தேங்காய் - விற்பனை தகவல்கள் :: தினசரி சந்தை நிலவரம் (DMI)

தினசரி சந்தை நிலவரம் (DMI), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  கோயமுத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் ஐதராபாத்தில் உள்ள சிடேக் இன் இந்திய முன்னேற்ற நுழைவாயிலும் இணைந்து தினசரி  சந்தை நிலவரச் சேவையை துவங்கியுள்ளது. தமிழகத்தின் முக்கிய சந்தைகளின் காய்கறிகள் மற்றும் கனிகளின் அன்றாட விலை நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படுகிறது,

  • அன்றாட சில்லறை மற்றும் மொத்த விலை நிலவரம் பற்றிய தகவல்களை 151வேளாண் பொருள்களுக்கு வழங்குதல் (62 காய்கறிகள்,  34 பழங்கள்)
  • 13 சந்தைகளின் விற்பனை அமைப்பை புகைப்படங்களுடன் அளித்தல்
  • விவசாயிகள் சங்கம், கூட்டமைப்பு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முகவரி மற்றும் வெற்றிபெற்ற விவசாயிகளின் சிறந்த கடைப்பிடிப்புகள் போன்றவற்றை அளித்தல்
  • ஓப்பீடு செய்வதற்காக முந்தைய நாள்/வாரம்/மாதங்களின் விற்பனைத் தகவல்களை வழங்குதல்

தொடர்புக்கு:
இயக்குநர் (சமிதி) விரிவாக்க கல்வி இயக்கம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோயமுத்தூர் – 641 003
தொலைபிரிதி: 0422 – 6611433
மின்னஞ்சல்: portal@tnau.ac.in | http://agritech.tnau.ac.in | www.indg.in

வாயிலாக வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கு அன்றாட விற்பனைத் தகவலின் சேவை.
       
எளிதில் அழுகிப் போகக் கூடிய வேளாண் பொருட்கள் விற்பனைக்கு சரியான நேரத்தில் நம்பகமான விற்பனைத் தகவல் சேவை.  உரிய நேரத்தில் விற்பனைத் தகவல்கள் கிடைக்காததாலும், இடைத்தரகர்களின் குறுக்கிட்டாலும் விவசாயிகள் தங்களது பொருட்களை அருகில் உள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்க உந்தப்படுகிறார்கள். எனவே பிற சந்தைகளின் தேவை மற்றும் விலையை அறிந்து கொள்வதன் மூலம் விவசாயிகள் அன்றாடம் தங்களது பொருட்களை நல்ல உயர்ந்த விலைக்கு விற்கலாம்.  உரிய நேரத்தில் அறுவடை செய்து,  அதிகமான விலை உள்ள சந்தைகளுக்கு தங்களது பொருட்களை எடுத்துச் செல்ல முடிகிறது.  தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பங்களான செல்போன்கள் போன்றவற்றின் மூலம் உரிய நேரத்தில் உரிய தகவல்களைப் பெற முடிகிறது.  இவ்வாறு விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கான துல்லியமான விற்பனைத் தகவல்களைத் அன்றாட விற்பனைத் தகவல் சேவை தினமும் வழங்கி வருகிறது.

தற்பொழுது எந்தெந்த சந்தைகளின் நிலவரங்கள் அளிப்படுகிறது?
பெங்களுர்- K.R. மார்கெட், சென்னை-கோயம்பேடு மார்கெட், கொச்சின்- எர்ணாகுளம் மார்கெட், கோயமுத்தூர் மார்கெட், ஓசூர் - காய்கறி வணிகர் சங்க மார்கெட், கும்பகோணம் மார்கெட், மதுரை மார்கெட், மேட்டுப்பாளையம் மார்கெட், ஒட்டண்சத்திரம் - காய்கறி மார்கெட், பண்ருட்டி மார்கெட், தலைவாசல் மார்கெட், திருநெல்வேலி மார்கெட், திருச்சி  காந்தி மார்கெட்.

எவ்வாறு தகவல்களைப் பெறலாம்?

  • தினமும் பிற்பகல் 2 மணிக்கு முன் விலை நிலவரங்களை www.indg.in/india/market_information தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தகவல்களை பெறலாம் www.tnau.ac.in  வலைதளத்திலும் தகவல்கள் கிடைக்கும்.
  • பல்வேறு சந்தைகளில் இருந்தும் விற்பனை ஆய்வாளர்கள், விலையை சேகரித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகின்றனர்.  தினமும் உடனடியாக இத்தகவல்கள் வலைதளத்தில் ஏற்றப்படுகிறது.
  • பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்வதற்கான வசதி விரைவில் வரவுள்ளது.

தற்பொழுது அன்றாட விற்பனைத் தகவலில் உள்ள சேவைகள் என்ன?
அன்றாட சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை நிலவரம் - 160 பொருட்களுக்கு [68 காய்கறிகள் 36  பழங்கள்,  37 பூக்கள், 11 மணமூட்டும் பயிர்கள் 8 மலைத் தோட்டப்பயிர்கள் (தேங்காய்))

  • 13 சந்தைகளின் விற்பனை அமைப்பு புகைப் படங்களுடன் வழங்குதல்
  • விவசாய சங்கங்கள், கூட்டமைப்புகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முகவரி மற்றும் வெற்றிபெற்ற விவசாயிகளின் சிறந்த செயல்முறைகள் போன்றவற்றை ஒப்பீடு செய்வதற்காக, முந்தைய நாள்/வாரம்/மாதங்களின் விற்பனைத் தகவல்களை வழங்குதல்

யாரெல்லாம் பயனாளிகள் ஆவர்?
விவசாயிகள்,  விவசாய சங்கம்,  விவசாய கூட்டமைப்பு, வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பயிர் மருத்து மையங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும் தொழிற்சாலைகள் இச்சேவையின் பயனாளிகள் ஆவர்.

மேலும் விவரங்களுக்கு...
இயக்குநர் (சமிதி) விரிவாக்க கல்வி இயக்கம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
கோயமுத்தூர்– 641003. தொலைபேசி : 0422 – 6611233 / 6611383   
மின்னஞ்சல்: portal@tnau.ac.in

&

இந்திய முன்னேற்ற நுழைவுவாயில் (ஐ.என்.டிஜி)
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்), ஜவஹர்லால்
நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஜே.என்.டி.யூ) வளாகம்,
குக்கபள்ளி, ஹைதராபாத் - 500085,
தொலைபேசி – 040 – 213150115  
மின்னஞ்சல்: indg@cdac.in








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved