தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கிளாடியோலஸ்
 

கொய் செவ்வந்தி

 

இரகங்கள்: தரமான வகைகள் : பான்பயர் ஆரஞ்சு , பான்பயர் மஞ்சள்.ஸ்ப்ரே வகைகள் : ரேகன் மஞ்சள் ,ரேகன் வெள்ளை, நானாகோ போன்றவை

காலநிலை : கொய் செவ்வந்தி  நிழல் குடில்களில் பின்வரும் சூழலில் வளர்க்கப்படுகின்றன.வெப்பநிலை : 16 - 250Cஈரப்பதம் : 70 - 85%கார்பன்டை ஆக்ஸைடு : 600 - 900 பிபிஎம்

ஒளிக்காலம் : பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 13 மணி நேர ஒளி மற்றும்  11 மணி நேர இருள் 4-5 வாரங்களில் மற்றும் மொட்டு அரும்பும் பருவத்தில் 10 மணி நேர ஒளி மற்றும்  14 மணி நேர இருள் தேவைப்படும்.

மண்: வடிகட்டிய நல்ல காற்றோட்டமுள்ள வண்டல் மண் அல்லது 1:1:2 மண், உரம், மற்றும் தேங்காய் நார் அதனுடன் 5.5 – 6.5 கார அமிலத் தன்மை. 

வளரும் ஊடகங்கள்: வளரும் ஊடகம் மண், உரம் மற்றும் தேங்காய் நார் மட்கு ஆகியவை முறையே 1:1:2 என்ற விகிதத்தில் உள்ளடக்கியது. 1மீ அகலம், 0.3 மீ உயரம் மற்றும் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்க வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 அதனுடன் 1 – 1.5 இசி (மின் கடத்துத்திறன்) இருக்க வேண்டும்.

இனப்பெருக்கம்:

வளர்நுனி துண்டுகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. வணிக ரீதியாக வளர்நுனி துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியமான செடி தண்டிலிருந்து 5-7 செ.மீ. நீளத்திற்கு துண்டுகளை வெட்டி, வேர்களைத் தூண்ட ஐபிஏ ( 1000 பிபிஎம் ) கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும்.

நடவு: 1மீ அகலம், 0.3 மீ உயரம் மற்றும் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்க வேண்டும். (நடவு  இடைவெளி பொறுத்து செல் அளவு ) படுக்கைகள் மீது நடவு செய்யப்படுகிறது. 

இடைவெளி :15x 15 செ.மீ. ( 45 தாவரங்கள் / மீ 2 ) அல்லது 10 x 15 செமீ ( 67 தாவரங்கள் / மீ 2 ). 

நீர்ப்பாசனம்
:சொட்டு நீர் பாசனம் 8 -9 லிட்டர் தண்ணீர் / மீ 2 / நாள் தேவை.

ஊட்டச்சத்து :டிஏபி உரம் -50 கிராம் / மீ 2 அடியுரமாக அளிக்க வேண்டும். வாராந்திர அட்டவணை – நடவு செய்யப்பட்ட 3 வது வாரத்தில் இருந்து

உரம் அளவு (கிராம் / மீ 2)
திங்கள் புதன்
19-19-19 3.0 1.0
பொட்டாசியம் நைட்ரேட் 3.0 1.0
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் 2.0 1.0
அமோனியம் நைட்ரேட் 2.0 1.0
மெக்னீசியம் சல்பேட் 2.0 1.0

உர மேலாண்மை:தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 20:20:10 கிராம்/மீ2  வார இடைவெளியில் உரப்பாசனம் அளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்:அலார் 50 - 150 கிராம் / 100 லிட்டர் தண்ணீர் மற்றும் பி 9  அளவு 8 -25 மிலி/ லிட்டர் தண்ணீர் இரண்டு முறை வளரும் ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

சிறப்பு நடைமுறைகள்:
முனை முறித்தல்: முதல் முனை முறித்தல் - நடவு செய்த 3 வாரங்களில் முதல் முனை முறித்தல் மற்றும் நடவு செய்த 5 வாரங்களில்  2 வது முனை முறித்தல் மேற்கொள்ளப்படுகிறது.

மொட்டு நீக்குதல்:

தெளிப்பு ரகங்களில், நுனி அரும்பு நீக்கப்படுகிறது மற்றும்  பக்கவாட்டு மொட்டுகள் நீக்கப்படுவதில்லை. நிலையான ரகங்களில், பக்கவாட்டு மொட்டுக்கள் நீக்கப்பட்டு  நுனி மொட்டுகள் வளர்க்கப்படுகின்றன.

குருட்டுத் தன்மை:

இது இரவு வெப்பநிலை மிக குறைவாக உள்ள நேரங்களில் ஏற்படுகிறது மற்றும் மொட்டு அரும்பும் காலத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதாலும் இது ஏற்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக பூக்களின் நடு இதழ்கள் திறக்கப்படாமல் இருக்கும் அல்லது சில ரகங்களில் போதுமான உணவு கிடைக்காமல் இதழ்கள் திறக்காமல் போகும். பொதுவாக அதிக பாசனம், அதிக உரம், பூச்சிகள் அல்லது வேர்களில் ஏற்படும் நோய்களால் இலைகளில் பசுமை சோகை அல்லது இலை மஞ்சள் நிறமாகுதல் ஏற்படுகிறது. இரவு வெப்பநிலை மிகக் குறைவாக இருந்தால் தண்டுகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தும் மலர் அரும்புதல் இருக்காது.

