தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

தேங்காய் பதனிடுதல்
1. தேங்காய் உற்பத்தியில் இந்தியாவின் நிலை என்ன?

  • உலகளவில், தேங்காய் உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.  1.12 மில்லியன் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, சர்வதேச உற்பத்தியில் 18% உற்பத்தியை பங்கெடுக்கிறது.  ஆண்டுதோறும் 6000 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. ஒரு முழுத் தேங்காயின் பாகத்தை பகுத்துக் கூறுங்கள்?
   
    50% தென்னைமட்டை, 15% தேங்காய் ஓடு, 25% தேங்காய் சதை,  10% தண்ணீர் உள்ளது.

3. தேங்காயின் பொதுப் பலன்கள் சிலவற்றை கூறுக?

  • இளநீர் ஒரு சுகாதாரமான ஊட்டச்சத்து நிறைந்த புத்துணர்வு பானம் ஆகும்.
  • வெள்ளை தேங்காய் சதை, தென்னிந்தியாவில் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுகிறது.
  • காய்ந்த தேங்காய் கொப்பரையில், தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது.  தேங்காய் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு, பேக்கரி மற்றும் திண்பண்ட பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுகிறது.
  • எண்ணெய் எடுத்து பின் மிஞ்சும் புண்ணாக்கு மாட்டு தீவனமாக பயன்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட தேங்காய், சாக்லேட் மற்றும் திண்பண்ட தொழிற்சாலைகளில் உபயோகப்படுகிறது.

4. கொப்பரையின் எண்ணெய் அளவு என்ன?
         65-72%
5. பாரம்பரிய முறையில் எவ்வாறு எண்ணெய்  பிழியப்படுகிறது?
       கொப்பரையிலிருந்து பாரம்பரிய முறையில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.  தேங்காயில் இருந்து வெள்ளை சதையை பிரித்து, வெளியில் உலர்த்தி பிறகு புகையில் உலர்த்தப்படுகிறது (6-8 நாட்கள்) கொப்பரையை சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு 30 நிமிடம் சூடுபடுத்தவும்.  பின்னர், எக்ஸ்பெல்லரில் போட்டு எண்ணெயை பிழிந்து, அழுத்த வடிகட்டி கொண்டு வடித்து, எண்ணெய் எடுக்கலாம்.

6.
தேங்காயில் இருந்து வெள்ளை சதை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
நவீன முறையில் கீழ்க்கண்டவாறு, தேங்காயில் இருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது.  தேங்காய் ஓடுகள் உடைக்கப்பட்டு, வெள்ளை சதை பிரித்தெடுக்கப்படுகிறது.  தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக வெட்டி, குக்கரில்  போட்டு அதிகமான வெப்பத்தில் 90 நிமிடம் சூடுபடுத்தப்படுகிறது.(70சி),  சூடுபடுத்திய கொப்பரையிலிருந்து எக்ஸ்பெல்லர் மூலம் எண்ணெய் எடுக்கப்படுகிறது.  காற்று புகாத அடைப்பான்களில் எண்ணெயை ஊற்றி, இருண்ட, குளிர்ந்த, உலர்வான இடங்களில் வைத்து நீண்ட நாள் சேமிக்கலாம்.  தேங்காய் கேக் உண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

7.
தேங்காய் தேன் என்றால் என்ன?

  • குளுக்கோஸ், பிரக்ட்டோஸ் மற்றும் லெவுலோசுடன், வளர்ச்சி ஊக்கப் பொருட்கள் உடைய தேங்காய் தண்ணீரில் இருந்து “கோக்நட் ஹனி” கிடைக்கிறது. 
  • தேங்காய் தண்ணீரை வடித்து, காய்ச்சி, சிறிதளவு கோல்டன் சிரப்புடன் கலந்து கோக்கநட் ஹனி தயாரிக்கலாம்.  இதனை தேங்காய் வாசனையுடைய சுவையான சிற்றுாண்டிகள் செய்வதற்கும் இதமான பானங்களில் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் உபயோகிக்கலாம்.

8. “கோக்கோ சாஸ்என்றால் என்ன?

  • தேங்காய் தண்ணீரில் மிளகாய் பொடி வெங்காய்ப் பொடி சிறிதளவு வினிகர் சேர்த்து தொக்கு தயாரிக்கலாம்.  இது கோக்கோ தொக்கு எனப்படும்.

9. தேங்காய் சதையை எவ்வாறு எவ்வளவு நாள் சேமிக்கப்படுகிறது ?
        தேங்காய் சதைகளை துண்டுகளாக்கி,  4% உப்பு, அசிட்டிக் அமிலம், சல்பர் டை ஆக்சைடு மற்றும் அண்டிஅக்சிடண்ட் கரைசலில் குவித்து வைத்து 3-6 மாதம் வரை சேமிக்கலாம்.  உபயோகப்படுத்தப்படுகிறது.

10
. முதிர்ந்த தேங்காய் சதைகளை எவ்வாறு பதப்படுத்தலாம்?
        முதிர்ந்த தேங்காய் சதைகளை நீராவி கொண்டு வெள்ளையாக்கி, 30 பிரிக்ஸ் உள்ள சக்கரைப் பாகில் 48 மணி நேரம் ஊற வைக்கலாம். பிறகு தேங்காய்த் துண்டுகளை வடித்து எடுத்து, 20 நிமிடம் சைல்பைட்டப் செய்து உலர்த்தியில் 60 சி வெப்பத்தில் 8 மணி நேரம் உலர்த்தவும்.

11
. உலர்த்தப்பட்ட தேங்காய் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது?

  • 2% உலர்த்திய தேங்காய் “மேங்கோ பார்” செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.  புரத அளவை அதிகரிக்கும்.
  • இனிப்பூட்டப்பட்ட மற்றும் மணமூட்டப்பட்ட ராகி மிக்ஸ் தயாரிக்க பயன்படுகிறது.

12 .  நீர் அகற்றப்பட்ட தேங்காய் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?

  • தேங்காயைத் துருவி, வெள்ளையாக்கி 1% உப்பு, 1% அசிடிக் அமிலம் மற்றும் 250 பிபிஎம் சல்பர் டை ஆக்சைடு உடன் ஜி1 ஆண்டி ஆக்ஸிடண்ட் சேர்க்காமல்  ஜி2ஆண்டி ஆக்ஸிடண்ட் சேர்ந்த கரைசலில் 24 மணி நேரம் ஊற வைத்து பகுப்பு உலர்த்தியில் 60சி இல் 4-5 மணிநேரம் உலர்த்தவும் (4% ஈரப்பதம் வரை)

13. பக்குவப்படுத்தப்பட்ட மற்றும் நீர் அகற்றப்பட்ட தேங்காய்களை எவ்வாறு பெட்டியிட்டு, சேமிக்கலாம்?
        300 காஜ் தடிமண் உள்ள பாலித்தீன் பைகளில் வெற்றிடமுள்ள மற்றும் வெற்றிடமில்லாத பைகளில், அறை வெப்பத்தில் சேமித்து, கண்காணிக்கலாம்.

14
. தேங்காய் சிப்ஸ் என்றால் என்ன?
         உடனே சாப்பிடுவதற்கு ஏற்ற சிறிய முறுகலான இனிப்பு அல்லது உப்புப் போட்ட தேங்காய் துண்டுகள் - தேங்காய் சிப்ஸ்.

15
. தேங்காய் சிப்ஸ் எவ்வாறு தயாரிக்கலாம்?
         நன்கு முதிர்ந்த 11-12 மாத தேங்காயை துண்டுகளாக வெட்டி, சர்க்கரைத் தண்ணீரில் ஊற வைத்து,  வடித்து, பின்னர் உலர்த்தியிலோ சூட்டடுப்பிலோ உலர்த்தவும்.  இதுவே தேங்காய் சிப்ஸ்.

16
. கோக்கநட் கிரிஸ்ப் என்றால் என்னஎவ்வாறு தயாரிக்கலாம்?
        வெள்ளையான, மணமுடைய, நாரில்லாத 9-10 மாத வயதுடைய தேங்காய்கள் தேவை.  0.6-0.7 மி.மி தடிமன் கொண்ட துண்டுகளாக வெட்டி, சூடுதண்ணீரில் வெள்ளையாக்கி, இளகிய பாகில் சூடேற்றி, உலர்த்தவும்.  இவ்வாறு தயார் செய்யப்பட்ட கிரிஸ்ப் அதிக சக்தி மிக்கதாகவும், தரமானதாகவும் உள்ளது.

17
. வறுத்த இளந்தேங்காய் என்றால் என்ன?
        தேங்காய் தண்ணீரை இனிப்பாக்கவும்,  தேங்காய் சதையை மணமூட்டவும் வறுத்த இளந்தேங்காய் தயாரிக்கப்படுகிறது.

18
. வறுத்த இளந்தேங்காயை எவ்வாறு தயாரிப்பது?
        காய்களை 2% சோடியம் மெட்டா பை சல்பேட்  கரைசலில் 20 நிமிடம் ஊற வைத்து,  உலர்த்தி 1 நிமிடம் அல்லது ஓடு தீப்பிடிக்கும் வரை தீயில் காட்டவும்.  பிறகு காய்களை அறையின் வெப்பத்தில் 3 நாட்கள் வைக்கவும் அல்லது நீண்ட நாட்களுக்கு குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கவும்.

19
. வறுத்த தேன் தேங்காய் என்றால் என்ன? எவ்வாறு தயாரிக்கலாம்?

  • இனிப்பான, சன்னமான, முறுகலான தேங்காய் சதையே வறுத்த தேன் தேங்காய் ஆகும்.
  • முதிர்ந்த, சிறிய துண்டுகளாக்கிய தேங்காய் உடன், தேன் சக்கரை, மார்கரின் இனிப்பூட்டப்பட்ட உறைவிக்கப்பட்ட பால்,  மொலாசஸ் மற்றும் உப்பு சேர்த்து, சூட்டடுப்பில் அரை மணி  உலர்த்தவும்.  15 நிமிடம் கிளறி விட்டு, முறுகலானவுடன், குளிர்வித்து பேக் செய்யவும். 

20. நீர் அகற்றப்பட்ட தேங்காய் சட்னியின், இருப்பு வைத்தல் நாள் எவ்வளவு?
        சட்னியை 37 oC  வெப்பத்தில் 3 மாதத்திற்கு வைத்துக் கொள்ளலாம்.  நல்ல அடைப்பான்களில் போட்ட குறைந்த வெப்பத்தில்  வைத்தால் 6 மாதங்களுக்கு சேமிக்கலாம்.

21
. தேங்காய் பால் என்றால் என்ன?

  • தேங்காய் சதையில் இருந்து தண்ணீர் சேர்த்தோ சேர்க்காமலோ பிழிந்து எடுக்கப்படும் பால் தேங்காய் பால் ஆகும்.
  • புவியீர்ப்பு பிரித்தல், மையவிலக்கி  பிரித்தல்  மூலம் தேங்காய் பாலில் இருந்து அதிக கொழுப்புடைய தேங்காய் பாலேடு தயாரிக்கலாம்.

22. தேங்காய் பால் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?
·        புதிதாக துருவிய தேங்காயில் இருந்து பால் எடுத்து 70-72 oC இல் 10 நிமிடம் பாஸ்சுரைசேசன் செய்து, கொழுப்பு நீக்கிய பால் பவுடர் கலந்து தேங்காய் பால் தயாரிக்கப்படுகிறது.

23. தேங்காய் பாலின் கூட்டுப்பொருள்கள் என்ன?
       தேங்காய் பாலில் 6% கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் 9.65% மொத்த திடவப்பொருட்கள் உள்ளன.

24. கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் பாலில் என்ன புளித்த பானம் செய்யப்படுகிறது?

  • தேங்காய் கொழுப்பு நீக்கப்பட்ட பால், கொழுப்பில்லாத உலர்ந்த பால் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரில் கலந்து புளித்த பானம் தயார் செய்யலாம்.  50% கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் பால் + 50% கொழுப்பில்லாத உலர்ந்த பால் கலவையே அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு ஆகும்.
  •   உடனடியாக குடிப்பதற்கு தயார் செய்யப்பட்ட புளித்த பான அடர்கரைசலில் (1:3 விகிதத்தில் நிர்க்க வைத்தல்) 1% புரதம், 0.74% கொழுப்பு, 18.70% சக்கரை, 79.2% நீர்  உள்ளது.  புளித்த அடர்கரைசல் பானத்தை 2 மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.  கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் பால்,  செயற்கை பால் செய்ய பயன்படுகிறது.

25. தேங்காய் பாலேடு என்றால் என்ன?
·        முதிர்ந்த, தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட தேங்காய் பாலில் இருந்து தயார் செய்யப்படும் அடர் கரைசல், தேங்காய் பாலேடு ஆகும்.

26.பதப்படுத்தி,பெட்டியிடப்பட்ட தேங்காய் பாலேடு எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும?
·         தேங்காய் பாலேட்டை தனியாகவோ தண்ணீர் நீர்க்க வைத்தோ பலவித பதார்த்தங்கள், இனிப்புகள், பிட்டு வகைகளை செய்ய பயன்படுத்தலாம்.  பதப்படுத்தி, பெட்டியிடப்பட்ட பாலேடு பாக்கெட்டை ஆறு மாதங்களுக்கு இருப்பு வைத்து கொள்ளலாம்.  ஆனால் ஒருமுறை திறந்தவுடன் குளிர்சாதப் பெட்டியில் வைத்தப்படியே பயன்படுத்த வேண்டும்.

27
. தேங்காய் சிரப் (சர்க்கரை பாகு) எவ்வாறு செய்யலாம்?
         சமமான அளவு தேங்காய் பால், சுத்தம் செய்யப்பட்ட சக்கரை, தேங்காய் பாலின் கன அளவில் 0.25%, அளவு டைசோடியம் பாஸ்பேட் கலந்து காய்ச்சவும்.  கலவையில் TSS 68-70% வந்தவுடன், சுத்தமான அடைப்பான்களில் ஊற்றி, சீல் செய்யவும்.

28
. தேங்காய் சிரப் (சர்க்கரைப்பாகு எவ்வாறு வணிக ரீதியாக பயன்படுகிறது?
         பேக்கரி பொருட்களின் மேற்பகுதிக்கும், மது பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.  தேங்காய் சிரப்பை தண்ணீர் விட்டு நீர்க்க வைத்து ரைஸ் கேக், மற்றும் பிற திண்பண்டங்கள் தயாரிக்கலாம்.

29
. தேங்காயில் இருந்து கோக்கநட் ஹனிஎவ்வாறு தயாரிக்கலாம்?
        1 பங்கு வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலுடன் அரை பங்கு சுத்தமான சர்க்கரை, அரை பங்கு குளுக்கோஸ், கலக்கவும்.  பிறகு 0.5% சோடியம் ஆல்தினேட் சேர்க்கவும்.  வாசனைக்கு தேங்காய் பாலேடு  கலக்கலாம்.  கலவையை 15 நிமிடம் கலந்து, ஒரு நிலைமுகப்படுத்தி, நீராவி வடிய கெட்டிலில், 75% TSS வரும் வரை கலக்கிவிட்டு சூடேற்றவும்.  பிறகு சுத்தமான அடைப்பான்களில் சூட்டுடன் ஊற்றி அடைக்கவும்.

30
. தேங்காய் மிட்டாய் எப்படி செய்யலாம்?

  • துருவிய தேங்காய் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து தேங்காய் மிட்டாய் செய்யலாம்.  துருவிய தேங்காயுடன தேங்காய்ப் பால் சேர்த்து,  ஈரப்படுத்தவும்.  சமைக்கும் பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் சர்க்கரைப்பாகு, மற்றும் தேங்காய் துருவல்  சேர்த்து கொதிக்க  விடவும், இதனுடன் சீனி சேர்த்து, சூடேற்றவும்.  தண்ணீர்  போட்டால் கெட்டியாகும் பதத்திற்கு வரும்வரை சூடேற்றவும்.  பிறகு வெண்ணெய்  தடவிய சட்டியில் ஊற்றி, சிறிதளவு குளிர்ந்தவுடன் தேவைப்பட்ட அளவுகளில் வெட்டவும்.  அவற்றை செல்லோபன் அட்டைகளில் பெட்டியிடவும்.

31. தேங்காய் பால் பவுடர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
·         கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தேங்காய் பாலில், நீர் அகற்றி தேங்காய்  பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.  தேங்காய் பாலில், மொத்த திடவப் பொருளில் 50-60% கொழுப்புச் சத்து இருக்கும்படி சரி செய்யப்படுகிறது.  திரவப் கலக்கிகள்  மற்றும் ஸ்டெபிலைசர்கள் சேர்க்கப்படுகிறது.  180 oC வெப்பத்தில் நீர் அகற்றம் செய்யப்படும்.  இறுதியில் உள்ளே சிறுதுளி எண்ணெய் இருக்கும் உருண்டைகளாக மாற்றப்படுகிறது.

32
. தேங்காய் மாவு எவ்வாறு வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது?
        தேங்காயில் பால் எடுக்கும் போது, பாலின் உடன் விளைப்பொருளாக தேங்காய்மாவு கிடைக்கிறது.  இது தொழில் முனைவோருக்கு கூடுதலான வருமானம் தருவதோடு, பயன்படுத்துவோருக்கு, ஊட்டச்சத்து மிக்க நார் பொருளாக விளங்குகிறது.  கோதுமை, அரிசி, உருளைக் கிழங்கு மாவுகளுக்கு பதிலாக பயன்படும்.  அடுமனைப் உணவு பொருட்கள், முறுக்கி பிழியப்பட்ட உணவுப் பொருட்கள்,  தயாரிக்கும்போது சேர்க்கப்படுகிறது.

33. “
சப்பல்என்றால் என்னஅதன் நற்குணங்கள் யாவை?
·         தேங்காயில் இருந்து தேங்காய்ப்பால் எடுத்தவுடன் கிடைக்கக் கூடிய உடன் விளைபொருள் “சப்பல்” எனப்படும்.  தேங்காய்ப் பொடியாக்கப்படும் சப்பலில், அதிக நார்ச்சத்து உள்ளது.  தேங்காய் சப்பல்,  பல மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை  உற்பத்தி செய்ய பயன்படுகிறது.  நீரழிவு உள்ளவர்களுக்கு உணவாக கொடுக்கலாம்.  குறைவான கொழுப்புடன், அதிக நார்ச்சத்தும் உள்ளது மற்ற தானிய வகை மாவுகளைக் காட்டிலும் இதில் அதிகமான சக்தியும் ஊட்டச்சத்தும் உள்ளது.

34
. தேங்காய் தண்ணீர் அடர்கரைசல் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?
         சுத்தமான சூழலில் சேகரிக்கப்பட்ட தேங்காய் தண்ணீரில், அடர்கரைசல் தயார் செய்யலாம்.  தேங்காய் தண்ணீரில் உள்ள துாசு மற்றும் எண்ணெயை மையவிலக்கம் மூலம் அகற்றப்படுகிறது.  அடர் கரைசலாக்குதற்கு முன், தேவையெனில் தேங்காய் தண்ணீரில் உள்ள உப்பு நீக்கப்படும்.   இதனால் இனிப்பு சுவை அதிகரிக்கும்.  இதற்கு தேங்காய் தண்ணீர், அயன மாற்ற ரெசினில் செலுத்தப்படும்.  அடர் கரைசலை உரைபனியாக்கலாம் அல்லது கேன்களில் பாதுகாத்து வைத்து  தேங்காய் பானங்கள் தயாரிக்கலாம்.

35
. கிரிஸ்டலைஸ்ட் பழம் என்றால் என்னஎவ்வாறு வணிக ரீதியாக பயன்படுகிறது?
        சர்க்கரை படிவிக்கப்பட்ட பழம் கிரிஸ்டலைஸ்ட் பழம் எனப்படும்  இளநீர் தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை படிவிக்கப்பட்ட தேங்காயை திண்பண்டமாக சாப்பிடலாம்.

36
. உணவிற்கு பின் சாப்பிடக்கூடிய டெசர்ட்ஆக எந்த தேங்காய் பொருட்கள் உபயோகப்படுகிறது?
·         சர்ச்சரைப் பாகில் ஊறவைத்த இளநீர் தேங்காயை டேசர்ட் ஆக உண்ணலாம்.  ஐஸ்கிரிம் , காஸ்டர்ட் அல்லது பிட்டு வகைகளில் சேர்க்கலாம்.

37.
தேங்காய் வெல்லம் என்றால் என்னஎவ்வாறு தயார் செய்யப்படுகிறது?

  • இனிப்பான தென்னங்கள்ளில் இருந்து வெல்லம் தயாரிக்கப்படும்.  தென்னங்கள், புளிக்காதவாறு, சுத்தமான கண்ணாடி பாத்திரங்களில் சேகரிக்கப்படும்  பிறகு வடிகட்டி, காய்ச்சி, படிகமாக்கப்படுகிறது. 12-15% வெல்லம் கிடைக்கிறது  தேங்காய் வெல்லத்தில் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும், மருத்துவ குணங்களும் உள்ளன.

38. “தேங்காய் வினிகர்என்றால் என்னஎவ்வாறு தயார் செய்யலாம்?

  • புளித்த தென்னைங்கள்ளில் இருந்து வினிகர் எடுக்கப்படுகிறது.  இதனை மீன் மற்றும் மாமிச உணவுகள் சமைக்க பயன்படுத்தலாம்.  24 மணி நேரத்திற்கு மேல் புளிக்க வைத்து, 10-14 வாரங்களுக்கு அமிலமூட்டி,  வினிகர் பெறலாம்.

39. உடனடி தேங்காய் பர்பி மிக்சில் என்னென்ன இருக்கும்?

  • நீர் அகற்றப்பட்ட தேங்காய் துருவல் - 100 கிராம்
  •   பொடியாக்கப்பட்ட சர்க்கரை            - 150 கிராம்
  •  ஏலக்காய் பொடி                         - 2 கிராம்

40.ரெடிமிக்ஸ் பர்பிஎவ்வாறு செய்ய வேண்டும்?

  • நீர் அகற்றப்பட்ட தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு குருணையான பொடி ஆக்கவும் பொடியாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

41. நீர் அகற்றப்பட்ட தேங்காய் என்றால் என்னஎவ்வாறு தயாரிக்கப்படுகிறது? சமைப்பதற்கு பயன்படுத்தலாமா?

  • நீர் அகற்றப்பட்ட துருவிய தேங்காய், உலர்த்தப்பட்ட தேங்காய் ஆகும்.  தேங்காயை மட்டை எடுத்து, உடைத்து, துருவி, உலர்த்தி, சலித்து, பேக் செய்யப்பட்டு உலர்ந்த தேங்காய் தயாரிக்கப்படுகிறது.
  • இதனை உணவுத் தொழிற்சாலைகள் மற்றும் திண்பண்ட தயாரிப்பில் பயன்படுத்தலாம்.  உலர்த்தப்பட்ட தேங்காயை, சமையலில் தேங்காய் துருவலுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.  உலர்த்தப்பட்ட தேங்காயின்  IS:966-1975  தரம்
  • அதிகபட்ச ஈரப்பதம்  - 3.0
  • அதிகபட்ச கொழுப்பு - 65.0
  • கொழுப்பு மற்றும் லாரிக் அமிலம் - 0.3

42. தேங்காய் குக்கீஸ் (இனிப்பு அப்ப வகை) எவ்வாறு தயார் செய்யப்படுகிறது ?
        தேவையான பொருட்கள்
        மாவு               - 60 கிராம்
        சர்க்கரை         - 30 கிராம்
        ஷார்டனிங்       - 60 கிராம்
        தேங்காய் பொடி - 30 கிராம்
        செர்ரி              - 25 கிராம்
செய்முறை

  1. மாவை சலிக்கவும்.
  2. செர்ரி தவிர, எல்லா பொருட்களையும் ஒன்றாகப் போட்டு பிசையவும்.
  3. சிறிய உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவிய டிரேயில் 1 இஞ்ச் இடைவெளியில் வைக்கவும்
  4. ஒவ்வொரு உருண்டையின் மேலும் ஒரு செர்ரி பழம் வைக்கவும்.
  5. 12-20 நிமிடத்திற்கு 2750F இல் அடுமனையில் வைத்தும் சூடேற்றவும்.

43. பொதுவாக, பல நேரங்களில் இளநீர் கார்பனேட்டட் நீர் போல் இருக்கிறது.  ஆனால் முதிர்ந்த தேங்காய் தண்ணீர் அப்படி இருப்பதில்லைஏன்?

  • இளநீரை வெட்டும்போது நுரை வரும்.  இளம் தேங்காய்களுக்குள் இருக்கும் நீர், அழுத்தத்தில் இருப்பதால், இதில் காற்றில் உள்ள CO2  நீரில் கரைவதற்கு வாய்ப்பு உள்ளது.  தேங்காய் முதிர்ச்சியாகும் போது வெற்றிடம் ஏற்படுகிறது.  இந்த வெற்றிடத்திற்கு வாயுக்கள் சென்றுவிடுகின்றன.  இதனால் தான் தேங்காயின் உள்ளிடம் முழுமையாக நிரம்பி இருப்பதில்லை.  முதிர்ந்த தேங்காய்களை குலுக்கும்போது சத்தம் வரும்.

44. ஒரு டன் கொப்பரைக்கு எத்தனை தேங்காய் தேவை?

  • தேங்காயின் அளவு மற்றும் எடையைப் பொருத்து மாறுபடும்.  1 டன் கொப்பரைக்கான உலக சராசரி 4500-5000 தேங்காய்கள்.  ஆனால் இந்திய அளவின் படி 6800 தேங்காய்கள் தேவை.

45. தென்னங்கள் எடுப்பதற்கு ஏற்ற தனி ரகங்கள் ஏதேனும் உள்ளதா?

  • லட்சத்தீவில் சாதாரண ரகம், தென்னங்கள் எடுப்பதற்கு ஏற்ற இரகம் ஆகும்.  சாதாரண உழவியல் சூழலில், ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் பதனீர் கிடைக்கிறது.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved