தேங்காய் - விற்பனை தகவல்கள் :: கேராபெட் - கேரளா கேரகர்ஷகா சகாகர்ணா பெடரேசன் லிமிடெட் - KERAFED

கேராபெட் - கேரளா கேரகர்ஷகா சகாகர்ணா பெடரேசன் லிமிடெட் - KERAFED

கேரள தென்னை விவசாயிகள் கூட்டுறவு ஸ்தாபனத்தின் முதன்மை அமைப்பாகும்.  கொள்ளம் மாவட்ட கருணகப்பள்ளியில் உள்ள கேராபெட்டின் தேங்காய் எண்ணெய் மில் இந்திய அளவில் ஒரு பெரிய ஸ்தாபனம் ஆகும்.  இதன் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 200 டன் ஆகும்.  தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காயிலிருந்து நல்ல தரமான “கேரா” அடையாளம் கொண்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.  பொருளின் முதன்மைத் தரத்தை காக்க,  கொப்பரைகளை தேர்வு செய்யும் போதும் பதனிடும் போது கண்டிப்பான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

செயல்பாடுகள்:
கேரள மாநிலத்தை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் என மூன்றாகப் பிரித்து,  அன்றாட நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை சிறப்பாக நடத்தி வருகிறது.   ஒவ்வொரு மண்டலங்களிலும் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் விற்பனையில் உதவி செய்ய சுமார் 300 துவக்க வேளாண் கடனுதவி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

தொடர்புக்கு:
கேரளா கேரகர்ஷாகா சாகாகர்னா சம்மேளன நிறுவனம்,
கேரா கோபுரம், நீர் பணிகள் வளாகம், வேலாயம்பாலம், விகாஸ் பவன் (அஞ்சல்)
திருவனந்தபுரம் மாவட்டம், கேரளா மாநிலம், இந்தியா - 695 033.
தொலைபேசி :00- 91- (0)471- 2321660, 2326153, 2326209, 2326736
தொலைபிரிதி:00-91-(0)471- 2326298
மின்னஞ்சல்: Kerafed@giasmdo1.vsnl.net.in | www.kerafed.com

 








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved