பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில்      காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்
 
                      - இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம்      குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன்      இருக்கும்
 
                      - முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக      மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்
 
                      - 
                        
கட்டுப்படுத்தும் முறை:  
                        
                          - இலைச்சுருள்      தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்
 
                          - தேவையான      அளவு தழைச்சத்து மற்றும் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும்
 
                          - மாற்று      உணவுப்பயிரான துத்தி செடியை நீக்க வேண்டும்
 
                          - மஞ்சள்      நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை      நட்டு ஹெக்டேருக்கு 12 வைத்து கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம். டப்பாக்களை வாரத்திற்கு      ஒரு முறை சுத்தம் செய்து புதிய எண்ணெய் தடவி வைக்கவேண்டும்.
 
                          - கார்போபியுரான்      3% G @40 கி.கி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும் 
 
                          - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும் 
 
                         
                       
                    | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | இளம்குஞ்சுகள் மற்றும முதிர்பூச்சிகள் | 
                      முட்டை மற்றும் முதிர்பூச்சிகள் | 
                     
                   
                      
                    
                      
                        | பூச்சிகொல்லி | 
                        அளவு | 
                       
                      
                        | டைமெத்தொயேட் 30 % EC | 
                        1.0 மி/ லி   | 
                       
                      
                        | மாலத்தியான் 50 % EC | 
                        1.5 மி/ லி | 
                       
                      
                        | ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC | 
                        1.0 மி/ லி | 
                       
                      
                        | தையோமீத்தாக்சம் | 
                        4.0 மி/ 10 லி   | 
                       
                     
                     |