கிழங்கு  செதில் பூச்சி : ஆஸ்பிடியோட்டஸ் ஹார்ட்டியை 
                 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - செடி வாடும்
 
                  - வெண்ணிற செதில் பூச்சிகளில் குருத்துகளிலும்,       கிழங்குகளிலும் காணப்படும்.
 
                  - கிழங்குகள் சுருங்கி விடும்.
 
                 
 
              பூச்சியின்  விபரம்: 
              
                
                  - பெண் செதில்பூச்சி சிறிய வட்ட வடிவ,       இளம் பழுப்பு நிற ஆமை ஆண் செதில் பூச்சி அமைப்புடையவை.
 
                  - ஆண் செதில்பூச்சி ஆரஞ்சு கலரில்       இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கையுடையது. தலை மார்பு மற்றம் வயிறு எனத் தனித்தனிப்       பாகங்கள் தெளிவாகக் காணலாம்.
 
                 
 
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                
                  - செதில் பூச்சிகள் தாக்கப்பட்ட கிழங்குகளை       சேமிக்கக்கூடாது.
 
                  - பூச்சித் தாக்கிய இலைகளைச் சேகரித்து       அழிக்கவேண்டும்.
 
                  - தரமான, பூச்சிகளற்ற கிழங்குகளை       தேர்வு செய்து நடவேண்டும்.
 
                  - விதைக்கு பயன்படுத்தும் கிழங்குகளை       0.075 சதவிகிதம் குவினால்ஃபாஸ் கரைசலில் 20-30 நிமிடம் ஊறவைத்து பின்னர் நிழலில்       உலர்த்த வேண்டும்.
 
                  - எக்டருக்கு 10 டன் நன்கு மக்கிய       செம்மறி ஆடு எரு அல்லது கோழி எருவை இரு முறைப்பிரித்து மண்ணில் கலக்கவேண்டும்.       இதைத் தொடர்ந்து டைமீதோயேட் மண்ணில் கலக்கவேண்டும்.
 
                 
  | 
              
             
              
  |