தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

பண்ணை இயந்திரங்கள்
1.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மரம் ஏறும் கருவியின் சிறப்பியல்புகள் யாவை?

  •  தென்னை மரம் சுத்தப்படுத்தவும், தேங்காய் அறுவடை செய்யவும் பயன்படும்.
  •  இந்த கருவி, பெண்கள், மரம் ஏறத் தெரியாதவர்கள கூட பயன்படுத்தலாம்.
  •   30-40 அடி உயரம் ஏற 1.5 நிமிடம் ஆகும்.

2. தென்னை மரம் ஏறும் கருவியின்w திறம் மற்றும் பறிக்கும் செலவு என்ன?
திறன் : 50-60 மரங்கள்/நாள்
பறிக்கும் செலவு: ரூ 1.50/மரம்


3.
    கேரள வேளாண்மைப் பல்கலைக்கழக மட்டை உறிக்கும் கருவியின் சிறப்பு என்ன?

  •  தேங்காய் உறிக்க ஒரு எளிமையான, திறமையான கருவியை கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.  காயை பொருத்தும் முதிர்வைப் பொருத்தும்  ஒரு காய் உறிக்க 8-12 நிமிடம் ஆகிறது. வீட்டற்குள்ளேயும் வெளியே தோப்புகளிலும் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையான கைக்கு அடக்கமான கருவியாகும்.

4. தேங்காய் ஓடு பிரிக்கும் இயந்திரம் என்றால் என்ன?

  • மட்டை எடுக்கப்பட்ட தேங்காயில் இருந்து, ஓடு  நீக்குவதற்கு, சுழன்று வெட்டும் சட்டிக் கருவியுடன் இயந்திரம் உள்ளது.  ஓடு நீக்கும்போது, தேங்காயை பிடித்துக்கொள்ள ஆள் தேவை.  ஓடு அகற்றும் மையங்களில் உள்ளது.

5. தேங்காய் தோல் உறிக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது?

  • இந்த இயந்திரம் ஓடு எடுக்கப்பட்ட தேங்காயின் மேற்புறத்தில் உள்ள மென்மையான கருந்தோல் பகுதியை சுரண்டி எடுக்கப் பயன்படுகிறது.  தேங்காய் களை இயந்திரத்திற்குள் கொடுக்க ஒரு ஆள் தேவை.

6. தேங்காய் அரைக்கும் இயந்திரத்தின் பயன் என்ன?

  •  இந்த இயந்திரம், ஓடு நீக்கப்பட்ட தேங்காய் சதையை அரைத்து சன்னமான, உலர்ந்த தேங்காய் ஆக மாற்றுகிறது.  அரைப்பதற்கு தேங்காயை இயந்திரத்தினுள் கொடுக்க ஆள் தேவை.  உலர்ந்த கொப்பரைகளை அரைத்து, கொப்பரை பொறி பெறலாம்.

7. தேங்காய் பால் எடுக்கும் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?

  •  இந்த இயந்திரம் உலர்ந்த தேங்காயை சுழலும் திருகுகளுக்குள் கொடுத்து தேங்காய் பாலை பிழிந்து எடுக்கிறது.

8. கொப்பரைத் தேங்காய் எண்ணெய் எடுப்பானின் (அழுத்தம் மூலம்) பயன் என்ன?

  •   இந்த இயந்திரம்,  நன்கு காய்ந்த கொப்பரை பொறிகளை அழுத்தி, அதிலிருந்து எண்ணெயை பிழிந்து எடுக்கிறது.  சில வகைகளில், அழுத்தும் இயந்திரங்களுடன், வடிகட்டும் வசதி மற்றும் சூடேற்றும் வசதியும் உள்ளது. இதனால் தரமான எண்ணெய் கிடைக்கிறது.  நிலக்கடலை, பீன்ஸ். பருத்தி விதைகள், ஆலிவ் விதைகள், சூரிய காந்தி விதைகளிலும் எண்ணெய் எடுக்கலாம்.

9. வேளாண் கழிவு பொருட்களை எரித்து உலர்த்தும் இயந்திரத்தின் பண்புகள் என்ன?

  •  வேளாண் கழிவுகளை எரித்து, சூடான காற்று உற்பத்தி செய்ய இது பயன்படுகிறது.
  •  எல்லா வித வேளாண் மற்றும் பயிர் கழிவுகளை எரிபொருளாக உபயோகப்படுத்தலாம்.
  •  தானியங்கள், பயிர் காய்கள் மற்றும் தேங்காயை உலர்த்தலாம்.
  •  காற்றின் வெப்பம் மற்றும் பாயும் விகிதத்தை கட்டுப்படுத்தலாம்.

10. பவர் டில்லரால் இயங்கும் குழிதோண்டும் கருவியின் சிறப்புகள் என்ன?

  •   மரக் கன்றுகளை நடுவதற்கு குழிகள் தோண்டலாம்.
  •  ஆட்களைக் கொண்டு குழி தோண்டுவதற்கு ஆகும் செலவு மற்றும் நேரம் 16.0% மற்றும் 91.0% குறைகிறது.
  •  டிராக்டர் நுழைய முடியாத இடங்களுக்கு கூட இந்த கருவி சென்றடையும்.

11. எரிகட்டியாக்கு இயந்திரம் என்றால் என்ன?

  •  இந்த இயந்திரத்தில், உட்செலுத்தும் பகுதி, திருகும் தண்டு, பேரல்கள், மற்றும் முறுக்கி பிழியும் டை பைப் ஆகியன உள்ளன.   5 hp மோட்டாரில் இந்த இயந்திரம் இயங்குகிறது.  நாரில்லாத தென்னை நார் கழிவை மாட்டுச் சாணத்துடன் 6:1 என்ற விகிதத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து இயந்திரத்தில் செலுத்தினால் எரிகட்டிகள் கிடைக்கும்.

12 தென்னை நார் கழிவு இடும் கருவி என்றால் என்ன?

  •  அடிமண்ணில் தென்னை நார் கழிவு இட்டு நிலப்போர்வை அமைக்க இந்த இயந்திரம் பயன்படும்.
  •  உளிக் கலப்பையுடன் சேர்ந்து இந்த கருவி இணைக்கப்படுகிறது.  நிலத்தை கிளறிவிட்டு தென்னை நார்கழிவை போடலாம்.
  •  சால் அமைக்கும் பாகத்துடன், நார் கழிவு இடும் பாகம் இணைக்கப்படுகிறது.
  •  இதன் இறகுகள், உளிக்கலப்பையின் பின்னால் உள்ள சால் அமைக்கும் கருவியை தாங்கி, பிடித்து நார் கழிவு அடிமண்ணில் விழும்படி செய்கிறது.  இந்த கையால் இயக்கப்படும் இயந்திரத்தால், தென்னை நார்கழிவை சால் பாத்தியில் சீராக இடலாம்.  செம்மண்ணில் இயந்திரத்தின் இழுவைத்திறன் 500 கிலோ, மற்றும் களிமண்ணில் 600 கிலோ ஆகும்.

13 தொழு எரு வில்லைகள் உண்டாக்கும கருவி என்றால் என்ன?

  • தொழு எரு/மக்கிய குப்பையிலிருந்து வில்லைகள் உண்டாக்க இந்த கருவி பயன்படும்.
  •   இந்த இயந்திரத்தில் உள்ள திருகுகள், குப்பை/தொழு எரு கலவையை பேரலுக்குள் உட்செலுத்தி, பிறகு வில்லைகளை வெளியே கொண்டு வருகிறது. சுழலும் கத்தி வில்லைகளை சிறு துண்டுகளாக வெட்டுகிறது.  ஆடும் தட்டுகளுக்கு வில்லைகள் கொண்டு செல்லப்பட்டு, உருண்டைகளாக அடியில் சேகரிக்கப்படுகிறது.

14 தென்னை மர ஏணியின் விலை எவ்வளவு இருக்கும்?

  •  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தென்னை மர ஏணியை ரூ 2000 க்கு விற்பனை செய்கிறது.

15 ஒரு நாளைக்கு எத்தனை மரங்கள் ஏரலாம்?

  •  ஒரு நாளைக்கு 50-60 மரங்கள் ஏரலாம்.

16 குழி தோண்டு கருவியை பயன்படுத்தி, ஒரு மணி  நேரத்திற்கு எத்தனை  குழிகள் தோண்டலாம்?

  •  பவர் டில்லரால் இயங்கும் குழி தோண்டும் கருவியை பயன்படுத்தி, ஒரு மணி நேரத்தில், 23-30 குழிகள் தோண்டலாம்.

17   மரத்தெளிப்பான் விலை எவ்வளவு இருக்கும்?

  • டிராக்டரில் இணைக்கப்படும் மரத் தெளிப்பானின் விலை சுமார்  45,000 இருக்கும்.

18   தாழு எரு/மக்கிய குப்பை வில்லையாக்கம் கருவியின் சிறப்பு என்ன?

  •   சீரான அளவிலான வில்லைகள் பெறலாம்.
  •   வில்லைகளை சுலபமாக உரமிடலாம்.

19. விசை இயக்க தேங்காய் மட்டையெடுக்கும் இயந்திரம் பற்றி கூறவும்?

  • தேங்காய் மட்டை உறிக்க பயன்படும் இந்த இயந்திரத்தில் அரை வட்ட  வடிவிலான குழியான பகுதி மற்றும் கத்திகள் பொருத்தப்பட்ட சுழலும்  டிரம் இருக்கும்.  10:1 விசை குறைப்பு அமைப்புடன் கூடிய 3 hp மோட்டார்  டிரம் ஓட்ட பயன்படுத்தப்படுகிறது. V பெல்ட் மூலம் விசை டிரமிற்கு செலுத்தப்படுகிறது.  தேங்காய் உட்செலுத்தும் போது, டிரம்மில் உள்ள கத்திகள் மட்டையை குத்திக் கிழிக்கும்.  வெளியே வரும் போது இரண்டு உருளைகளுக்கு இடையே செலுத்தப்பட்டு, மட்டை உறிக்கப்படுகிறது.

20. கையால் இயங்கும் தேங்காய் உடைக்கும் கருவி எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

  • மட்டை உறித்த தேங்காயை உடைக்க இக்கருவி பயன்படுகிறது.  இதில் கால் வைக்குமிடம், நீண்ட கைபிடி, வெட்டும் கத்தி மற்றும் மேடை உள்ளது.  கைபிடியை உயர்த்தும்போது கத்தி உயர்கிறது.  மேடையில் தேங்காயை வைத்து கத்தியை கீழிறக்கினால் தேங்காய் வெட்டுப்பட்டு விடும்.  பிறகு தேங்காயை பிளந்து தண்ணீரை சேகரித்து கொள்ளலாம்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved