நோய் மேலாண்மை

பெரோனியா எலிபான்டம்

குடும்பம் : ரூட்டேசி
தமிழ் பெயர் : வில்வம்
பயன்கள்:
தீவனம் : ஆடுகளுக்கு ஏற்றது.
வேறு பயன்கள் : வீடு கட்டுவதற்கு மரக்கட்டைப் பயன்படுகிறது. வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. தொண்டைக் கட்டிற்கு பழம் மருந்தாகப் பயன்படுகிறது. மரம் நல்ல பசையைத் தருகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : அக்டோபர் – டிசம்பர்
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 49130 / கிலோ
முளைத்திரன் : இரண்டு மாதங்கள் வரை
முளைப்பு சதவீதம் : 66 %
விதை நேர்த்தி : கடினமான பழங்களை நசுக்கி மணலுடன் கலக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாத்தியில் நட வேண்டும். நேரடியாகப் பாலித்தீன் பைகளில் நடலாம். 15 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும். ஒரு வருடம் வயதுள்ள நாற்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016