இளஞ்சிவப்புச் சிலந்தி: அக்கேள்பில்லா தியே 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - சிலந்தியின் தாக்கம் நுணியிலிருந்து  இரண்டு மூன்று இலைகள் மற்றும் இளம் தளிர்களில் அதிகமாக இருக்கும் 
 
                - இளந்தளிர்கள் தோல் போல் கடினமாகி பின்னர்  வாடிக் காணப்படும் 
 
                - இலைகள் அடிபுறமாக சுருண்டு காணப்படும் 
 
                - இடைக்கணுக்கள் குறுகிவிடும் 
 
                - செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும் 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - ஆண் சிலந்தி சிறியது, வெளிர் மஞ்சள்  நிறத்தில் இருக்கும் 
 
                - பெண் சிலந்தி மஞ்சளானது, ஆணை விட சிறியது 
 
               
               கட்டுப்படுத்தும் முறைகள்:  
              
                - கீழ்க்காணும்      ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும் 
 
               
              
                - எதியோன் 50 EC 2 மி.லி./லிட்டர் தண்ணீர்
 
                - அஜாடிராக்டின் 5 EC 200 மி.லி./எக்டர் 
 
                - டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
 
                - ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
 
                - ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்
 
                - ஃபுளுமைட் 20 SC அல்லது ஃபுளுபென்னஜைன் 20SC 400 – 500 மி.லி./எக்டர்
 
                - பாசோலோன் 35 EC 1028 மி.லி./எக்டர் 
 
                - புரோபார்கைட் 57 EC 750 - 1250 மி.லி./எக்டர் 
 
               
              
                - 1 லிட்டர் நீருக்கு 2      கிராம் நனையும கந்தகம் தெளிக்க வேண்டும்.
 
                | 
             |