| கிளைக்கருகல் நோய்/தண்டு சொறி:  மேக்ரோபோமா  தேயிகோலா
 சேதத்தின் அறிகுறி: 
              
                - முதல் அறிகுறியாக   பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பாக   மாறி  பின்பு   இலைகள் தொங்கிவிடும். 
 
                - இலைகளில் நோய் பரவும் பொழுது கிளைகள் உலர்ந்த இறந்துவிடும். 
 
                - நோய் தண்டிற்கு பரவி  உலர்ந்து இறந்து  போகும்.
 
                - முழு கிளையும்  முனையிலிருந்து கீழ் வரை  இறந்து  போகும்.
 
                - இறந்த   கிளைகள் பிளவு  அடைந்து  , தடித்த மேலோட்டமான பட்டை பகுதியில் சூழப்பட்ட புண்களை உருவாக்குகிறது .
 
               
              
                
                    | 
                    | 
                    | 
                    | 
                 
                
                  | பழுப்பாக மாறிய  இலைகள் | 
                   காய்ந்த இலைகள் | 
                  தண்டு சொறி | 
                  பாதிக்கப்பட்ட  தோட்டம் | 
                 
               
              வாழ்க்கை சுழற்சி: 
              
                - பூஞ்சை சிறிய, வட்ட  வடிவிலான பிக்னிடியா வித்திகளை இறந்த கிளைகள் மீது உருவாக்குகிறது .
 
                - பூஞ்சை வித்திகள் மழை மூலம்  பரவுகிறது மற்றும் நிலத்தில்  இருக்கும்  சீரமைக்கப்பட்ட கிளைகளில் சில வாரங்கள் வாழ முடியும்.
 
                - பூஞ்சை வழக்கமாக காயமடைந்த தாவர திசு  மூலம்  நுழைந்து தொற்றை ஆரம்பிகிறது .
 
               
              கட்டுப்பாட்டு: 
              
                - நல்ல வடிகால் கொண்ட அமில மண்ணில் செடிகளை விதைக்கவும். 
 
                - துருப்பிடித்த பகுதிகளிக்கு கீழே உள் கிளைகளை நிக்கி தகுந்த கிருமிநாசினி முலம் நோயை அழிக்க வேண்டும். 
 
                - உரிய பாதுகாப்பு பூசண கொல்லிகளை ஈரமான வானிலை அல்லது இயற்கை இலை துளி காலங்களில் தெளித்து இந்நோயை கட்டுபடுத்தலாம்.    
 
               
              Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.  
            Image source:             Keith, l.,  Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4. |