- சாதாரண (அ) பொதுவான நெட்டை இரகம் என்று       அழைக்கப்படுகிறது. 
 
        - மண்: மேற்கு கடற்கரை நெட்டை இரகங்கள் எல்லா மண் வகைகளிலும்  வளரும்    . குறிப்பாக மணல் போன்ற  மண்வகைகளில் நன்றாக வளர்கிறது. மேலும் மண்ணில் உள்ள ஈரபதத்தைத்  தாங்கி வளரும் தன்மை கொண்டது
 
        - காய்க்க ஆரம்பிக்கும் காலம் 6 முதல் 7ம்       ஆண்டிலிருந்து, சராசரி உற்பத்தி ஆண்டு ஒன்றிற்கு ஒரு       மரத்திற்கு 80 காய்கள் ஆகும்
 
        - கொப்பரைத் தேங்காயின் அளவு 176 கிராம் /காய்க்கு, 135 முதல் 200 கிராம் வரை இருக்கும்
 
        - எண்ணெயின் அளவு 68%
 
     
சிறப்பு அம்சங்கள் 
      
        - தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத்,       பீகார், மத்திய பிரதேஷ், இலட்சத்தீவு, ஒரிஷா மற்றும் திரிபுரா போன்ற       பகுதிகளில் பெரும் பரப்பளவில் சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது.
 
           - மேலும் இந்த இரகத் தென்னை மரங்களில், பால்வடிப்பு செயல் முறையின் மூலம்,       நல்ல அளவு மற்றும் தரம் வாய்ந்த கள் எடுக்கப் படுகிறது. இந்தக்       கள்ளைப் பதப்படுத்துதல் மூலம் வெல்லம் (அ) சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
 
           - இது உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் சோப்பு       தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 
 
        |