ஒளி தேவை:
செவ்வந்தி செடிகளில் ஒளி தாக்கம் அதிகம். எனவே ஒளிக்காலம் கட்டுப்படுத்தப்படுத்த வேண்டும் .
வளர்ச்சி கட்டத்தில் நடவிலிருந்து வாரங்கள் ஒளிக்காலம்
வளர்ச்சி நிலை நடவிலிருந்து 4-5 வாரங்கள் முதல் 50 - 60 செமீ உயரம் வளரும் வரை நீண்ட நாள் : 13 மணி நேர ஒளி மற்றும் 11 மணி நேர இருட்டு
பூக்கும் நிலை நடவிலிருந்து 5 -6 வாரங்கள் முதல் அறுவடை வரை குறுகிய நாள் : 10 மணி நேர ஒளி மற்றும் 14 மணி இருட்டு

Lighting for chrysanthemum

வளர்ச்சி ஊக்கிகள் :பூக்களின் தண்டு நீளத்தை அதிகரிக்க நடவு செய்த 30 , 45 மற்றும் 60 நாட்களில் ஜிஏ 3 ( 50 பிபிஎம் ) தெளிக்கவும் .களை மேலாண்மைதேவைப்படும்பொழுது கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர்பாதுகாப்பு:
பூச்சிகள்
:
இலை துளைப்பான்
:இமிடாகுளோபிரிட் 0.5 மிலி / லிட்டர் அல்லது அசிடாமிபிரிட் 0.3 கிராம் / லி தெளிக்கவும் .

இலைப்பேன்: ஃபைரோனில் 1.0 மிலி / லி தெளிக்கவும் . மஞ்சள் ஒட்டும் பொறி 100 ச.மீ பகுதிக்கு 10 எண்கள்  என்ற அளவில் வைக்கவும்.:

அசுவினி மிதைல் டெமட்டான் 2 மிலி / லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி / லி தெளிக்கவும்.

சிவப்பு சிலந்தி
அபாமெக்டின் 1.9 இசி / லி அல்லது ப்ரோபர்கை0.5 மிலி / லி தெளிக்கவும் .

நோய்கள்
:

வெள்ளை துரு நோய்
:அசோக்சிஸ்ட்ராபின் 1 மிலி / லி அல்லது ட்ரைபுளுக்சிஸ்ட்ராபின் 0.75 கிராம் /லி தெளிக்கவும் .

இலைப்புள்ளி: மேன்கோசெப் 2கி/ லி அல்லது டைபெனோகோனாசோல் 0.5 மிலி /லி தெளிக்கவும் .

வாடல் நோய்
:கார்பன்டீசம் 1 கி/ லி அல்லது  ட்ரைபுளுக்சிஸ்ட்ராபின் + டெபுகோனசோல் 0.75 கிராம் / லி கொண்டு மண்ணில் மருந்தூட்டல் வேண்டும்.சாம்பல் நோய் : நனையும் கந்தகம் 2 கி/லி அல்லது அசோக்சிஸ்ட்ராபின் 1 மிலி/லி தெளிக்கவும்.

அறுவடை: அறுவடை குறியீடுநிலையான வகை : 2 – 3 வரிசை மலர் பிரிவுகள் செங்குத்தாக இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.தெளிப்பு வகை - தொலைதூர சந்தைகளுக்கு 50% மலர்கள் நிறம் வரும்போது; உள்ளூர் சந்தைகளுக்கு இரண்டு மலர்கள் திறந்து மற்றும் நிறம் வரும் போது அறுவடை செய்யலாம்.
Chrysanthemum ready to harvest
மகசூல்:நிலையான வகைகள் : 67 மலர் தண்டுகள் / மீ 2 தெளிப்பு வகை: 260 மலர் தண்டுகள் / மீ 2

அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்
:

துடிப்பு : சுக்ரோசில் 4 %த்தில் 24 மணி நேரம்
( வாழ்க்கை : 18 நாட்கள் ; கட்டுப்பாடு : 8.5 நாட்கள் )
வைக்கவேண்டிய கரைசல் : பி.ஏ. 10 பி.பி.எம் + பெவிஸ்டின் 0.1% + சுக்ரோஸின்அளவு 2 %
(வாழ்க்கை : 17 நாட்கள் ; கட்டுப்பாடு : 8.5 நாட்கள் )
போர்த்தி பொருள் : துளைகள் கொண்ட பாலிஸ்லீவ்ஸ்
( 50 காஜ் தடிமனுள்ள )(வாழ்க்கை : 9.25 நாட்கள் ; கட்டுப்பாடு : 6.5 நாட்கள் )

அறுவடைக்குப் பின்னர், தண்டுகள் ஓரே அளவாக (பொதுவாக 90 செமீ) நீளம் கொண்டு வெட்ட வேண்டும். ஐந்து பூக்களை கொத்தாக ரப்பர் பேண்ட் போட்டு பிளாஸ்டிக் ஸ்லீவில் வைத்து தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் வைக்க வேண்டும். அட்டைப்பெட்டிகளில் பேக் செய்ய வேண்டும்.


Source
1. www.flickr.com/.../in/set-72157600279486684/ 
2. flickr.com/photos/globetrotter1937/182189741/