பயிர் பாதுகாப்பு :: சம்பங்கி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர் : சம்பங்கி
அறிவியல் பெயர் :பாலியான்த்தஸ் டியூபரோஸா
குடும்பம் : அமைரில்லிடேசியே

மொட்டு துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
அசுவினி, ஏபிஸ் கிராசிவோரா
வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
எலிகள்
கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை

1. மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா

சேதத்தின் அறிகுறி:

  • இந்தப் பூச்சி மெதுவாக பூக்களைத் தாக்கும்.
  • புழுக்கள் மொட்டுகள் மற்றும் பூக்களை துளைத்து செல்லும்.
  • மொட்டுக்களில் உள்ளிருப்பவைகளை உண்ணும்.
Larva Adult

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழித்துவிடவும்.
  • விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சியை அழித்துவிடலாம்.
  • மிதைல் பாரத்தியான் 0.05 சதவிதம் மருந்தினை முட்டைகள் தழைகளிலும், மொட்டுகளிலும் காணப்படும்பொழுது தெளிக்கவும்.
  • வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளித்தால் பூச்சிகளை விரட்டும்.

2. அசுவினி, ஏபிஸ் கிராசிவோரா

சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும்
Tube Rose

பூச்சியின் விபரம்:

  • பூச்சி சிறியதாகவும், மென்மையான உடலைக் கொண்டும், கருப்பு நிறத்தில் தோன்றும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மாலத்தியான் 0.1 சதவிதம் தாக்கப்பட்ட இலைகளில் தெளிக்கவும்

3. வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா

சேதத்தின் அறிகுறி:

  • இளம் இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும் 
  • தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கார்பரில் 5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம்
  • முட்டைக்குவியல்களை வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்
  • நாற்றங்காளில் வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
  • குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை பாதுகாக்கலாம்

4. சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே

சேதத்தின் அறிகுறி:

  • இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
  • இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகளில் தோன்றும்
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்
Tueb Rose

   பூச்சியின் விபரம்:

  • சிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் சிலந்திகள் காணப்படும்

   கட்டுப்படுத்தும் முறை:

  • டைக்கோபால் 2மி.லி / லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்

5. எலிகள்

சேதத்தின் அறிகுறி:

  • எலிகள் சம்பங்கி வயலில் குழிகள் தோண்டி சேதத்தை ஏற்படுத்தும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலில் நச்சுப்பொறி வைத்தால் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்
  • வெளிச் சந்தையில் ரோபான் என்ற பெயரில் கிடைக்கும்

6. கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் வேர்களை உண்ணும், கிழங்குகளில் துளையிட்டு சேதப்படுத்தும்
  • வண்டுகள் இரவில் உண்பவை அவை இலைகளையும், தண்டுகளையும் உண்டு அழிக்கும்
  • வண்டுகள் இலைகளின் ஓரத்தில் உண்ணும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கார்பரில் 10 சதவிதம் மண்ணில் போட்டால் கட்டுப்படுத்தலாம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014