தேங்காய் - விற்பனை தகவல்கள் :: வேளாண்மை மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அளவை, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

.வேளாண்மை மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அளவை,  வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்,  இந்திய அரசு
இந்திய அரசு, டிசம்பர் 1985 இல் பாராளுமன்றத்தில் வேளாண்மை மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அள்வைச் சட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அளவையினை தொடங்கியது.

  • பட்டியலிடப்பட்ட ஏற்றுமதி பொருட்களுக்கான தொழிற்சாலைகள் துவங்குவதற்கான நிதியுதவி அளித்தல், அல்லது கணக்கெடுப்பு, நிவாரணம் மற்றும் மானிய திட்டங்களுக்காக நிதியளித்தல்
  • ஏற்றுமதி பொருட்களுக்கான பரிந்துரை செய்யப்பட்ட கட்டணம் செலுத்தி, ஏற்றுமதியாளராக பதிவு செய்து கொள்ளுதல்
  • ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம் பிரிப்பிற்கான அளவுகோல், மற்றும் குறிப்பீடுகளை நிர்ணயம் செய்தல்
  • மாமிசம் மற்றும் மாமிசப் பொருட்களை, ஆடுமாடு வெட்டும் இடங்கள், பதனிடும் இடங்கள், சேமிப்பு கிடங்குகள், எடுத்துச் செல்லும் இடங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தரக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல்
  • பட்டியலிடப்பட்ட பொருட்களை சிறப்பாக பெட்டியிடுதல்
  • பட்டியலிடப்பட்ட பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு சிறந்த முறைகளை கையாளுதல்
  • ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு ஊக்குவித்தல், பட்டியிலிடப்பட்ட பொருட்களை விருத்தி செய்தல்
  • ஏற்றுமதிக்கு பட்டியலிடப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை உரிமையாளர்களிடம் இருந்து,  உற்பத்தி,  பதனிடுதல், பெட்டியிடுதல், விற்பனை செய்தல் போன்ற புள்ளியில் விபரங்களை சேகரித்து, அத்தகவல்களை வெளியீடு செய்தல்
  • ஏற்றுமதி பொருட்கள் உற்பத்திக்கான பல்வேறு நிலைகளில் பயிற்சி அளித்தல்
  • பரிந்துரைக்கப்பட்ட ஏனைய தகவல்கள்

வேளாண்மை மற்றும் பதினிடப்படும் உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆள்கை தனது தலைமை அலுவலகம்,  5 மண்டல  அலுவலகங்கள் மற்றும் 13 தனி அலுவலகங்கள் மூலம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சமூகத்தினருக்கு தனது சேவை ஆற்றி வருகிறது.

தலைமை அலுவலகம்: புதுடில்லி

மண்டல அலுவலகம்: மும்பை, கொல்கத்தா, பெங்களுர், ஐதராபாத் மற்றும் கெளஹாத்தி

தொடர்புக்கு...
தலைமை அலுவலகம்: புதுடெல்லி
மண்டல அலுவலகங்கள்: மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கெளஹாத்தி
வேளாண் பதப்படுத்துப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்,
(வணிகத் தொழில்துறை அமைச்சகம், இந்திய அரசு)
என்.சி.யூ.ஐ கட்டிடம் 3, சிரி நிறுவனப் பகுதி, ஆகஸ்ட் கிராண்டி மார்க்,
புது டெல்லி – 110 016
தொலைபேசி : 91-11-26513204,26514572,26534186
தொலைபிரிதி: 91-11-26526187
headq@apeda.com | www.apeda.com








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved