தேங்காய் - விற்பனை தகவல்கள் :: தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் (NAFED)

1. தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம்  (NAFED)
தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கமும் தென்னை வளர்ச்சி வாரியமும் [CDB] இணைந்து, கொப்பரைத் தேங்காய் பதனிடுதல் செய்யும் சிறு தொழில் முனைவோரை,  மதிப்பூட்டப்பட்ட தேங்காய்ப் பொருட்கள் உற்பத்தியில் களமிறக்க முடிவு செய்துள்ளது.  அப்பொருட்கள் NAFED அடையாளத்தில் விற்பனை செய்யப்படும்.  தரம் சோதிக்கும் சோதனைக் கூடங்கள் அமைக்க நிதியுதவி அளித்து, தரமான பதனீட்டு பொருட்கள் உற்பத்திக்கு வழிவகுக்கப்படும்.  தேங்காய் பொருட்களை காமன்வெல்த் போட்டிகளில் அறிமுகப்படுத்த இக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.  மேலும் வாங்கிய கொப்பரைத் தேங்காய்களை, ஆயில் மில்லுக்கு அனுப்பி, அவர்களிடம் இருந்து தேங்காய் எண்ணெயைப் பெற்று, NAFED அடையாளத்துடன் விற்பனை செய்ய உள்ளது

தொடர்புக்கு

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட்(நேவெட்),
என்.ஏ.எப்.இ.டி, மனை, சித்தார்த்தா வளாகம்,
ரிங்ரோடு, ஆசிரமம் செளக்,
புதுடெல்லி-110014
தொலைபேசி EPABX : 011-26340019, 26341810
தொலைபிரிதி: 091-11-26340261, www.NAFED-india.com

 








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved