தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

இரகங்கள்/ஒட்டுகள்
1. குட்டை இரகங்களின் பண்புகள் யாவை ?

  • குட்டை இரகங்கள் 5-7 மீ உயரம் உடையவை.  நெட்டை இரகங்களை விட மிக விரைவில் காய்ப்புக்கு வந்துவிடுகின்றன.
  • நடவு செய்த மூன்றாவது வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விடுகின்றன.  பின்னர் 9 வது வருடம் முதலில் நிலையான காய்ப்புக்கு வருகின்றன.
  • சராசரி ஆயுட்கால் 40-50 வருடங்கள்
  • குட்டை இரகங்களில் பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற தேங்காய்கள் உள்ளன.
  • வறட்சியை தாங்கும் தன்மை இல்லை
  • காய்கள் சிறியதாகவும், முட்டை வடிவத்திலும், உருண்டையாகவும் இருக்கும்
  • தேங்காயின் எடை 85 கிராம், 65 % எண்ணெய் உள்ளது

2. வீரிய ஒட்டுகளின் பண்புகள் யாவை?

  • இரு புறவமைப்பியல் கொண்ட தென்னை வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது கலப்பினம் ஆகும்
  • பெற்றோர்களைவிட, விரைவாகப் பூக்கும் தன்மை, அதிக தேங்காய் எண்ணிக்கை கொண்ட மகசூல், அதிக கொப்பரை உற்பத்தி, தரமான கொப்பரை மற்றும் எண்ணையை போன்ற பண்புகளை வீரிய ஒட்டுகள் பெற்றுள்ளன.
  • நெட்டை x குட்டை மற்றும் குட்டை x நெட்டை என நெட்டை, குட்டை வகைகளை பெண் மற்றும் ஆணாக மாற்றி பரிமாற்றக் கலப்பு செய்து வீரிய ஒட்டுகள் உருவாக்கப் படுகின்றன.
  • மேலும் நெட்டை x நெட்டை மற்றும் குட்டை x குட்டை எனவும் சிற்றினக் கலப்பு செய்து வீரிய ஒட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

3. தமிழ்நாட்டிற்கு ஏற்ற நெட்டை இரகங்கள் யாவை ?

  • மேற்கு கடற்கரை நெட்டை
  •  சந்திரகல்பா (அ) இலட்சத்தீவு சாதாரண நெட்டை LCT
  • வி.பி.எம்-3
  • கிழற்கு கடற்கரை நெட்டை
  • ஆழியார் நகர்  1
  • கேர சந்திரா (பிலிப்பைன்ஸ் சாதாரண நெட்டை)

4. கேரளாவிற்கு உகந்த நெட்டை இரகங்கள் யாவை ?

  • மேற்கு கடற்கரை நெட்டை
  • சந்திரகல்பா (அ) இலட்சத்தீவு சாதாரண நெட்டை
  • பிலிப்பைன்ஸ் சாதாரண நெட்டை (கேரசந்திரா)
  • வி.பி.எம்-3 (அந்தமான் சாதாரண நெட்டை தேர்வு)
  • கேரசாகரா

5. கார்நாடகாவிற்கு உகந்த நெட்டை இரகங்கள் யாவை?

  • மேற்கு கடற்கரை நெட்டை
  • திப்தூர் நெட்டை
  • சந்திரகல்பா
  • வி.பி.எம்-3 (சாதாரண அந்தமான் நெட்டை இரகத் தேர்வு)
  • கேர சந்திரா

6. எந்தெந்த குட்டை இரகங்களை தமிழகத்தில் நடலாம்?

  • சவ்காட் ஆரஞ்சு குட்டை
  • சவ்காட் ஆரஞ்சு பச்சை

7. கேரளாவில் நடவு செய்ய உகந்த குட்டை இரகங்கள் யாவை?

  • சவ்காட் ஆரஞ்சு குட்டை
  • சவ்காட் பச்சை குட்டை

8. கர்நாடகவிற்கு உகந்த குட்டை இரகங்கள் யாவை?

  • சவ்காட் ஆரஞ்சு குட்டை

9. தமிழ்நாட்டிற்கு உகந்த வீரிய ஒட்டு இரகங்கள் யாவை?

  • கேரசங்கரா
  • சந்திர சங்கரா
  • கேர செளபாக்யா
  • வி.ஹெச்.சி  1
  • வி.ஹெச்.சி 2
  • வி.ஹெச்.சி 3

10. கேரளாவிற்கு உகந்த வீரிய ஒட்டுகள் யாவை ?

  • கேரசங்கரா
  • சந்திர சங்கரா
  • சந்திர லக்ஷா
  • கேரகங்கா
  • லக்ஷகங்கா
  • ஆனந்தகங்கா
  • கேரஸ்ரீ
  • கேரசெளபாக்யா

11. கர்நாடகாவில் தென்னை சாகுபடிக்கு ஏற்ற வீரிய ஒட்டுகள் யாவை?

  • கேரசங்கரா
  • சந்திர சங்கரா
  • சந்திர லக்ஷா
  • கேரசெளபாக்யா

12. எந்த நெட்டை இரகத்தில் அதிக மகசூல் கிடைக்கிறது?
நெட்டை இரகங்களில், ஆழியார் நகர் 1 இரகம் ஒரு வருடத்திற்கு, ஒரு மரத்தில் 126 காய்கள் காய்க்கின்றன.  பிலிப்பைன்ஸ் சாதாரண நெட்டை மற்றும் சந்திரகல்பா நெட்டையும் முறையாக சராசரியாக 110 காய்கள்/மரம்/வருடம் மற்றும் 100 காய்கள்/மரம்/வருடம் காய்க்கின்றன.

13.
எந்த நெட்டை இரகம் அதிக கொப்பரைத் தருகிறது?
மேற்கு கடற்கரை நெட்டை, சாதாரண பிலிப்பைன்ஸ் நெட்டை மற்றும் கேரசாகராவும் ஒரு காய்க்கு 200 கிராம் கொப்பரை மகசூல் தருகின்றன.

14.
அதிக எண்ணெய் மகசூல் தரக்கூடிய நெட்டை இரகங்கள் யாவை?
வி.பி.எம்-3, 70% எண்ணெயும், சந்திரகல்பா (அ) எல்.சி.டி 72% எண்ணெயும் தருகின்றன.

15.
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நெட்டை  இரகங்கள் யாவை?
ஆழியார் நகர் 1 - தமிழ்நாட்டில், ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம்  இந்த இரகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் சாகுபடிக்காக வெளியிட்டது.
வி.பி.எம்-3 - 1994 இல் தமிழ்நாட்டின் வேப்பக்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்த இரகத்தை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, கேரளா, அந்தமான், ஆந்திரா, பீகார், அஸாம்,  ஒரிசா, மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் சாகுபடி செய்யலாம்.

16.
கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள நெட்டை இரகங்கள் யாவை?

  • சந்திரகல்பா (அ) எல்.சி.டி- 1985 இல் காசர்கோடில் உள்ள மத்திய மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசங்களில் சாகுபடி செய்வதற்காக இந்த இரகம் வெளியிடப்பட்டது.
  • பிலிப்பைன்ஸ் சாதாரண நெட்டை (கேரசந்திரா) 1995 இல் அனைத்து மாநிலங்களின் சாகுபடிக்கும் உகந்த “தேசிய இரகம்ர்க” மத்திய மலைத்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.
  • கேரசாகரா - 1995 இல் கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகம் இந்த இரகத்தினை வெளியிட்டுள்ளது.  கேரள மாநிலத்தின் பிரபலமான இரகம் ஆகும்.

17. தமிழ்நாட்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒட்டு
    இரகங்கள் யாவை?
வி.எக்.சி-1,  வி.எச்.சி-2,  வி.எச்.சி-3

18.
கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள வீரிய ஒட்டு இரகங்கள் யாவை?

  1. லக்ஷகங்கா (லட்சதீவு சாதாரணம் x கங்காபொந்தன்)
  2. ஆனந்தகங்கா(அந்தமான சாதாரணம்  x கங்காபொந்தன்)
  3. கேரகங்கா (மேற்கு கடற்கரை நெட்டை x கங்காபொந்தன்)
  4. கேரசங்கரா (மேற்கு கடற்கரை நெட்டை x செளகாட் ஆரஞ்சு குட்டை)
  5. சந்திர சங்கரா ( செளகாட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடற்கரை நெட்டை
  6. கேரஸ்ரீ (மேற்கு கடற்கரை நெட்டை x மலையன் மஞ்சள் குட்டை)
  7. கேரசெளபாக்யா(மேற்க கடற்கரை நெட்டை x எஸ்.எஸ்.ஏ)
  8. செளகாட் பச்சை குட்டை x மேற்கு கடற்சரை நெட்டை)
  9. சந்திரலக்ஷா (லட்சத்தீவு சாதாரணம் x செளகாட் ஆரஞ்சு குட்டை)
  10. இளநீர் இரகம்: செளகாட் ஆரஞ்சு குட்டை

19.தமிழகத்தின் எந்த வீரிய ஒட்டு இரகத்தில் அதிக என்ணெய் உள்ளது?
    வி. ஹெச்.சி-70.2%

20. தமிழ்நாட்டில், வறட்சிக்கு ஏற்ற இரகங்கள் யாவை?

    வி.பி.எம் 3 மற்றும் ஆழியார் (சி.எண்) 1
    மாணாவாரிக்கும் பாசனத்திற்கும் ஏற்றதாகும்

21.
தமிழ் நாட்டில் எந்த தென்னை இரகம்/வீரிய ஒட்டு அதிக கொப்பரை மகசூல் தருகிறது?
    வி.எச்.சி-3 (162 கிராம்/தேங்காய்)

22.
தமிழ்நாட்டில் எந்த இரகம்/வீரிய ஒட்டு இரகம் அதிகம் காய்கள்
    தருகின்றன?
    வி.எச்.சி-3 (156 காய்கள்/மரம்/வருடம்)
23. தென்னை மரம் தேங்காய் காய்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகிறது?
    3-4 வருடங்கள்

24.கேரளாவில் மானாவாரி மற்றும் பாசன சாகுபடிக்கு ஏற்ற இரகம்/வீரிய
ஒட்டுகளின் பெயரை கூறுங்கள்?
வீரிய ஒட்டு இரகங்கள்-ஆனந்த கங்கா, கேரகங்கா, கேரசங்கரா

25.
கேரளாவில் வேர் வாடல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த வீரிய ஒட்டு இரகத்தை சாகுபடி செய்யலாம்?
சந்திர சங்கரா

26. எந்த இரகத்தை கேரளாவின் வறட்சியான பகுதிகளுக்கு பரிந்துரை
    செய்யலாம்?
    சந்திரலக்ஷா, லக்ஷகங்கா, சந்திரகல்பா

27.
எந்த இரகம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளது?
பொதுவாக குட்டை மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை விட நெட்டை இரகங்களில் அதிக நோய் எதிர்ப்பு திறன் உள்ளது.

28. இளநீருக்கு ஏற்ற தென்னை இரகம் எது?

    குட்டை இரகங்கள் (செளகாட் ஆரஞ்சு குட்டை)

30.
கேரளாவில் எந்த தென்னை வீரிய ஒட்டு இரகம் அதிக மகசூல்
    கொடுக்கிறது?
    கேரஸ்ரீ (28 கிலோ/மரம்/வருட்ம்)

31.
கேரளாவில் எந்த வீரிய ஒட்டு இரகத்தில் அதிக கொப்பரை மகசூல் கிடைக்கிறது?
கேரஸ்ரீ (28 கிலோ/மரம்/வருடம்)

32.
கேரளாவில் எந்த வீரிய ஒட்டு இரகம் அதிக எண்ணெய் சத்தை
    பெற்றுள்ளது?
 லக்ஷகங்க (70%)

33.
தென்னை வீரிய ஒட்டு இரகங்களின் சராசரி மகசூல் என்ன?
    100 காய்கள்/மரம்/வருடம்

34.
நெட்டை இரகம் காய்ப்பிற்கு வர எத்தனை வருடங்கள் ஆகிறது?
    8-10 வருடங்கள்

35. குட்டை இரகங்கள் காய்ப்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்?

    6 வருடங்களுக்கு மேல்

36.ஒரு
டன் கொப்பரைக்கு எத்தனை தேங்காய் தேவை?
    சுமார் 6000 தேங்காய்களுக்கு மேல் தேவைப்படும்

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved