தேங்காய் - விற்பனை தகவல்கள் :: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் (DEMIC, TNAU)

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் (DEMIC, TNAU)
தமிழகத்தில்  உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் புதிதாக வந்துள்ள மற்றும் பரிவர்த்தகம் செய்யப்படும் வேளாண் பொருட்கள் பற்றிய தகவல்களை அக்மார்க்நெட் வாயிலாகப்பெற்று, சந்தை தகவல் மையம் செய்தி வெளியிடுகிறது. இத்தகவல்களைக் கொண்டு, பின் வரும் மாதங்களில், வேளாண் பொருட்களின் எதிர்கால விலை கணித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அனுப்புவதுடன், அதனை வலைதளம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் மூலம் விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்கிறது.  அண்டை மாநிலங்களில் உள்ள விலை நிலவரத் தகவல்களும் அளிக்கப்படும்.  இதனால் விவசாயிகள் தங்களின் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும்.  மேலும் சரியான பயிர் சுழற்சி முறையை தேர்வு செய்து, உரிய நேரத்தில் மகசூல் எடுத்து நல்ல லாபம் பெற்றிடலாம்.

குறிக்கோள்கள்:

  • தமிழகத்தில் உள்ள முக்கிய வேளாண் பொருட்களின் எதிர்கால தேவை மற்றும் அளிப்பு நிலை பற்றிய தகவல்களை முன்னறிவிப்பு செய்தல்
  • முக்கியமான வேளாண் பொருட்களின் எதிர்கால விலையை கணித்து முன்னறிவிப்பு செய்தல்
  • முக்கியமான வேளாண் பொருட்களின் மாநில மற்றும் தேசிய சந்தை நிலவரம் குறித்த நிலையை ஆராய்தல்
  • திட்டமிட்டு விவசாயம் செய்யவும், வேளாண் பொருட்களை ஏற்ற விலை வரும் வரை சேமித்து கொள்வதற்கும் உரிய விற்பனை மற்றும் விலை நிலவரங்களை விவசாயிகளுக்கு அளித்தல்
  • தமிழக அரசிற்கு விற்பனை கொள்கை அறிக்கைகளை பரிந்துரை செய்தல்

தொடர்புக்கு:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்(DEMIC),
வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோயமுத்தூர்-3
தொலைபேசி : 0422-6611439 6611439
 directorcards@tnau.ac.in 
www.tnau.ac.in








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved