தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

சாகுபடி முறைகள்
1. தென்னை சாகுபடி முறைகளுக்கு எந்த மண் ஏற்றதாகும் ?
மணல் கலந்த செம்மண், வண்டல் மண் மற்றும் செம்பொறை மண் தென்னை சாகுபடிக்கு உகந்தவை.  1.2மீ ஆழமுடைய, நல்ல நீர் தேக்கத் தன்மை உடைய மண் தென்னைக்கு ஏற்றதாகும்.  எனினும் மணல் மற்றும் களிமண் அடுக்கடுக்காக இடப்பட்ட நிலங்களில் தென்னை நன்கு வளர்கிறது.  மண்ணின் கார அமிலத்தன்மை 5.2 - 8.6 இருக்க வேண்டும்.

2.
தென்னை சாகுபடிக்கு நிலத்தை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
நில அமைப்பு, மண்வகை மற்றும் இதர சுற்றுசூழல் காரணிகளுக்கு ஏற்ப நிலத் தயாரிப்பு மாறுபடும்.  நிலத்தை சுத்தம் செய்து நடவுக் குழிகளை குறிக்க வேண்டும்.  நிலம் சரிவாக இருப்பின், மண் வள பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  நிலத்தடி நீர் உயரமாக இருப்பின்  மண்ணை மேடாக்கி நடவு பண்ணலாம் சரிவான இடங்களில் சமதளக் கால்வாய்கள் அல்லது வரப்புகள் தயார் செய்யலாம்.  தாழ்வான நெல் சாகுபடி நிலங்களில், 1 மீ உயரத்திற்கு மேட்டுப்பாத்திகள் அமைத்து, தென்னை நடவு செய்யலாம்.

3. தென்னையில் உள்ள நடவு அமைவு முறைகள் யாவை?
மண், பருவநிலை மற்றும் இரகங்களுக்கு ஏற்ப நடவு முறைகள் மாறுபடும்.  ஒழுங்கன்ற நடவு முறைகளை பின்பற்றும் பொழுது, மரங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொள்ளுவதோடு, அவற்றினிடையே, நீர், சூரிய வெளிச்சம் மற்றும் ஊட்டத்திற்கு போட்டி ஏற்படுகிறது.  இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
சதுர முறை நடவு, செவ்வகமுறை, முக்கோண முறை வரப்பு முறை மற்றும் சமதள கால்வாய் முறை போன்ற நடவு முறைகள் தமிழ்நாட்டில் பின்பற்றப் படுகின்றன.

4. தென்னையில் உள்ள நடவு முறைகள் யாவை?

 • சமதளப் பகுதிகள் - குழி முறை
 • சாய்வான பகுதிகள் - சமதள படிமட்டங்கள் அல்லது வரப்பிடுதல்
 • தாழ்வான நிலங்கள் - நீர்மட்டத்திற்கு 1 மீ க்கு மேல் மேட்டுப்பாத்தி அமைத்தல்.

5. தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்ய என்ன இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்?
நெட்டை இரகங்களுக்கு, 25`' x 25'` (7.5மீ x 7.5மீ) என ஒரு எக்டருக்கு 175 மரங்கள் நடலாம்.  வீரிய ஒட்டு இரகங்களுக்கு 8.5 மீ x 8.5 மீ இடைவெளியையும், குட்டை இரகங்களுக்கு 6.5 மீ x 6.5 மீ இடைவெளியையும் பின்பற்றவும், வரப்புகளில் ஒரு வரிசையாக நடும்போது 20' இடைவெளி விடவும்.

விபரம்

இடைவெளி

நெட்டை இரகங்கள்
குட்டை இரகங்கள்
வீரிய ஒட்டு இரகங்கள்

7.5 x 7.5 மீ (25' x 25')
6.5 x 6.5 மீ (20' x 20')
8.5 x 8.5 மீ (26' x 26')


6. கேரளாவில் தென்னை நடவிற்கு என்ன இடைவெளி பின்பற்றப் படுகிறது?

        நடவு முறை

இடைவெளி

மரங்கள் எண்ணிக்கை/எக்டர்

முக்கோணமுறை நடவு

7.6மீ

198

சதுரை நடவுமுறை

7.6-9.0மீ (7.6 x 7.6மீ ,
8 ஜ் 8 மீ, 9 x 9 மீ )

170 - 120

ஒரு வரப்பு முறை

வரிசைக்குள் 5 மீ மற்றும் வரிசைகளுக்கிடையே 9 மீ, வரிசைக்குள் 6.5 மீ மற்றும் வரிசைகளுக்கிடையே 9 மீ

220

இரு வரப்பு முறை

5 x 5 மீ வரிசைக்குள்ளும்  9 மீ வரிசைகளுகிடையில்;

280

 

6.5 x 6.5 மீ வரிசைக்குள்
9 மீ வரிசைகளுக்கிடையில்;

 


7. தமிழ்நாட்டில், தென்னை நடவிற்கு வேண்டிய குழியின் அளவு என்ன?
        தமிழ்நாடு - 3 x 3 x 3 அடி நீளம், அகலம், உயரம் உள்ள குழிகள்.

8. கேரளாவில் தென்னை நடவிற்கு வேண்டிய குழியின் அளவு என்ன?

கேரளா:

 • குறைவான நீர்தளம் உள்ள - 1 x 1 x 1 மீ
 • அடிப்பாறை உள்ள செம்பொறை மண் - 1.2 x 1.2 x 1.2 மீ
 • மணல் மண் - 0.75 x  0.75 x 0.75 மீ

9. கர்நாடகாவில் தென்னை நடவிற்கான குழியின் அளவு என்ன?
    கர்நாடகா -1 கன மீட்டர்  (3.3 அடி)

10. தென்னையில் நடவுக்குழிகளை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
    குழிகளில் கொளிஞ்சி நிரப்பி, 6 மாதங்களுக்கு மக்க விட வேண்டும்.

11. நடவு முன் குழிகளில் என்ன கலவையை இட வேண்டும்?

 • தொழுஉரம், செம்மண் மற்றும் மணலை சம விகிதமாகக் கலந்து குழியில் இரண்டு அடி ஆழத்திற்கு (60 செ.மீ) நிரப்பவும்)
 • வேப்பம் புண்ணாக்கு இட்டு பூச்சிகள் மற்றும் எறும்பு தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 • குழிக்கு 1-2 கிலோ உப்பு போட்டு கரையானைக் கட்டுப்படுத்தி, ஈரப்பதத்தையும் சேமிக்கலாம்.

12. குழிகளில் ஈரப்பதத்தை சேமிக்க என்ன செய்யலாம்?

 • இரண்டு அடுக்குகளில் உமி இடவும் மேற்புரம் குழியாக இருக்க வேண்டும்.
 • கன்றுகளை நடும்போது, கற்றாளை இலை ஒன்றையும் சேர்த்து நட்டு வந்தால் ஈரப்பதம் சேமிக்கப்படுவதுடன், கரையானும் கட்டுப்படுத்த படும்

13. தென்னங்கன்றுகள் நடுவதற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய பாதுகாப்பு முறைகள் யாவை?
குழி அல்லது உமியின் மேல் 10% கார்பரில் தூள் இட்டு கரையானைக் கட்டுப்படுத்தலாம்.

14. இளந் தென்னங்கன்றை எவ்வாறு புதிய சுற்றுச்சூழலில் பாதுகாக்க வேண்டும்?
தென்னங்கன்றுகள் நடவு செய்த முதல் இரண்டு வருடங்களுக்கு, கோடைக்காலத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு கன்றுக்கு 45 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  நடவு செய்த கன்றுகளுக்கு போதுமான நிழல் இருக்க வேண்டும்.  நீர் தேக்கம் உள்ள இடங்களில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும்.  குப்பைக் கழிவுகளில் மற்றும் மண்ணில் நடவு செய்திருந்தால், 0.15 கன மீ செம்மண் இடலாம்.
அடிக்கடி குழிகளில் களையெடுக்க வேண்டும்.  அடித்தண்டை சுற்றி இருக்கும் மழை அரிப்பு மண்ணை அகற்றி விட வேண்டும்.  ஒரு வருடமும், குப்பை இடுவதற்கு முன்னர் குழிகளை அகலப்படுத்தவும், கன்றுகள் வளர வளர குழிகளை நிரப்ப வேண்டும்.  தென்னங்கன்றுகளை பூச்சி மற்றும் பூஞ்சாணம் தாக்கியுள்ளதா என்று அடிக்கடி கண்காணித்து பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.

15.
இளங்கன்றுகளுக்கு எவ்வாறு நீர் பாய்ச்ச வேண்டும்?
முதல் இரண்டு வருடங்களுக்கு, 4 நாட்களுக்கு ஒரு முறை கன்றுக்கு 45 லிட்டர் தண்ணீர் விட வேண்டும்.

16.
ஊடுபயிர் சாகுபடிக்கு என்ன இடைவெளி பின்பற்றப்படுகிறது?
தென்னையில் ஊடுபயிர் சாகுபடிக்கு, தென்னங்கன்றுகளை 7.5-9மீ இடைவெளியில் நடலாம்.  இந்த அகன்ற இடைவெளி, ஓராண்டு பயிரையோ அல்லது பல்லாண்டு பயிரை கலப்பு பயிராகவோ சாகுபடி செய்ய ஏற்றதாகும்.

17.
எவ்வாறு தென்னையில் ஊடுபயிர் செய்யலாம்?
ஊடுபயிர் செய்யும் போது தென்னையின் அடித்தண்டைச் சுற்றி 2 மீ சுற்றளவில் செய்யக் கூடாது. முறையாக களையெடுத்து, தென்னைக்கு உரமிடுவதற்கும், பிற செய்நேர்த்திகளுக்கும் ஏற்றவாறு சுத்தமாக வைத்திருக்கவும்.

18. தமிழ்நாட்டில் எந்தெந்த பயிர்களை ஊடுபயிராகவும் கலப்பு
பயிராகவும் சாகுபடி செய்யலாம்?

 • ஓராண்டு பயிர்கள்: நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, சக்கரைக் கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி, அன்னாசி.
 • ஈராண்டுப்பயிர்/இரு பருவபயிர் வாழை, (பூவன் - மொந்தன் ரகங்கள்)
 • பல்லாண்டு பயிர்கள் :  கோகோ, மிளகு, சாதிக்காய் மற்றும் வனில்லா

கன்னியாகுமரி மற்றும் பொள்ளாச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும் பல்லாண்டு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.  வனில்லாவில் நோயற்ற நடவு பொருட்களை பயன்படுத்தி அடிக்கடி கண்காணித்து வர வேண்டும்.  எல்லா பயிர்களுக்கும் தனித்தனியே உரம் மற்றும் தொழுஉரம் இடவும்.

19.
கேரளாவில் ஊடுபயிர்/கலப்புப் பயிர் சாகுபடிக்கு என்னென்ன பயிர்களை பயன்படுத்தலாம்.

 • தானியங்கள்: நெல், மக்காச்சோளம்
 • பயிர்வகைகள்: நிலக்கடலை, கொள்ளு, காராமணி
 • கிழங்கு வகைகள்: மரவள்ளிக் கிழங்கு, சக்கரைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு
  நறுமணம் மற்றும்
 • சுவையூட்டும் பொருட்கள் :      இஞ்சி, மஞ்சள், மிளகாய், சாதிக்காய்,  இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு
 • பழப்பயிர்   : வாழை (பழையங்கொண்டன்-குட்டநாடுபகுதிகளில்   ஒரு குத்துக்கு மூன்று  
  கன்றுகள் விட வேண்டும்),  அன்னாசி, பப்பாளி
 • பானங்கள்                : கோ கோ
 • தீவனப்புல்                : ஒட்டு நேப்பியர், கினியா புல்-கே.ஏ.யு

20. கர்நாடகாவில் தென்னையில் ஊடுபயிர்/கலப்பு பயிருக்கு ஏற்றவை யாவை?
காய்ப்பதற்கு முன், தென்னங்கன்றுகள் சிறியதாக இருக்கும் பொழுது, மானாவாரி நெல், தானியங்கள், நிலக்கடலை, காராமணி, மிளகாய், கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாகுபடி செய்யலாம்.  தென்னை பெரிய மரங்கள் ஆனவுடன், வேர் மற்றும் தண்டுக் கிழங்குகளான மரவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சக்கரைக் கிழங்கு, மஞ்சள், இஞ்சி, கருணைக் கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.
இவற்றில் சேனைக் கிழங்கு நல்ல இலாபம் தரங்கூடிய ஊடு பயிர் ஆகும்.  மானாவரி பகுதிகளில் இஞ்சி, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், பீன்ஸ், தீவனப்புல் (நேப்பியர் ஒட்டு, கினியா புல்) சூரிய காந்தி, காராமணி மற்றும் ராகியை  பயிரடலாம்.

21.
கேரளாவில், தென்னந்தோப்பில் எந்த வயது வரை ஊடுபயிர் செய்யலாம்?
தென்னந்தோப்புகளில், நடவு செய்த 3-4 வருடங்கள் வரை மரவள்ளிக்கிழங்கு அல்லது தானியங்கள் பயிரிடலாம்.  இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களின் வேர்கள் மேலோட்டமாக வளர்வதாலும், நிழலில் வளரக் கூடிய தன்மையை பெற்றிருப்பதாலும், 15-25 வருடங்களுக்கு அவற்றை ஊடுபயிர் செய்யலாம்.  இதனால் நிலம், சூரியஒளி, நீர் மற்றும நுண்ணுாட்ட வளங்களை சரியாக பயன்படுத்த முடிகிறது.  பயிர் பாதிப்பின் போது, காப்பீட்டுத் தொகையை பெறலாம்.  அகன்ற இடைவெளி, அதாவது 7.6 மீக்கு மேல் தென்னைமரங்கள் இருந்தால் எப்பொழுதும் அம்மரங்களின் ஆயுட்காலம் வரை ஊடுபயிர் செய்யலாம்.

22.
தமிழ்நாட்டில் தென்னந்தோப்புகளில் எந்த வயது வரை ஊடுபயிர்/கலப்புப்பயிர் செய்யலாம்?

 • 7 வருட வயதுக்கு முன் : தென்னை நடவு செய்த 5 வருடங்கள் வரை எந்த பயிரை வேண்டுமானாலும் சாகுபடி செய்து கொள்ளலாம் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் மற்றும் வாழையை  சாகுபடி செய்யலாம் நெல் மற்றும் கரும்பை தவிர்க்கவும்.
 • 7-20 வயது வரை: பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்கள் (நேப்பியர் புல் மற்றும் கினியா புல், மட்டும் சாகுபடி செய்யலாம்
 • 20 வருடங்களுக்கு மேல்: சூரிய ஒளி புகுவதைப் பொருத்து விவசாயம் செய்யலாம்.

23. கர்நாடகாவில் எப்பொழுது ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்?
மானாவாரி தென்னந்தோப்புகளில் கோடை மழை அல்லது பருவ மழை துவங்கியபின் (ஜீன்) ஊடுபயிரை விதைக்கலாம்/நடலாம்.  ஊடுபயிர் செய்யும்போது, தென்னைக்கும், ஊடுபயிருக்கும் பரிந்துரைக்கப் பட்ட அனைத்து வேளாண் மேலாண்மை வழிமுறைகளை பின்பற்றி தென்னையின் மகசூல் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

24. தென்னையில் எவ்வாறு பல அடுக்குப்பயிர் சாகுபடி பண்ணலாம்?

சூரிய வெளிச்சம், மண்ணில் பல்வேறு ஆழங்களில் உள்ள நீர் மற்றும் ஊட்டச்சத்து, காற்றிடைவெளி ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்த பல அடுக்குப் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.  பல் அடுக்குத் திட்டத்தில் பயிரிடும் பொழுது, பயிர் வகைகளைத் தேர்வு செய்யும் போது வேர் அமைப்பை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

25. பல
அடுக்குப்பயிர் சாகுபடி முறையில் எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்யலாம்?
நீர் பாசன வசதி இருப்பின், தென்னை, மிளகு, கோகோ மற்றும் அன்னாசி இணைந்த நான்கு பயிர் வடிவத்தை பயன்படுத்தலாம்.

26. பல
அடுக்குப் பயிர் சாகுபடி முறையில் பின்பற்ற வேண்டிய இடைவெளி என்ன?
7.5-8மீ இடைவெளியில் உள்ள தென்னையின் உச்சி வளர்நிலையைப் பொருத்து, பல அடுக்குப் பயிர்சாகுபடியில் வெற்றி அமையும்.  தென்னையின் உச்சி மேல் அடுக்காகவும், தென்னை மரத்தண்டின் மேல் 8.0மீ வரை செல்லும் மிளகுச் செடிகள் இரண்டாம் அடுக்ககாகவும், 3.5மீ உயரம் வளரக்கூடிய கோகோ கிளைகள் முதல் அடுக்காகவும் அமைகிறது.  கோக்கோ கிளைகள் இடைவெளி முழுவதும் படரும் வரை அன்னாசி கீழ் அடுக்காக இருக்கும்.

27. தேக்கு மரத்தை ஊடுபயிரிட்டால் தென்னைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

தென்னந்தோப்புகளில் பொதுவாக தேக்கு மரத்தை ஊடுபயிராக நடக் கூடாது.  அது கடினமாக மரமாக இருப்பதால், வேலியில் நடலாம்.  பூந்தோட்டங்களில் காற்று தடுப்பானாக தேக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

28. தென்னந்தோப்புகளில் ஏதாவது பல பயிர் சாகுபடி முறைகள் உள்ளதா?

    ஆம் பல பயிர் சாகுபடி முறைகள் உள்ளன.

 • கிழக்குப் பகுதிகள்: தென்னை+வாழை+சிறுகிழங்கு+வெண்டை
 • மேற்குப் பகுதிகள்: வாழை+மிளகு+கோகோ+ஜாதிக்காய்+வன்னிலா

    அனைத்து முறைகளில், ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட நீர், உரம் மற்றும் எருவை தனியாக இட வேண்டும்.

29.
பலபயிர் சாகுபடிக்கு ஏற்ற பல்லாண்டு பயிர்கள் யாவை?
கோகோ, சாதிக்காய், மிளகு, கிராம்பு, எலுமிச்சைப்புல் மற்றும் இலவங்கப்பட்டை.

30.
பலபயிர் சாகுபடிக்கு,  ஏற்ற ஒராண்டு/ஒரு பருவப் பயிர்கள் யாவை?
 (அ) காரீப் பருவம்: நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, இஞ்சி, மஞ்சள், மிளகாய், சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, துவரை, காய்கறிகள், சக்கரைக் கிழங்கு, மரவள்ளி, வாழை, அன்னாசி, பப்பாளி மற்றும் தீவனப்புல்
 (ஆ) ராபி பருவம்: எள்ளு, கொள்ளு, துவரை, காய்கறிகள், காராமணி, சக்கரைக் கிழங்கு, வாழை
 (இ) கோடைக்காலம்: காய்கறிகள்

31.
பலபயிர் சாகுபடியில், வாழை சேர்க்கப்பட்டது ஏன் ?
ஆய்வு செய்யப்பட்ட பல கலப்புப் பயிர்களில் வாழை சிறந்த ஊடு பயிராகக் கண்டறியப்பட்டது.  வாழை மற்றும் தென்னைக்கு ஒரே மாதிரியான நீர் மற்றும் உரமிடும் முறைகள் பொருந்தும்.  வாழையில் அதிகப் படியான நோய் தாக்கமோ பூச்சித் தாக்கமோ இல்லை.  சில இடங்களில் மட்டும் துளைப்பான் நூற்புழு தாக்குகிறது.  மானாவாரி சூழலில் வாழை ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது.  ஒரு எக்டர் தென்னந்தோப்பில் (125 மரங்கள்) சுமார் 1000 வாழை மரங்கள் வளர்க்கலாம்.

32. ஏன் அன்னாசியை, தென்னந்தோப்பு பலபயிர்களில் ஒன்றாகச் சேர்க்கிறோம்?

அன்னாசியை மானாவாரி மற்றும் நீர்பாசனவசதி உள்ள இருவகைச் சூழலிலும் ஊடுபயிர் செய்யலாம்.  நீர்பாசன சூழலில் ஒரு பழம் 1.5 கிலோ எடை வருகிறது.  ஆனால் மானாவாரியாக பயிரிடும் பொழுது, 0.75 கிலோவாக குறைகிறது.  பல் அடுக்கு முறை சாகுபடியில் ஒரு எக்டருக்கு 4000 கிலோ அன்னாசி கிடைக்கிறது.  அன்னாசியை மட்டும் ஊடுபயிர் செய்யும் பொழுது, அதிகமான மகசூல் கிடைக்கிறது.

33.
தென்னை பல் அடுக்குப் பயிராக ஏன் கோகோ வை தேர்வு செய்கிறோம்?
நிழலில் வளரக்கூடிய தன்மையை பெற்றிருப்பதால், கோகோவை நீர்பாசன வசதி உள்ள தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிர் செய்யலாம்.  ஒரு வரிசையாக கோகோ 3 மீ இடைவெளியில் நடவு செய்யும் பொழுது, ஒரு எக்டரில் 400 செடிகள் பெறலாம்.
தென்னை மற்றும் கோகோ செடிகளில் வேர்களுக்கு இடையே போட்டி இல்லாததால், தென்னையின் மகசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  எனவே இவ்விரு பயிர்களும் ஒன்றுக்கு ஒன்று நன்மை விளைவிப்பதுடன், நல்ல வருமானத்தையும் தருகிறது.

34. தென்னந் தோப்புகளில் என்ன பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்யலாம்?
சணப்பை, கொழிஞ்சி, கிளைரிசீடியா மேகுளேட்டே, இண்டிகோ பெரா ஹிர்சூடே, பியுரேரியா பேசிடோய்டஸ்

35. தென்னந்தோப்பில் என்னென்ன மூடுபயிர்களை சாகுபடி செய்யலாம்?

கலப்பேகானியம் மியுகோனாய்டஸ், மைமோசா இன்விசா, ஸ்டைலோசேன்தஸ் கிரேசில்லஸ் போன்ற பயிர்களை மூடுபயிராக பயிர் செய்யலாம்

36. தென்னந்தோப்பில் நிழல் மற்றும் பசுந்தாள் உரமாக எந்த பயிரை சாகுபடி செய்யலாம்?
    டெப்ரோசியா கேன்டிடா

37. தென்னந்தோப்பில் என்னென்ன களை பராமரிப்புகள் செய்ய வேண்டும்?
    மே-ஜீன், செப்டம்பர்- அக்டோபரில் உழுது, மண்ணைக் கிளறி விட வேண்டும்.

38.மழையின் போது மண் அரிப்பு ஏற்பட்டு, வேர்கள் வெளியே தெரியும் போது என்ன செய்ய வேண்டும்.
    செப்டம்பர்-அக்டோபரில் மேடுகள் ஏற்படுத்தி
    பின்னர் நவம்பர்-டிசம்பரில் சமப்படுத்த வேண்டும்.

39. தென்னைக் களை மேலாண்மையில், என்னென்ன களைக் கொல்லிகள் பயன்படுத்தலாம்?
அகன்ற இலையுடைய களைகளுக்கு- முளைக்கும் முன் அட்ரசீன் @ 1 கிலோ 9-2/எக்டர்
புற்கள் மற்றும் கோரை இனங்கள்-கிளைபோசேட் 10 மில்லி மற்றும் 20 கிராம் அமோனியம் சல்பேட்/லிட்டர் தண்ணிர் மருந்தை களை முளைத்த பின் தெளிக்கவும்.

40. எப்பொழுது தென்னையில் மறுநடவு செய்ய வேண்டும்?
அதிக வயது ஆகி மகசூல் குறையும் போதும், நீண்ட நாள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் போதும், பல்வேறு இக்கட்டான சூழலில் தொடர்ந்து சந்திக்கும் போதும் மறுநடவு அவசியம் பழைய மரங்களை வெட்டிய 3-4 வருடங்களில், மறு நடவு செய்யலாம்.

மேலே செல்கமேலே செல்க
 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved