தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: மலை வேம்பு மரச்சாகுபடி பற்றிய குறிப்பு
பொதுப்பெயர்:மலைவேம்பு
தாவரவியல்
பெயர் :மீலியாடூபியா

மலைவேம்பானது இந்தியாவை தாயகமாக கொண்டு வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். இது எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மையை பெற்றுள்ளது. இருப்பினும் வளமான மண் மற்றும் நீர் வசதி கொண்ட இடங்களில் நன்கு வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் வரை வளரக் கூடியது.

நடவுப்பருவம் : வடகிழக்கு பருவ மழையின் போது நடவு செய்ய வேண்டும்.
இடைவெளி: ஒவ்வொரு செடிக்கும் 3×3 மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
நாற்றுக்களின்
எண்ணிக்கை : ஏக்கருக்கு 444 கன்றுகள்

மலை வேம்பு மரம்



இலைகள்
கனிகள்

குழிகள் அளவு: 1 கன அடி

நிலம் தயார் செய்தல்

தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்த பின் சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு கொக்கி கலப்பையைக் கொண்டு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். நிலத்தினை நன்றாக தயார் செய்த பிறகு 3×3 மீ இடைவெளி விட்டு (வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி) 1 கன அடி குழிகள் எடுக்க வேண்டும்.

நடவு முறை

45×45×45 செ.மீ. நீளம். அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழியில் மக்கிய தொழு உரத்துடன் உயிர் உரத்தை கலந்த அடி உரமாக (25-50 கிராம்) குழிகளுக்கு முறையே இட வேண்டும். இவ்வாறு சரியான விகிதத்தில் நிறப்பட்ட குழிகளில் பாலிதின் பைகளில் வளர்க்கப்பட்ட ஒரு அடி உயரமுள்ள கன்றுகளை நட வேண்டும்.

மலை வேம்பு கன்று நடவு

பராமரிப்பு

அவ்வப்போது களைகள் அதிகமாக இருக்கும் பொழுது நன்றாக உழுது விட வேண்டும். இவற்றைக் தவிர செடியை சுற்றி நன்றாக கொத்தி அதே மண்ணைக் கொண்டு வட்டப்பாத்தி அமைத்தல் வேண்டும், இவை மழை நீரை சேமிக்க உதவுகிறது. இந்த வட்டப்பாத்தி முடு பள்ளத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். முதல் ஆண்டிலேயே பழுதான நாற்றுக்களை நீக்கிவிட்டு புதிய கன்றுகளை நடவேண்டும்.மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கும் களையின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தோட்டத்தில் கிடைக்கும் தழை இலைகளை வைத்து போர்வை இடுதல். அத்துடன் இவை அதிக அளவில் மண்புழு வளர ஏதுவாக இருக்கும்

பயன்கள்

மாற்று மரக்கூழ் மற்றும் தீக்குச்சி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரம் பிளைவுட், எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

Updated on : April, 2015

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015