பயிர்ச்சிலந்தி  வகைகள்: 
                சிவப்புச்சிலந்தி: ஒலிகோநிக்கஸ் காஃபியே 
              சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - முதிர்ந்த இலையின் மேற்பரப்பில்  சாறு உறிஞ்சும் 
 
                - சாறு உறிஞ்சுவதால் இலைகள் இளம் பழுப்பு  நிறமாகி சுருண்டு வாடிக் காணப்படும் 
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - கோள வடிவ சிவப்பு நிற முட்டை 
 
                - பெண் செதில்பூச்சி வயிறு பகுதி  கரும் பழுப்பு நிறமானது, தலைபகுதி செந்நிறத்தில் இருக்கும் 
 
               
            கட்டுப்படுத்தும் முறை: 
            
              - கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும் 
 
              - அஜாடிராக்டின் 5 W/W 200 மி.லி./எக்டர் 
 
              - பைபெந்திரின் 8 SC 500 மி.லி./எக்டர்
 
              - டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
 
              - எதியோன் 50 EC 500 மி.லி./எக்டர்
 
              - ஈடாக்சாஜோல் 10 SC 400 மி.லி./எக்டர்
 
              - ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
 
              - ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்
 
              - புரோபார்கைட் 57 EC 750 – 1250 மி.லி./எக்டர்
 
              - ஸ்பைரோமெசிபென் 22.9 SC 400 மி.லி./எக்டர்
 
              | 
             |