தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

பருவம் மற்றும் காலநிலை
பருவம்

1. தமிழ்நாட்டில், எந்த பருவத்தில் தென்னை நடவு செய்யலாம்?
ஜீன்-ஜீலை , டிசம்பர் - ஜனவரி

2.
கர்நாடகாவில் எந்த பருவத்தில் தென்னை நடவு செய்யலாம்?
மே-ஜீன்

3.
கேரளாவில், தென்னை நடவு செய்ய ஏற்ற பருவம் எது?
முக்கியமான பருவம்-மே
பாசன வசதி உள்ள இடங்கள்-ஏப்ரல்
தாழ்வான நிலப்பகுதிகள் - செப்டம்பர்

4.
மழை காலத்தைவிட கோடை பருவத்தில் தேங்காய் மகசூல் அதிகமாக உள்ளது  ஏன்?
மற்ற ஒராண்டு பயிர்களைக் காட்டிலும், தென்னையில் தென்னம்பாளை வெளிவரும் 6-7 மாதங்களுக்கு முன்னர் பெண் பூவின் அடிப்படை குருத்து தோற்றம் உண்டாகிறது.  கோடை காலத்தில்  அறுவடை செய்யக் கூடிய தேங்காய்களின் அடிப்படை குருத்து மழை காலத்தில் உண்டாகிறது.  அதுபோல  கோடை காலத்தில் உருவான அடிப்படைக் குருத்தின் காய்களையே நாம் மழை காலத்தில் அறுவடை செய்கிறோம்.  அதனால் கோடை கால மகசூல் மழை காலத்தைவிட அதிகமாக உள்ளது.

காலநிலை
1. தென்னை நடவு செய்ய ஏற்ற வெப்பநிலை பற்றி கூறுங்கள் ?
தென்னை நன்றாக வளரவும் அதிக மகசூல் தரவும், ஆண்டு சராசரி வெப்பநிலை 270C யாக இருக்கவேண்டும். சராசரி வெப்பம் 270C க்கு கீழ் வரும் போது மகசூல் குறைகிறது.  வெப்பநிலை அதிகரிக்கும் போது, உருவாகும் தென்னம்பாளைகள் காய்ந்து, அவ்வருட மகசூல் குறைகிறது.

2. தென்னை நடவுக்கு எவ்வளவு மழையளவு தேவை?
ஆண்டு தோறும் சமமாகப் பகிரப்பட்ட 1000 மி.மீ மழை போதுமானதாகும்.  எனினும் மழை பகிர்வு வேறுபட்டு, மண்ணில் வடிகால் நன்றாக இருக்கும் இடங்களில், 3000 மி.மீ மழையளவு வரையில் நன்றாக தென்னை சாகுபடி செய்யலாம்.  (கேரளா: நன்கு பகிரப்பட்ட 1300-2300 மி.மீ மழை போதுமானது). குறைவான 500-800 மி.மீ மழையளவு கொண்ட வறட்சியான உட்பகுதிகளில், அவை, ஏரி மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அருகில் இருப்பின், போதுமான மண் ஈரம் இருக்கும்.  எனவே அங்கும் தென்னை நடவு செய்யலாம்.

3. தென்னையில் அதிக மகசூல் பெறுவதற்கு உகந்த காலநிலை காரணிகள் பற்றிக் கூறுங்கள்?

  • பூமத்திய ரேகையிலிருந்து 200 தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நன்றாக வளர்கிறது.  பொதுவாக 600 மி.மீ சராசரி கடல்மட்ட குத்துயரம் வரை தென்னைக்கு ஏற்றதாகும்.  எனினும், சில இடங்களில் 900 மி.மீ கடல் மட்டக் குத்துயரம் வரை வளர்க்கப்படுகிறது.
  • 20-320C  தட்பவெப்பமும், 270C ஆண்டு சராசரி வெப்பமும், தென்னையின் வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் உகந்ததாகும்.  ஒரு ஆண்டு 1000 மி.மீ சீராக பகிர்க்கப்பட்ட மழை போதும் எனினும் 3000 மி.மீ மழையளவு வரை தென்னை சாகுபடி செய்யலாம்.  தென்னைக்கு 80-85% ஒப்பு ஈரப்பதம் உகந்ததாகும்.
  • உவர்ப்பு தன்மையை தாங்கக் கூடிய சக்தி தென்னைக்கு உண்டு.  5-8 என்ற அளவில் அகன்ற கார அமில நிலையில் வாழக் கூடிய தன்மை உடையதாகும்.
  • நல்ல சூரிய ஒளி தென்னையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.  நிழல் மற்றும் மேகமூட்டம் உள்ள சூழல் வளர்ச்சியை பாதிக்கும், மேகமூட்டம் நீராவிப்போக்கை குறைத்து விடுகிறது.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved