மஞ்சள்  கரையான: பாலிபேகோடேர்ஸோனிமஸ் லேட்டஸ் 
              
                - பல  வகையான பயிர்களை (தக்காளி, சின்கோனா, பருத்தி, பயிறு வகைகள், உருளைக் கிழங்கு, மிளகாய்)  தாக்குகின்றன.
 
               
              அறிகுறிகள்: 
              
                - இளம்  இலைகளில் முக்கியமாக நுனியில் உள்ள இரண்டு (அ) மூன்று இலைகள் மற்றும் மொட்டுக்களில்  காணப்படும்.
 
                - தாக்கப்பட்ட  இலைகள் சொரசொரப்பாகி, உடையும் நிலையில் சொறி போன்ற வரிகளுடன் காணப்படும்.
 
                - இலைகள்  கீழ் நோக்கி வளைதல்.
 
                - இடைக்கணுக்கள்  குட்டையாகின்றன.
 
                - கிளைகள்  – குட்டை வளர்ச்சியுடன், உருமாறி இருக்கும்.
 
               
              புச்சியின்  விபரம்: 
              
                - ஆண்  பூச்சிகள் சிறியதாக, வெள்ளையிலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.
 
                - பெண்  பூச்சிகள் மஞ்சள் நிறத்தில், ஆண் பூச்சியை விட பெரியதாக இருக்கும்.
 
                - மஞ்சள்  கரையான்கள் அதிக நடமாட்டத்துடன், வேகமாக நகரக்கூடியதும் ஆகும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - டைக்கோபால்  18கிகி 2மிலி/லிட்டர் (அ) எத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர்்  தெளித்தல்.
 
                - நனையும்  கந்தகம் 80wp  2கிராம்/லிட்டர்.  கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
 
                | 
            
              
                 | 
               
              
                இலைகள் கீழ் நோக்கி வளைதல்  | 
               
             
               
                
                
                 |