தேங்காய் - விற்பனை தகவல்கள் :: மார்கெட் பெட்

மார்கெட் பெட்
          
மார்கெட்பெட் முதலில் தென் மலபார் மாவட்ட மொத்த கூட்டுறவு கடை அமைப்பாக 24 டிசம்பர் 1942 முதல் மலபார் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்தது.  தனது வியாபாரத்தை 14-1-1943 இல் தொடங்கியது.  பின்னர் 1958, கூட்டுறவு விற்பனை சங்கமாக மாற்றப்பட்டு, தென் மலபார மாவட்ட கூட்டுறவு சரக்கு விற்பனை சங்கமாக செயல்பட்டது. 10 ஆம் தேதி ஆகஸ்ட் 1960, இல் இச்சங்கம், விற்பனைக் கூட்டுறவு சங்கங்களின் தலைமையாக மாற்றப்பட்டு, “ தி கேரளா ஸ்டேட் கோஆப்பரேடிவ் மார்க்கெட்டிங் பெடரேசன் லிமிடெட்” ஆக மாற்றப்பட்டது.  அதன் பின்னர் கேரள மாநில முழுவதும் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.
       
கொப்பரைத் தேங்காய் பறிமுதல் செய்வதில், மார்க்கெட்பெட் முதன்மையாக விளங்குகிறது.  1994-95 இல் 13,003 டன் கொப்பரை பறிமுதல் செய்தது.  இதன் மதிப்பு ரூ 300 லட்சம் ஆகும்.  துவக்க விற்பனை சங்கங்களின் மூலம் வாங்கப்பட்ட கொப்பரைத் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்து அதனை ‘கேராஜாம்’ அடையாளத்தில் விற்பனை செய்கிறது.  நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

தொடர்புக்கு:

கேரளா மாநில கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம்,
அஞ்சல் எண்: 2024, காந்தி நகர், கெச்சி - 682 020
கேரளா, இந்தியா
தொலைபேசி : 91 - 0484 - 2203879, 2205318, 2203885, 2203880, 2203332, 2203471
தொலைபிரிதி: 91 - 0484 - 2203375 | மின்னஞ்சல்: marketfedekm@dataone.in








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved