தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

தேங்காய் அறுவடை மற்றும் பின் அறுவடை நுட்பங்கள்
தேங்காய் அறுவடை
1. விதை, கொப்பரை மற்றும் இளநீருக்கு எத்தனை மாத காய்களை பறிக்க வேண்டும்.

    விதை மற்றும் கொப்பரை : 12 மாத தேங்காய்கள் இளநீர் : 7-8 மாத காய்கள்

2.தேங்காய் அறுவடைக்கு என்ன முறைகள் பின்பற்றப்படுகிறது
?
    அறுவடை முறைகள் : மரம் ஏறுதல், மின் இயக்க ஏணி மற்றும் ஏறும் சைக்கிள்

3.
நெட்டை மற்றும் குட்டை இரகங்களில், விதைக்காக பறித்த காய்களை எத்தனை நாள் சேமிக்கலாம். 
                                          பறித்த பின்
நெட்டை மரங்கள்                    : 2-3 மாதங்கள்
குட்டை இரகங்கள்/ஒட்டுகள்    : பறித்த 10-15 நாட்கள்

4.
ஒரு ஆண்டிற்கு சராசரியாக எத்தனை முறை அறுவடை செய்யலாம்?
        மாதந்தோறும் தென்னம்பாளைகள் உற்பத்தியானலும், ஒரு வருடத்தில் 8 முறை அறுவடை செய்யலாம்.

5. தென்னையின் சராசரி தேங்காய் மகசூல் என்ன?

சராசரி வருட மகசூல் : 80-100 காய்கள்/மரம்/வருடம் (இரகத்தைப் பொருத்தது)
        குட்டை இரகங்கள் : 70-80 காய்கள்/மரம்/வருடம்
        நெட்டை இரகங்கள்: 80-100 காய்கள்/மரம்/வருடம்
        வீரிய ஒட்டு இரகங்கள் : 100-130 காய்கள்/மரம்/வருடம்

6.
மானாவாரியில் மேற்கு கடற்கரை நெட்டையின் எண்ணெய் மகசூல் என்ன?
        ஒரு எக்டருக்கு சுமார் 1.7-2 டன் ஆகும்.

பின் அறுவடை நுட்பங்கள்

1. சூரிய ஒளி அல்லது பிற உலர்த்திகளில்
உலர்த்தும் போது கொப்பரையின் ஈரப்பதம் எவ்வளவு இருக்க வேண்டும்?
        கொப்பரையின் ஈரப்பதம் : 6%

2.
தென்னங்குலைகளை விதை மற்றும் இளநீருக்கு, எவ்வாறு அறுவடை செய்யலாம்?
        தென்னங்குலைகளை கயிறு மூலம் மரத்திலிருந்து இறக்கி காய்களுக்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3.
கொப்பரையின் சேமிப்பு காலத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்? எவ்வளவு நாள் நீட்டிக்கலாம்?
        தார் பூசப்பட்ட பாலித்தீன் பைகளில், கொப்பரைகளை 6 மாதம் வரை நீட்டிக்கலாம்.

4. எவ்வாறு தேங்காயை வீட்டு உபயோகத்திற்கு சேமிக்கலாம்?
        தேங்காயை செங்குத்தாக வைத்து வீட்டு உபயோகத்திற்கு சேமிக்கலாம்.

5.தேங்காயை எவ்வாறு மட்டை எடுக்கலாம்?
        முன்பெல்லாம் கடப்பாரையை மண்ணில் நிறுத்தி, கூர்மையான பகுதியில் மட்டை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது, பல கை இயக்க இயந்திரங்கள் உள்ளன.

6.கொப்பரையைக் உலர்த்துவதற்கு என்னென்ன பொது வழிகள் உள்ளன?
        சூரிய ஒளி, புகைமூட்டம் மற்றும் சூடான காற்றில் கொப்பரைகளை உலர்த்தலாம்.

7. ஆறு மாதத்திற்கு மேல் கொப்பரையை காய வைக்கும் போது, என்னென்ன பூச்சித் தாக்கம் வருகிறது.
        ஹோம் வண்டு - நெக்ரோபியா ரூபிபெஸ்
        தானிய வண்டு - ஒரைசாபில்லஸ் சூரினாமென்சிஸ்

8. கொப்பரையை மூன்று மாதத்திற்கு மேல் சேமிக்க என்ன செய்யலாம்?
·         4% ஈரப்பதத்திற்கு கொப்பரைகளை உலர்த்தவும்
·         குவித்து வைத்து சேமிப்பதை தவிர்க்கவும்
·         கொப்பரையை வலையுள்ள பாலத்தீன் பைகள் அல்லது சாக்குகளில் சேமிக்கவும்

9. கொப்பரை சேமிப்பில் தென்படும் பூச்சிகள் யாவை?
·      கார்போ பில்லஸ் டிமிடியேட்டஸ்
·      அகேஸ்விவஸ் அட்வீனா
·      ரம்பப்பல் வண்டு -  ஒரைசாபில்லஸ் சுரினாமென்சிஸ்
·      சிவப்பு மாவு வண்டு - டிரைபோகியம் கேஸ்டேனியம்
·      காப்ரா வண்டு - டிரோகோடெர்மா கிரெனேசியா
·      நெல் அந்திப்பூச்சி - கார்சைரா  செபலோனிகா
·      அத்திப் பழ அந்திப்பூச்சி - பெஸ்டியா கேன்டெல்லா

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved