சார் உறிஞ்சும் பூச்சிகள்

சார் உறிஞ்சும் பூச்சிகள் :
தீவிர பூச்சிகளான சார் உறிஞ்சும் பூச்சிகள் நாற்றுகளின் அழிவிற்கு மிக முக்கிய காரணிகளாகின்றன. இந்த பூச்சிகளின் வாய்பகுதியானது ஸ்டைலட் மற்றும் குழாய்களாக மாற்றம் அடைந்துள்ளன. தாவர பரப்புகளில் குறிப்பாக இளம் இலைகள், மென்மையான தளிர்கள் போன்ற பகுதிகளில் ஒரு துளையிட்டு (சேப் என்ற பகுதிகளில்) சாற்றை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றன. பொதுவாக இவ்வித பூச்சிகள் தாவரத்தின் சேப் என்ற பகுதிகளில்  அதிக  எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேலும் சில பூச்சிகளில் பைட்டோடாக்ஸ்ஸியா என்ற எச்சில் (வேதிப் பொருள்) குறைந்த அளவில் உள்ளது. இது தாவரப் பகுதியில் உள்ள செல்களை சுற்றிலும் நசிவு காரணமாக முழு தாவரம் கூட உயிர் இழக்க நேரிடும். மேலும் மாவுப் பூச்சி, மெம்ராஸைடுஸ், யூரிபிராச்சிள்ஸ் போன்ற பூச்சிகள் வன நாற்றாங்கால்கள் மற்றும் மரக் கன்றுகளை கடுமையாக தாக்கி அழிக்கின்றன. இவை பெரும்பாலும் ஜீன் மாதத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மேலாண்மை நடவடிக்கைகள் :
  • பாதிக்கப்பட்ட நாற்றுகளை இடம் பெயர்த்து அழிக்க வேண்டும்.
  • இயற்கை எதிரிகளை அறிந்து நாற்றாங்கால் இருக்கும் இடத்தில் பரவச் செய்ய வேண்டும்.
  • வேதிப் பொருட்களான மீத்தைல் டிமட்டோன், டைமெத்தோயேட் 30EC, பார்மோத்தியான் 25 EC, பாஸ்பாமின்டான் 85 EC @ 1 மிலி/லி. (அ) அஸிபேட் 75 sp@ 1 கி/லி என்ற வீதத்தில் கலந்து தெளிப்பதன் மூலம் சேப் திண்ணும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • ஆரம்ப நிலையில் துரிதமாக கண்டறிந்து இவ்வகை பூச்சிகளை அழிப்பது மிகுந்த பலனைத் தரும்.
Updated on May, 2014
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014