பம்:

பூக்கள் தண்டுகளுடன் சேர்த்து அறுவடை செய்யப்படுகின்றன. தண்டுகள் 2-3 செ.மீ விட்டு வெட்டி புதிய குளோரின் தண்ணீரில் வைக்கப்படுகிறது. பிறகு ஒரே மாதிரியாக உள்ள மலர்களாக தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் மலர்கள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு பின்னர் இரண்டு அடுக்குகளாக காட்டன் பெட்டிகளில் வைக்கப்படுகின்றன.

full bloom stage of gerbera
தண்டு உடைதல்:
இது அறுவடைக்குப் பிறகு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும்.

மஞ்சள் மற்றும் ஊதா விளிம்பு:
நைட்ரஜன் பற்றாக்குறையால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. பாஸ்பரஸ் பற்றாக்குறை காரணமாக மஞ்சள் நிறம் மற்றும் ஊதா விளிம்பு தோன்றுகிறது. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் ஜெர்பராவில் மலர் உற்த்தியை அதிகரிக்கலாம்.

தரம் பிரித்தல் :
தண்டின் நீளம் மற்றும் விட்டத்தின் அடிப்படையில் மலர்கள் A,B,C மற்றும் D என தரம் பிரிக்கப்படுகின்றன.

மகசூல்
பயிரின் மகசூல் 2 தண்டுகள் /தாவரம்/மாதம். அறுவடை நடவு செய்த மூன்று மாதத்திலிருந்து இரண்டு வருடம் வரை செய்யப்படுகிறது. திறந்த பகுதியில் 130-160 பூக்கள்/மீ2/வருடம் மற்றும் பசுமைக்குடிலில், 175-200 பூக்கள்/மீ2/வருடம் மகசூல் கிடைக்கும்.