| பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             திடீர்  வாடல் 
             
              அறிகுறிகள்: 
            
              
                - பாக்டீரியா       வாடல் போல் இல்லாமல், பருவத்தின் கடைசியில் தீடீரென்று வாடும்
 
                - அதிகப்படியான       ஈரப்பதம் இருக்கும் போது செடிகள் கொடி போன்று தொங்கிக் கொண்டிருக்கும்
 
                - இதே       நிலையைத் தொடர்ந்தால், 4 நாட்களில் செடிகள் முழுவதும் வாடும்
 
                - நோய்       வேகமாக 5-6 நாட்களில் பரவும். வயலில் முதிர்ச்சியடையாத பழங்கள் மட்டும் காணப்படும்
 
                - தாக்கப்பட்ட       செடிகளின் வேர்கள் சரியாக உருவாகமல், தடித்துக் காணப்படும்
 
                - பித்தியம்       வகை, ரைசோக்டினியா சொலானி, ப்யூசேரியம் வகையுடன் சேர்ந்து இந்த நோய் காணப்படும்
 
                - அதிகப்படியான       ஈரப்பதம், வறட்சி, மிகக்குறைந்த வெப்பநிலையால் செடிகள் பலவீனமாகி, மண் மூலம் பரவும்       நோய்க் காரணி மூலம் நோய் பரவும்
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - மண்       நன்றாக வடியுமாறு இருக்க வேண்டும்.
 
                - நோயுற்ற       பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்.
 
                - டிரைக்கோடெர்மா       விரிடி 2.5 கிலோ/ஹெக் பண்ணை எருவுடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.
 
                - மேன்கோசெப்/காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் /லிட்டர் (அ) கார்பண்டசிலம்/கையோபினேட் - மீத்தைல்       1 கிராம்/லிட்டர் தெளிக்க வேண்டும்.
 
               
              | 
              
                
               | 
           
       
  |